சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 3


“டேய் மொக்க ஓடாதடா பரதேசி நாயே கையில அம்புட்ட தோல உரிச்சு போடுவேன்”தோழனின் பின்னால் ஓடினான் பதினாறு வயது நீரன். இப்பொழுது வெடவெடவென்று வளர தெரியாமல் வளர்ந்து நின்றாலும் உடலில் சதைகள் முறுக்கேறி இருந்தது. அப்பொழுது பதினாறு வயது பருவச் சிறுவன்.. கிள்ளி எடுக்க கூட அவன் உடலில் சதை இல்லை. என்பு தோல் போர்த்திய உடம்பு ஒன்று நடுவீதியில் தனது தோழனை துரத்தியப்படி ஓடி கொண்டிருந்தது.

“டேய் மொக்க ஒழுங்கு மருவாதியா நின்னுரு நானா புடிச்சேன் மாங்கா மரத்துல கட்டி வச்சு வெளாசி புடுவேன்”..

“வெளாசுவடா வெளாசுவ..நீதானடா அந்த ஒன்ற கண்ணன் மவக்காரிக்கு லவ் லெட்டரு என் கிட்ட கொடுத்து கொடுக்க சொன்ன.நண்பனுக்காக காதல் கிளியா தூது போயி லெட்டரு கொடுத்ததுக்கு என்னிய ஏன்டா வெரட்டி வெரட்டி அடிக்குற.. அடிக்குற கையில கட்ட முளைக்க எடுபட்ட பயல.. உன் கூட சகவாசம் வெச்சதே தப்புடா”

“நீ கிளியாடா கிழிஞ்சவாயா.. எந்த ஊர்லனாச்சும் கிளி வாயி நாறுதுன்னு கேள்வி பட்ருப்போமா.. ஆனா உன் ஊத்த வாயி என்னிக்குடா நாறமா இருந்துருக்கு.. கிளி கூட உன்னிய சோடி சேத்து பேசுன நாக்க அறுத்து புடுறேன்.. உன்னிய லெட்டரு கொடுக்க சொன்னது அவன் மவ பெருசுக்குடா.. நீ ஏன்டா சின்னதுக்கு கொடுத்த”இருவரும் மூச்சு வாங்க நடு ரோட்டில் நிற்க இருவருக்கும் இடையே பல அடி தூரம் இருந்தது.

“பெருசா அடேய் அது நமக்கு அக்காடா.. நம்ம விட நாலு வயசு மூப்பு.சின்னது தான் நம்ம ஈடு”

“உனக்கு அக்கானு சொல்லு ஏன்டா என்னயும் சேத்து சொல்ற..அக்காவோ ஆட்டு குட்டியோ அவள தான்டா நா லவ் பண்றேன்.அக்காக்காரிக்கு கொடுக்க வேண்டிய லெட்டர தங்கச்சிக்காரி கிட்ட கொடுத்து என் லவ்மீக வாழ்க்கைக்கு ஆப்பு அடிச்சிடியேடா அண்டங்காக்கா உன்னிய இன்னைக்கு”நீரன் சுற்றும் முற்றும் பார்த்தான் அடிக்க ஏதுவாக எதுவும் இல்லை. எதிர்வீட்டு திண்ணையில் ஒருவர் இளநீர் குடித்து கொண்டிருக்க வேகமாக அவரருகில் சென்றவன்

“யோவ் மாமா ஒத்த எளனியா ஒம்போது மணி நேரமாய்யா குடிப்ப.. வழுக்கைய கூட உறிஞ்சே எடுத்துட்ட போல”அவரின் இளநீரை இவன் படக்கென்று பிடிங்க

“அட பொசக்கட்ட பயலே ஒழுங்கு மறுவாதியா கொட்றா என் எளனிய.. நானே எம் பொஞ்சாதிக்கு தெரியாம சரக்க வாங்கி எளநில கலந்தடிச்சு குடிச்சிட்டு இருக்கேன்.. அது பொறுக்கலையாடா உனக்கு”

