சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 12


“ச்சே அவன் தான் கிஸ் கொடுக்குறானா அவன எட்டி மிதிக்காம நா என்ன கருமத்துக்கு மயங்கி நிக்குறேன்.. என்ன வெக்கம் கெட்ட பொண்ணுன்னு நெனச்சிருப்பான்..என்ற மானமே போச்சே.. இதான் அவன பழிவாங்குற லட்ச்சனமா? நா ஏன் அவன உசுப்பேத்திட்டு இருக்கேன்.. என்ன செய்ய வந்துட்டு என்ன செஞ்சிட்டு இருக்கேன் ஐயோ” தலையை சுவரில் முட்டி கொண்டு இருந்தாள் செந்தூரா.அவனை பழிவாங்க கல்யாணம் பண்ணி இப்பொழுது சும்மா இருப்பவனை அவளே சொரிந்து விட அவனோ அவளுக்கும் மேலே கேடியாக இருப்பான் போல உசுப்பேற்றும் அவளின் உணர்வோடே விளையாடி கொண்டிருந்தான். பழிவாங்குகிறேன் பேர்வழி என்று இந்த ஒரு வாரமாக அவனிடம் முத்தத்தை கணக்கு வழக்கு இல்லாமல் வாங்கி கொண்டிருக்கிறாள். சில சமயம் கிறங்கி நிற்பாள்.

பல சமயம் மயங்கி நிற்பாள். சில நேரம் அவனை மொத்துவாள். பல நேரம் அவனிடம் மாட்டி கொண்டாள்.அன்றும் அப்படி தான் அவனின் கார்டில் இருந்த காசிற்கு உலை வைத்து ஆன்லைனில் நிறைய பொருட்கள் வாங்கிருந்தாள். அவையனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வர தொடங்க முதலில் வந்தது இரவு உடை. அதும் எப்படி உடையா இல்லை நெகிலி பையா என்று பகுத்தறியவே முடியாத அளவுக்கு ஒன்று இருந்தது. அவள் இதனை ஆர்டர் செய்யவில்லை. மாற்றி வந்துள்ளது. காசு என்ன அவன் அப்பனா கொடுக்குறான் என்று புகராளிக்க போனவள் ஒரு நிமிடம் யோசித்தாள்.ஆணை பழிவாங்க எத்தனையோ வழியிருந்தும் மனைவிகள் கையாழ்வது மூன்று விஷங்களே. முதலாவது உணவில் கை வைப்பது.. இரண்டாவது பேசாமல் இருப்பது.கடைசி அஸ்திரம் பிரமாஸ்திரம் படுக்கை தள்ளி போடுவது. முதல் இரண்டில் சரிதான் போடி என்று இருக்கும் வீராப்பு மூன்றாவதில் நிலைப்பது இல்லை.கணவன் மனைவி இடையே அழகான புரிதல் இந்த தாம்பத்தியம்.ஆனால் செந்தூரா அதை வைத்து நீரனை உணர்ச்சி பிடியில் சிக்க வைக்க முடிவு செய்தாள்.அந்த நெகிலி பை ஆடையை அணிய நேரம் பார்த்து காத்திருந்தாள்.அன்றைய இரவு அந்த ஆடையை அணிந்து அவன் வரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள். எங்கே அறையில் கட்டிலில் அமர்ந்தால் உறங்கி விடுவோமோ என்ற பயத்தில் சோபாவில் அமர்ந்திருந்தாள்.

நேரம் நள்ளிரவை தொட்டது. கண்கள் சொக்க அப்படியே தூங்கி போனாள்.மழை வெளுத்து வாங்கியது.மின்சாரம் தடை பட்டது.. செந்தூரா அசந்து உறங்கி கொண்டிருந்தாள்.நெடு நேரம் கழித்தே வீட்டிற்கு வந்த நீரன் அங்கே அவளை பார்த்ததும் ஷாக் அடித்தார் போல் நின்று விட்டான். மேடு பள்ளங்கள் சாலையில் மட்டும் தான் இருக்குமா என்ன..அந்த கால பாணியில் கட்டப்பட்ட வீட்டின் மத்தியில் மேல் ஓடுகள் இல்லாமல் வெறும் கம்பிகள் கொண்டு திறப்பாக இருந்தது..ஃபோன் டார்ச்சின் உதவியுடன் உள்ளே பார்த்தவன் பார்வையில் அழகிய மனைவி விழுந்தாள். அவள் அருகில் சென்று பார்த்தான்.நன்றாக உறங்கி கொண்டிருந்தாள்.அடாமல் அசையாமல் அவளை தூக்கி அறையில் படுக்க வைக்க போனான். ஆனால் அவளோ தொடுகை உணர்ந்து எழுந்து அவன் கையிலிருந்து திமிறி தெறித்திருந்த மழை நீரில் கால் வைத்து வழுக்கி அவனையும் இழுத்து கொண்டு விழுந்தாள். இருவருமே மழையில் நனைய வானம் மின்னல் முழங்க குளிரில் நடுங்கியவள் தன்னை கவனிக்க மறந்து போனாள்.ஆனால் நீரனின் பாடு சொல்லில் அடங்காது. அவன் பார்வை சென்ற இடத்தை கவனித்த செந்தூரா அங்கிருந்து நகர அவளை நகர விடாமல் இழுத்து பிடித்தவன் அவள் கைகளை முறுக்கி முதுகு பின்னால் பிடித்து கொண்டு

“என்னங் அம்மணி சட்ட இது.. பிளாஸ்டிக் பைய எடுத்து போட்ருக்கீங்க.. உங்க அய்யன் அளவு இல்லனாலும் நம்மளுக்கும் கொஞ்சம் நிலம் தோப்பு தொறவு எல்லாம் உண்டு அம்மணி. இந்த நீரன் பொண்டாட்டி கட்டிக்க துணியில்லாம பைய கிழிச்சு போடருக்கானு வெளிய தெரிஞ்சா என்ற மான மருவாத என்னத்துக்காறது? “

“என்ன பிளாஸ்டிக் பையா.. இது லிங்கிரி டா””என்ன கருமமோ.. என்ற கண்ணுக்கு இது பிளாஸ்டிக் பை தான்.. ஆமா ஒரு ஆம்பள இருக்குற வூட்டுல இப்டி அரையும் குறையுமா திறியுரியே உனக்கு வெக்கமா இல்ல”

“அரையும் குறையுமா எப்டி வேணும்னாலும் நா இருப்பேன்.. நீ ஏன் என்ன பாக்குற.. உனக்கு என்ன பார்வை வேண்டி கிடக்கு..”

“பொண்டாட்டி செதுக்கி வைத்த சிலை மாதிரி இருந்தா புருசங்காரன் கண்ணு அவ பின்னாடி போக தான் செய்யும்..”அவளுக்கு வெட்கம் வந்தது கூடவே கோபமும் வந்தது. அவனிடமிருந்து  விலக திமிரினாள். அவன் பிடி இறுகிக் கொண்டே சென்றது. காலால் அவன் காலை மிதித்தாள்.”ராட்சசி” என்றவன் பிடியை விலக்கினான்..அவள் அவனை முறைத்து விட்டு அறைக்குள் சென்றாள். தாள் போட முயன்ற அவளை தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்தான் நீரன்.

“ஹேய் நீ எதுக்கு உள்ளார வர.. வெளியே போ”

“அம்மணி இது என்ற ரூமுங்க.. என்ற சட்ட எல்லாம் இங்கன தான் கெடக்கு.. அம்மணி கொஞ்சம் பெரிய மனசு வச்சிங்கனா மாத்து துணி எடுத்துக்கிட்டு வெளிய போயிருவேன்..”

“சரி சீக்கிரம் போயி தொல”இருட்டில் அவன் தேடி கொண்டிருக்கும் போதே போன் சார்ஜ் முடிந்திருந்தது.கும்மிருட்டில் அறைக்குள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தான். செந்தூரா மெழுகுவர்த்தி ஒன்றை எடுத்து பற்ற வைத்து அறைக்குள் வந்தாள்.  மாற்று உடைகளை எடுத்துக்கொண்ட நீரன் மஞ்சள் ஒளியில் மங்கையை கண்டான். அவனின் உணர்வுகள் பேயாட்டம் போட அவள் அருகில் வந்து அவளது முகத்தில் பார்வையைப் பதித்தான்.நீண்ட மூச்சை இழுத்து விட்டவன்

“நீ எதுக்கு இப்படி உடுப்பு போடுறணு  எனக்கு தெரியும்.. என்ற உணர்வோட வெளயாட தானே.. என்னோட உணர்வுகள அவ்ளோ சீப்பா நினைச்சியா..இல்ல கட்டுன பொண்டாட்டியே ஆனாலும் கண்ட்ரோல் இல்லாம அவ மேல பாஞ்சிருவேன்னு நினைச்சியா.. நான் ஒன்னு அரிச்சந்திரன் கிடையாது பொய் சொல்லாம இருக்க.. அதேசமயம்  எல்லா நேரத்திலேயே என்கிட்ட நீ உண்மயும் எதிர்பார்க்க முடியாது.. ஆனா இப்போ உன்கிட்ட ஒரு உண்மய சொல்லப் போறேன்..”அவன் முகத்தை அவள் குறுகுறுப்பாக பார்க்க