“அத்த இங்க வாயேன் சட்டுன்னு.. உன் புருஷன் எளனில சரக்க மிக்ஸ் பண்ணி தாக்குறாரு..தொட்டுக்க தான் சைடிஸ் இல்ல.. நீ வந்து கொஞ்சம் ஊறுகா கொடேன்” அதற்குள் அங்கு வந்திருந்த அவனின் அத்தை தனது கணவனை முறைத்துக்கொண்டே

“ஊறுகா தான இப்ப கொடுக்குறேன் பாரு.. ஏன்யா குடிக்காதா கோவிலுக்கு காப்பு கட்டிருக்கு நா வேண்டுதல் வெச்சிருக்கேனு எத்தன தடவ சொன்னேன். என்ன தகிரியம் இருந்தா எளனில கலந்து அதும் திண்ணையில ஒக்காந்தே குடிய போடுவ..இன்னியோட செத்தய்யா நீயு”அவர் விடாமல் குத்திய மூக்கில் சிவப்பு ஊறுகாய் உல்லாசமாக வடிய”பத்த வெச்சிடியே பரட்ட”என்ற தன் நண்பனை தாக்க இளநீர் கூடால் குறிப்பார்த்தான் நீரன்.குறி என்னவோ ராசுவை நோக்கி தான் சென்றது.குறுக்கில் வந்து வான்ட்டாக அந்த குறியை தனதாக்கிக் கொண்டாள் செந்தூரா.இளநீர் ஓடு நச் என்று அவள் மார்பில் மோதி கீழே விழுந்தது.

எதார்த்தமாக நடந்த இந்த விஷயத்தில் யாரை குற்றம் சொல்ல முடியும். நண்பனை குறி வைத்த நீரனையா? குறுக்கே வந்து குறியை தனதாக்கிக் கொண்ட செந்துராவையா? பண்ணிரெண்டு வயதான செந்தூரா இன்னும் சிறுமி தான்.ஆனாலும் அவளின் தந்தை அவர் அறிவுக்கு எட்டிய வரையில் குட் டச் பேட் டச் கற்றுக் கொடுத்திருக்க இப்பொழுது நீரன் செய்த காரியம் அவளுக்கு வெரி பேட் டச்சாக தோன்றியது.கையில்லாத கவுன் போட்டிருந்த பெரிய கவுண்டர் மகளை நெருங்கியவன்”ஸாரி பாப்பா அவன் மேல படவேண்டியது நீ குறுக்கால வரவும் உன் மேல பட்ருச்சு.. அடி பலமா வலிக்குதா” கையில் அடிபட்டால் தடவிக் கொடுப்பது போல் அவளின் கலங்கிய கண்களில் வேதனைப் பொறுக்காமல் அவளது நெஞ்சில் கை வைக்க போனவனை ஒரே தள்ளாக தள்ளியவள் அவளைத் தாக்கிய அதே இளநீர் கூட்டை எடுத்து அவன் மண்டையை குறிபார்த்து ஒரே போடாக போட்டாள்.நீரனின் மண்டை நீமோ மண்டை மாதிரி புடைத்து கொண்டது.

“அய்யயோ நீரா உன் மண்ட பூராகாயம்டா ஜோராதாக்கிப்பூட்டு போறாகவுண்டர் வூட்டு டோரா..”

“டேய் மச்சான் எப்டி எதுக மொன பூந்து வெளாடுது பாரேன் என் கவிதையில..”நண்பன் மண்டை வீங்கி கிடைக்கையில் தனது கவிதை புலமையில் கிறுக்கிறுத்து போய் நின்றான் ராசு.எட்டி அவன் பிட்டத்தில் ஒரு மிதி மிதித்தான் நீரன். அவன் பிஞ்சிலேயே பழுத்து காதல் கடிதம் எழுதினாலும் தவறான எந்த நோக்கத்திலும் உடன் பயிலும் பெண் பிள்ளைகளை பார்க்க மாட்டான். அவன் கண்களுக்கு செந்தூரா சிறுமியாக தெரிந்தாள்.ஒரு வேளை அடி பலமாக பட்டு விட்டதோ என்று அஞ்சியவன் அந்த நேரத்தில் எதையும் யோசியாமல் அவள் நெஞ்சில் கை வைக்க போக மண்டை புடைத்து ஜீ பூம்பா பூதம் போல ஆனான்.வீட்டிற்கு வந்த தன் மகனை கண்டு பதறிய ஜெமினி என்னவென்று கேட்க லவ் லெட்டரை மட்டும் ஒதுக்கி மற்றதை கூற அவன் மண்டைக்கு சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்து கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு ஜீப் புழுதி பறக்க வந்து நின்றது. வந்தது ஊர் தனக்காரர் தில்லைநாயகம் கவுண்டர் என கண்டதும் தன் மகனை மறைத்து நின்றார் ஜெமினி..வண்டியிலிருந்து இறங்கிய தில்லை நீரனை முறைத்து கொண்டே”யோவ் செமினி என்னய்யா புள்ள வளத்து வெச்சிருக்க பொருக்கி மாதிரி.. பொம்பள பொருக்கி தனம் உங்க ரத்தத்துல ஊறி போயி கெடக்கு. அந்த குணதால தானே உன் மவன் தறுதல இந்த சின்ன வயசுலயே இப்டி ஒரு வேலைய பாத்துருக்கான். என் மவள தொட போனானாம்.அந்த கைய ஒடச்சா தான் என் மனசே ஆறும்.”

“கவுண்டரே என்ன நீரு சின்ன பயட்ட போயி கைய  ஒடைப்பேன் கால ஒடைபேன்னுட்டு இருக்கீரு.ஏதோ வெளாட்டு வாக்குல சிநேகிதன் பய மேல எளனி கூட வீச போயி அது ஒம்ம மவ நெஞ்சுல அடிச்சிருக்கு. சின்ன புள்ள வலியில முகம் சொனங்கவும் பதறி போயி தேய்ச்சு விட கைய நீட்டிருக்கான். அதுக்கு ஒம்ம மவ செஞ்ச காரியத்த பாரும்.. எம்ம மவன் மண்டையில கொண்ட வர வெச்சிருக்கா.அப்ப அவ கைய நா ஒடைக்கவா”ஜெமினி கேட்க தில்லை நீரனை பார்த்தார்.வீட்டிற்கு ஓடி வந்த மகள் தன்னை நீரன் தவறாக தொட பார்த்தான் என்று தந்தையிடம் கூறி இருந்தாலே தவிர தான் திரும்ப அவனைத் தாக்கியதை அவள் கூறவே இல்லை. ஒரு தந்தையாக மகளின் கூற்றை மட்டுமே கேட்டு இங்கே அவசரப்பட்டு வாயை விட்ட தன் மடத்தனத்தை மனதிற்குள் எண்ணி தன்னை தானே காறித் துப்பிக் கொண்டு ஜெமினியிடம்