“உன்னை இப்படிப் பாக்கும்போது இப்பவே உன் புருஷனாயிடனும் அப்டினு தோணுது..நான் சொன்னதும் முட்ட கண்ண வச்சு என்ன முழிச்சு முழிச்சு பாக்குறியே..  அந்த கெண்டை மீனு கண்ணு ரெண்டுக்கும் ஆரஞ்சு மிட்டாய் முத்தம் கொடுக்க தோணுது..  வெள்ள கல்லு மூக்குத்தி போட்டிருக்குற மூக்குல காஃபி மிட்டாய் முத்தம் கொடுக்கனும்னு தோணுது..புடிச்சு கில்லி கொஞ்ச சொல்ற கன்னத்துல கேட்பேர்ரி முத்தம் கொடுக்க தோணுது.. என்ன சண்டைக்கு கூப்புட்டு முட்ட சொல்ற நெத்தியில வென்னிலா ஐஸ்ஸு முத்தம் கொடுக்க தோணுது.அப்றம் என்னோட உணர்வுகள அடங்கவே விடாத இந்த உதடுக்கு…. “அவள் மந்திரித்து விட்ட கோழி போல அவனைப் பார்த்துக் கொண்டிருக்க கையில் இருந்த மெழுகுவர்த்தியை வாங்கி பக்கத்தில் இருந்த மேஜையில் பொருந்தியவன் அவளின் கன்னங்களில் கையை வைத்து மெல்ல அவளை நோக்கிக் குனிந்து அவள் இதழ்களில் தன் இதழை பொருத்தினான்.தடைப்பட்ட மின்சாரம் திரும்பி விட்டது. இன்னும் அவர்களின் இதழ் யுத்தம் முடிவுக்கு வரவில்லை.

நீரனின் சூடான மூச்சு காற்றையும் அவனின் உடலில் உண்டாகும் மாறுதலையும் அவள் உணர தொடங்கினாள்.விலக சொல்லி மூளையும் அறிவுறுத்தியது.இருந்தும் மயங்கி நின்றாள். ஒரு கட்டத்தில் அவனே அவள் இதழுக்கு விடுதலை கொடுத்து அவன் உதடு அவள் உதடோடு உரசும் படி”என்ன பழிவாங்கிட்ட செர்ரி. இன்னைக்கு நீ ஜெயிச்சுட்ட.. ப்ளீஸ் என் உணர்வோட விளையாடாத.. என்னால தாங்க முடியல”நேராக சமையல் கட்டுக்கு சென்றவன் தண்ணீரை கொதிக்க வைத்தான்..சுட சுட ஆவி பறக்கும் தண்ணீரை டம்ளரில் ஊற்றி ஊதி ஊதி குடிக்க ஆரம்பித்தான்.அதனை அவனுக்குப் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் செந்தூரா. தன் உள்ளே எரியும் விரகத் தீயிற்கு வெந்நீரை அனுப்பி அணைக்க பார்த்தான். ஊதி ஊதி குடித்தாலும் சூடு உதடை சுடும் தானே.. உதடுகள் சிவந்து பயங்கரமாக இருக்க உடை மாற்றி சோபாவில் படுத்து விட்டான்.

நீரன் உறங்கியதும் அவன் உடடுகளுக்கு ஆயில் மென்ட் போட்டு விட்டாள் செந்தூரா. மனம் வலித்தது ஆனாலும் அவள் இதழ்கள் தானாக சிரித்து கொண்டது..அதை இப்பொழுது நினைத்து பார்த்தாள். அன்றிலிருந்து அவள் அவன் உணர்வுகளோடு விளையாடவில்லை. அதாவது அம்மாதிரி உணர்வுகளோடு. நீரனின் வீட்டை மாற்றி அமைத்தாள். மற்ற இரண்டு அறைகளில் அடைப்பட்டுக் கிடந்த பொருட்களை அள்ளி பரண் மேல் போட்டுவிட்டு ஒரு அறையை அவனுக்காக தயார்படுத்தினாள். இது தான் பழிவாங்கும் லட்ச்சனமா என்றால் அவளுக்கு தெரியவில்லை.இந்த ஒரு வாரத்தில் அவனுக்கு வித விதமாக சமைத்து வைத்தாள். அவன் சட்டைகளுக்கு ஐயர்ன் பண்ணி ஹெங்கரில் மாட்டி வைத்தாள். அன்றைய சுடுதண்ணீர் இரவுக்கு பின் அவளிடம் நீரன் பேசுவதை குறைத்து கொண்டான்.மறுநாளே அவளுக்கென ஒரு ஐ போன் புதிதாக வீடு வந்து சேர்ந்தது.