“என்ன மன்னிச்சிரு செமினி..அவ கண்ணு கலங்கி சொல்லவும் சரியா விசாரிக்கமா கெளம்பி வந்து உன்னயும் வாயிக்கு வந்த மாறி பேசிப்புட்டேன்.. மனசுல எதையும் வெச்சிக்காதய்யா.. நீரா ரொம்ப வலிக்குதா””இல்ல இனிக்குது..ஒம்ம மவ கிட்ட சொல்லும் ரெண்டு பேரு மல்லுக்கட்டும் போது குறுக்குள்ள போன அடி விழும்னு”தப்பு மகள் மீதிருக்க ஒன்றும் பேசாமல் கிளம்பி விட்டார்.அன்று ஆரம்பித்த இவர்கள் பிரச்சனை பார்க்கும் இடங்களில் எல்லாம் முட்டிக் கொள்ள ஆரம்பித்தது.நீரன் ஒதுங்கிச் சென்றாலும் அவள் இவனை தேடி வந்து வம்பிழுத்தாள்.வாய்ப்பேச்சு மெல்ல மெல்லமாக முற்றி ஒரு நாள் கைகலப்பில் வந்து முடிந்தது.தில்லை நாயகத்தின் மகள் என்பதால் அந்த ஊரின் சிறுவர் சிறுமிகள் கூட அவளுடன் விளையாடிற்கு கூட மல்லுக் கட்ட மாட்டார்கள்.அப்படிதான் சொல்லி அவர்களின் பெற்றோர் அவர்களை வளர்த்து வைத்தனர்.ஆனால் ஜெமினி அப்படி அல்ல நம் மீது தவறு இல்லாத போது நாம் யாருக்கும் அடிபணிய கூடாது என சிறுவயதிலிருந்தே தனது மகனுக்கு போதித்திருந்தார். அதுவுமில்லாமல் தாங்கள் ராஜ பரம்பரை தங்கள் முன் சேவை செய்ய பலர் கை கட்டி நிற்க வேண்டுமே தவிர நாம் யாரிடமும் கை கட்டி நிற்க கூடாது எனும் எண்ணம் அந்த ராஜ வம்சத்து ரத்தத்துக்கு உரிய பண்பாக அவரின் உடலில் ஓடும் ஒவ்வொரு குருதி செல்களிலும் நிறைந்திருந்தது.ஆதலால் நீரின் எப்பொழுதுமே செந்தூரவை கண்டால் ஒதுங்கி செல்ல மாட்டான். 

அதிலும் முதல் கோணல் முற்றும் கோணலாகிப் போனதில் இருந்து அவளை எங்கே பார்த்தாலும் முதலில் சிறுப்பிள்ளை என ஒதுங்கிப் போனவன் பின்பு அவளின் பேச்சிற்க்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தான்.அன்றும் சிவனே என்று ராசு விடும் மொக்கை போட்டுக் கொண்டு இருந்தவனை வேண்டுமென்றே சீண்டினாள் செந்தூரா. அவள் பேசுவதை காதில் வாங்காமல் நண்பனுடன் சிரித்து கும்மாளம் அடித்துக் கொண்டு இருந்தவனை கண்டு அவளின் அகம்பாவம் தலை எடுத்து ஆடியது.  வேண்டுமென்றே நீரனின் ராஜ பரம்பரை பற்றி அவள் அவதூறாகப் பேச தன் வம்சத்தின் மானம் அங்கே கப்பல் ஏறுவதை கேட்ட நீரன் பொங்கி எழுந்து அவளின் முன்பு வந்து நின்றான்.அந்த ஊரிலே இவள் மட்டுமே டவுனில் இருக்கும் ஆங்கிலப் பள்ளியில் பயில்பவள். மற்ற மாணவர்கள் அனைவரும் கிராமத்து பள்ளியில் பயின்று ஓரளவு ஆங்கிலத்தில் தங்களது அறிவை வளர்த்துக்கொள்ள இவளோ ஆதி முதல் ஆங்கிலப் பள்ளியில் பயின்றதால் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாள். பள்ளி முடிந்ததும் தன் வயது பிள்ளைகள் உடன் விளையாட வருவாள் செந்தூரா.தன் முன்னால் நின்ற நீரனுக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்று. எனவே அவனை பார்த்து ஆங்கிலத்தில் எதையோ கூறி சிரிக்க அவள் பேசுவது அரைகுறையாக புரிந்தாலும் திருப்பி பதில் பேச தெரியாமால் மலைத்து நின்றான் அவன்.அவளோ மேலும் மேலும் பேசி அவனை பார்த்து எகத்தாளமாக சிரிக்க அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

ஓங்கி அவள் தலையில் கொட்டி விட்டான். அவன் பதிலுக்கு பதில் பேசுவான் என எண்ணிக் கொண்டிருந்த அவள் கையை நீட்டவும் அவன் முடியை பிடித்து மாவாட்டி விட்டாள்.அவள் பெண் இவன் ஆண் என்பதை எல்லாம் மறந்து இருவரும் மண்ணில் உருண்டு புரண்டு சண்டை இட ராசு நீரனை பிடித்திலுக்க செந்தூராவை பெண் பிள்ளைகள் பிடித்து இழுத்தனர்.எழுந்து நின்ற நீரனை கோபம் தாளாமல் பிடித்து தள்ளிவிட்டாள் செந்தூரா. தள்ளாடி நின்றவன் அவளைப் பிடித்து ஒரே தள்ளாக தள்ள கீழே விழுந்தாள். அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்த அவனை இறுக்கி பிடித்துக்கொண்டு வசைமாரி பொழிந்து அங்கிருந்து இழுத்துச் சென்றான் ராசு.செந்தூரா நீரன் மீது கோபத்துடன் தன் வீட்டிற்கு சென்றாள். இரவில் கண்ணாடி முன் நின்று தன் கழுத்தில் இருந்த நக கீறல்களை பார்த்துக் கொண்டிருந்தான் நீரன் .

பதினாறு வயது டீனேஜ் பருவத்தில் நிற்கும் நீரனிற்கு தன்னை எப்பொழுதும் வம்பிழுக்கும் செந்தூராவை கண்டாலே கோபமாக வந்தது. நகக்கீறல்களின் வலி கழுத்தில் விட்டு விட்டு கடுக்க இதே மாறி அவளையும் கீறி வெச்சாதான் என் மனசு ஆறும் என வேகமாக அவள் வீடு நோக்கிச் சென்றவன் சுவர் ஏறி குதித்து அந்த வீட்டின் பின் பக்கத்திற்கு சென்றான். அங்கே அவன் தேடி வந்தவள் கிணற்றடி சுவரில் சாய்ந்து நிலாவைப் பார்த்து கண்ணீர் குரலில் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்..”அம்மா ஏன் என்ன விட்டு போன.. என்ன பெக்கறதுக்கு எத்தன கோவில் ஏறி இறங்கிருப்ப.எத்தன வேண்டுதல் வெச்சிருப்ப. அப்டி கஷ்டப்பட்டு பெத்த என்ன தூக்கி வளக்காம ஏன் அவ்ளோ அவசரமா செத்து போன..உன்ன நா ரொம்ப மிஸ் பண்றேன். உனக்கு தெரியுமா நா வயசுக்கு வந்துட்டேன். உன்கிட்ட தான் மொத சொல்றேன். இந்த கிணத்தடி உனக்கு ரொம்ப புடிச்ச இடம்னு டேடி சொல்லுவாரு. எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது. பயமா இருக்கு. நீ கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது.நீ வரியா ஒரே ஒரு வாட்டி ப்ளீஸ் வாயேன்மா”பேசிக்கொண்டே அவள் கிணற்றடி சுவரில் சாய்ந்து உறங்கிப் போக அவள் பேசியதைக் கேட்டவனுக்கு மனம் கனத்துப் போனது.