“உனக்கு என்ன பைத்தியமாடா.. அவளே உன்ன எப்ப போட்டு தள்ளலாம்னு பாக்குறா.. நீ என்னனா அவளுக்கு பாத்து பாத்து வாங்கி தந்துகிட்டு இருக்க. சாதாரண ஆண்ட்ராய்டு ஃபோன் பத்தாதா  ஐ போன் கேக்குதோ”

“மச்சான் அவ என்னடா தப்பு பண்ணா.. அவள என் சுயனலதுக்காக யூஸ் பண்றேன். அவ என்ன பழிவாங்குறேன்னு லவ் பண்றா மச்சான்.. அன்னிக்கு வித விதமா சமைச்சு வெச்சா. டவுட்டா பாத்துகிட்டே சாப்டேன்.. எல்லாமே நல்லா இருந்துச்சு கடைசியா பாயசம் வெச்சா.நா அத பாத்தோன சுதாகரிச்சு இருக்கணும். நாக்கு வெக்கங்கெட்டு போயி அத குடிச்சு ஒரே வைத்தால..”

“த்து கருமோ கருமோ”

“கக்கூஸ விட்டு வரவே இல்ல மச்சான்.. அங்கயே சுவத்துல சாஞ்சி தூங்கிட்டேன்.. அப்றம் அன்னைக்கு அவள யாரோ ஐயர்ன் பண்ண சொன்ன மாறி பண்ணி”

“சட்டய பொசுக்கி புட்டாளா”

“அதான் இல்ல மச்சான்..என் ஜட்டிக்கும் சேத்து ஐயர்ன் போட்டு அத ஓட்ட போட்டு புட்டா மச்சான்”

“ஆண்டவா.. உனக்கு என்னடா நா பாவம் பண்ணேன்.. வூட்ல எங்கப்பன் தொல்ல இங்க உன்ற தொல்ல..அவளுக்கு பழிவாங்க தெரியுமா இல்ல வெளாடுறாளா”

“அவ பழிதான் வாங்குறா மச்சான்.. என்கூட வாழ்ந்து என்ன கொல்ல போறேன்னு சொன்னாலே அப்டினா என்ன அர்த்தம் தெரியுமா.. என் கூட வாழ்ந்து ஒரு புள்ள வந்தோன நிஜமா என்ன கொல்ல போறான்னு அர்த்தம்.எப்டி போலீஸ் கிட்ட மாட்டிக்காம இருக்குறதுனு இப்ப யோசுச்சுட்டு இருக்கா..”

“என்னடா சொல்ற.. அவ கொல்லாட்டியும் நீயே சாவ தானடா போற.. அவ ஏன் வேல மெனகெட்டு பிளான் பண்றான்னு கேக்குறேன்”

“அவ கிட்டயே கேளு”

“அவ கெடக்கா.. நீ என்ன பண்ண போற”

“அவ கூட வாழ போறேன்..அவள பலிக்கொடுக்க எனக்கு மனசில்ல மச்சான்.. அதனால அவன் ஆசப்படி ஒரு புள்ளய கொடுத்துட்டு செத்துறலாம்னு இருக்கேன்”..

“மச்சான் அங்க”

“அவ பாவம்டா என்ன ரொம்பவே லவ் பண்றா.. நா எதுக்கு அவள கல்யாணம் பண்ணேனு தெரிஞ்சா என்ன பத்தி என்ன நினைப்பா.. என்கூட அதோட அவ இருக்கவே மாட்டா.. அப்டி அவ மனச உடைச்சு ஒரு வாழ்க்கய நா ஏன் வாழனும்.. அதான் அவ ஆசைப்படி வாழலாம்னு நெனைக்குறேன்”

“ஐயோ பின்னால மச்சான்.. உன்ற பொண்டாட்டி நிக்குறா”நீரன் திரும்பி பார்க்க அங்கே தென்னை மரத்தில் சாய்ந்து கொண்டு நீரனை தீர்க்கமாக பார்த்து கொண்டிருந்தாள் செந்தூரா..

“என்ன ஜமீனு ஏதோ சொந்த பிரச்சன போல.. நாட்டாம மவன் கூட டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க.. எங்க கிட்டயும் சொல்லலாம்.. ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு தீர்ப்பு சொல்ல முடியும்.. சொல்லுங்க என்ன பிரச்சனை உங்களுக்கு.. எதுக்கு என்ன கல்யாணம் பண்ணீங்க.. எதுக்கு எனக்கு புள்ளய கொடுத்துட்டு மண்டைய போட ரெடியா இருக்கீங்க”.. அவள் கேள்விகளை கேட்க அவன் பதிலின்றி நின்றான்.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்