ஆண் பிள்ளையாகிய அவனுக்கே தாய் இல்லாத நிமிடங்கள் வலியை கொடுக்க ஒரு சிறுமி பெண்ணாக மலரும் இந்த நேரத்தில் ஓரளவுக்கு அவளின் மனப் போராட்டங்களை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.இந்நேரம் பெண்களுக்கு இயற்கையாக வரும் பயமும் பதட்டமும் அன்னை அருகில் இருந்தால் அவரின் கவனிப்பில் அடங்கி போகும். அந்த பாக்கியம் இல்லாதவர்கள் தன்னைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டியதாகி போகிறது.செந்தூரா வலியின் தாக்கத்தில் நன்றாக உறங்கி விட என்ன நினைத்தானோ அவளருகே சத்தமில்லாமல் வந்தவன் அவளை தன் மடியில் சாய்த்து தலை கோதி தட்டிக் கொடுக்க அம்மா வந்துட்டியா என்று அவளின் இதழ்கள் மெல்ல முழங்கியது.சிறிது நேரம் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன் குளிர் காற்று வீச அவளை கிணற்றடி சுவரில் சாய்த்து வைத்து விட்டு அங்கிருந்த கல்லை எடுத்து கண்ணாடியை குறிபார்த்து அடித்து உடைக்க சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து ஆட்கள் ஓடி வந்தார்கள். அவர்கள் வருவதற்குள் சுவர் ஏறி குதித்து ஓடியே விட்டான். அந்த நாட்களுக்கு பிறகு அவன் செந்தூரவை பார்ப்பது அரிதாகி போனது.பள்ளி விட்டால் வீடு வீடு விட்டால் பள்ளி என தன் வட்டத்தை குறுக்கி கொண்டாள் செந்தூரா. அதன் தாக்கம் பெரிதாக அவனிடம் இல்லாததால் அவனும் கல்லூரிப் படிப்பிற்கு பட்டணம் சென்றான்.மேலும் இரண்டு வருடங்கள் கழித்து தன் இருபது வயதில் மீண்டும் செந்தூரவை சந்தித்தான் பதினாறு வயது குமரியாக.திமிர் அகங்காரம் கோபம் முரட்டு தனம் எல்லாமே கூடிருக்க அந்த வயதிற்கே உரிய அழகுடன் மிளிர்ந்தாள் செந்தூரா. அவளை பார்த்தானே தவிர அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.அவனுண்டு அவன் வேலையுண்டுன்னு எப்பொழுதும் அவனின் பொழுதுகள் ஊரில் இருக்கும் வரை சந்தோஷமாக பறந்தன.

ஒருநாள் தனது தோழிகளுடன் ஆற்றிற்கு குளிக்கச் சென்றவள் வரும் வழியில் நீரனின் தோட்டத்தைப் கண்டாள்.அந்த தோட்டத்தை தாண்டி தான் செல்ல வேண்டும்.அந்த ஊரிலே நீரனின் தோட்டத்தில் தான் காசா வகை மாம்பழ மரங்கள் இருந்தன.உள்ளங்கை அளவை விட சிறியதாக கரும்பச்சை நிறத்தில் இருக்கும் அந்த மாம்பழங்கள் அபரிமிதமான சுவை கொடுக்க கூடியவை.ஒரு கிளையில் கொத்தாக ஐம்பது பழங்கள் தொங்கினால் மரம் முழுக்க எவ்வளவு பழங்கள் இருக்குமென எண்ணி பாருங்கள்.பெரும்பாலும் யாரும் காசா வகை மரங்களை நட மாட்டார்கள்.விதைத்து சில வருடங்கள் கழித்து தாமதமாக கனி தருவதாலும் மிகுந்த நார் சத்து கொண்ட பழத்தை மக்கள் அதிகம் விரும்பாததாலும் சில்லறையாக அதை விற்க முடியாமல் போவதாலும் இதனை பத்தோடு பதினோன்றாக வந்திருந்தனர்.கொத்து கொத்தாக தொங்கும் பழத்தினை கண்ட செந்தூரா அதை பறிக்க தன் தோழிகளை அழைத்தாள்.தோழிகள் நாங்கள் வரவில்லை நீரன் தோட்டத்தில் பேய் இருப்பதாக வதந்தி உண்டு நீயும் வந்து விடு என அவளையும் அழைக்க இவர்கள் பேச்சைக் கேட்பவளா அவள். அவள் மட்டுமே தோட்டதிற்குள் நுழைந்து பழங்களை பறிக்க பின்னால் யாரோ சிரிக்கும் சத்தம். ஆளில்லாத தோட்டத்தில் யார் சிரிப்பார்கள். திரும்பி பார்த்தால் அங்கே யாரும் இல்லை.தனது பிரம்மையாக இருக்கும் என பழங்களை சேகரிக்க மீண்டும் அதே சிரிப்பு சத்தம். கண்களை கூராக்கி அங்கே யாராவது உள்ளார்களா என கூர்ந்து நோக்கினாள். அவளின் போதாத நேரம் காற்றும் கூட ஒரு மாதிரி அடிக்க பழத்தை சேகரித்தது போதும் நடைய கட்டிவிடலாம் என வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தவளின் சுடிதார் துப்பட்டாவை ஒரு கை பிடித்திலுக்க வேகமாக திரும்பினால் அங்கே நீரன்.

“ஹேய் திருடி எதுக்குடி எம்பூட்டு தோட்டதுல களவாண்டு போற”

“திருடி கிறுடின்னு சொன்ன பல்ல ஒடச்சிருவேன். நீதான் பேய் மாறி சிரிச்சு என்ன பயம் காட்டுனியா. அறிவு இல்ல பொட்டப்புள்ள தனியா இருக்கும் போது இது என்ன கேனத்தனமான வெளாட்டு.மொத என் ஷால விடு”

“பொட்டப்புள்ள ஆரு நீயு.. போண்டா புள்ளன்னு சொல்லு சரியாயிருக்கும். உஙகப்பன் பாழும் நெய்யும் ஊத்தி வளக்குறான் போல.கண்டதயும் தின்னு உருண்டயா இருக்க. தின்னு தின்னு மூள அடைச்சுகிச்சி போல அதேன் எம்பூட்டு தோட்டத்துல நின்னு எனக்கே அறிவிருக்கானு கேக்குற”

“எங்கப்பாவ அவன் இவன்னு பேசாத. பெரிய தோட்டம் பத்தே ஏக்கரு என்னமோ பத்து லட்ச்ச ஏக்கரு மாறி எகத்தாலம் பேசுற. இந்த மாங்காவுக்கு தானே இவ்ளோ பேசுற பெரிய பொல்லாத பொடலங்கா மங்கா”என்றவள் பறித்த மாங்காய்களை கீழே போட்டு விட்டு ஒன்றை எடுத்து வேண்டுமென்றே காறி துப்பி காலில் போட்டு மிதிக்க நீரனிற்கு வந்த வெறிக்கு ஒங்கி ஒன்று பளாரென்று விட்டான்.அவன் தன்னை அடித்ததை தாங்கி கொள்ள முடியாதவள் அவனை அடிக்க கை ஓங்க அதனை லாவகமாக பிடித்து தடுத்து

“ஏன்டி எம்புட்டு நெஞ்சு தகிரியம் இருந்தா எம்பூட்டு தோட்டத்துல காய்ச்ச மாங்காவ காறி துப்புவ..பணக்காரின்னு திமுரு அடங்காப்பிடாரி.அடுத்தவங்க ஒழைப்புனா அவ்ளோ கேவலமா இருக்கோ. உங்கப்பன் சேத்த சொத்தாடி இது. எங்கப்பன் வூட்டு சொத்துடி என் சொத்து. எங்க ஒழைப்புல விளைச்சல கேவலப்படுத்துன உன்ன சும்மா வுடு மாட்டேன்டி”அவள் இதழ் மேலயே தன் கரத்தால் பட் பட்டென்று அடித்தான் நீரன். தடுக்க முயன்றும் முடியாமல் அவனிடம் நன்றாக சிக்கி கொள்ள அடித்து அடித்தே உதடு கிழிந்து ரத்தம் சொட்ட அப்பொழுதும் அழாமல் அவனை குரூரமாக முறைத்து அவனையே பார்க்க என்ன நினைத்தானோ அவளை விட்டு விட்டான்.”ஏலேய் என்னய அடிச்சிட்டல உன்ன என்ன பண்றேன் பாருடா”அவள் அங்கிருந்து வேகமாக அவள் வீட்டை அடைவதற்குள் நீரனின் தந்தை ஜெமினியின் மரண செய்தி அவளை அடைந்தது.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்