சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 5


“மச்சான் இப்ப என்ன குடி முழுகி போச்சுன்னு உக்காந்துருக்க.. அதான் அந்த ராங்கி கிட்ட பேசி போட்டு வந்துட்டல.. பொறவு என்னடா”

“டேய் மொக்க அவ கிட்ட பேசி போட்டு வந்து ஒரு வாரம் ஆவ போது. இன்னும் எந்த ரியாஷனும் காணும். எனக்கு என்னமோ படபடன்னு வருது. அவ என்ன சொல்லுவாளோனு திக்கு திக்குன்னு நெஞ்சு அடிச்சிக்குது மச்சான்”

“அடிச்சிக்காம என்ன பண்ணும்..அவ ஒரு பொம்பள ஹல்க்கு.அவளே உன்ற மேல பிரியப்பட்டு லவ் பண்றேன்னு நின்னா. நீ பெரிய மகாராசா மாறி அவள கண்ட மேனிக்கு பேசி   தொறத்தி புட்ட.அதும் பேச்சாடா பேசுன, கொஞ்ச நஞ்ச பேச்சா அது.. அன்னிக்கு வயித்த கலக்குதுன்னு சொல்லிட்டு கம்மா பக்குட்டு ஓடிருந்தா உனக்கு இந்த நெலம வந்துருக்குமா..சொல்லுடா வந்துருக்குமா”

“ஏன்றா நீயும் புரியாத முட்டாப் பய மாறில பேசிட்டு போற.என்ற நெலம தெரிஞ்சுமா மச்சான் இப்டி பேசுற.நா என்னமோ அவள ஆசப்பட்டு தொறத்தி வுட்ட மாறி, ஒவ்வொரு நாளும் அன்னைக்கு பேசுன பேச்சுக்கு உள்ள கெடந்து மறுக்கிகிட்டு கெடக்கேன்டா”

“நீ மருகி போறியோ மருகையா ஆவுறியோ.. மைய வெச்சு ஆட்டயில அந்த பாஜரிய கோர்த்து விட்டுட்ட.என்ன செய்வியோ ஏது செய்வியோ சுருக்கா அவள கண்ணாலம் கட்டி கிட்டு செய்ய வேண்டியத செய்யுடா.. என் உசுரு வேற உன் கையிலதான் இருக்கு மச்சான். அத அனாமத்தா காலுல போட்டு நசுக்கிடாத”

“தெரியாதா எனக்கு, ஓயாம நீ சங்கூதனுமா?”

“தேவ தான்டா எனக்கு இந்த பேச்செல்லாம்.. அவ ஆத்துல போட்ட கல்லு கணக்கா கம்முனு கெடக்கா.. மையி சரியில்லயோ மச்சான்.உங்கப்பன் கொடுத்த டீடெயில்ஸு தப்போ”

“மூடு அதெல்லாம் சரியாத்தேன் செஞ்சிருக்கேன்.. நீயே பாரு எப்டி கிளி பறந்து வந்து மாமன் தோளுல ஒக்காருதுனு”..

“ம்க்கும் மாமன் தோளுல ஒக்காராது.வேணும்னா மாமனுக்கு கஞ்சி கிஞ்சி ஊத்தும்..”

நீரன் முறைப்பை பொருட்படுத்தாமல் இளநீரை வெட்டினான் ராசு.

“அம்மணி”

“என்ன டேடி ஏன் ரெஸ்ட் எடுக்காம நடந்துக் கிட்டு இருக்கீங்க.. டாக்டரு உங்கள ஃபுல் ரெஸ்ட்ல இருக்க சொன்னாரு.. நீங்க என்னன்னா வீட்டுக்குள்ளேயே நட பழகிட்டு இருக்கீங்க.. ஒழுங்கா இப்ப போய் படுக்கிறீங்க.நீங்க நடக்கிறத பாத்தேன் காலு ரெண்டயும் ஒடச்சி ஒரேடியா படுக்க வெச்சிருவேன்.. ஏன் மாமா குத்து கல்லு மாதிரி எங்க அப்பன் பக்கத்திலேயே எந்நேரமும் திரி்யுறிங்களே நீங்களாவது ஒரு வார்த்தை அவரு கிட்ட சொல்லக்கூடாதா..”

“ம்க்கும் நா சொல்லி உங்க அப்பா  கேட்டுட்டாலும்..அட என்னங்க அம்மணி நீங்க..பெரிய கவுண்டர் என்னிக்கு அடுத்தவங்க பேச்ச கேட்டு இருக்காரு.. மனுஷன் பயப்படுறதே உனக்கு தான் கண்ணு.. நல்லா கேளு உங்கப்பாவ”செந்தூரா தன் தந்தை தில்லையை முறைக்க மகளின் முறைப்பை பார்த்து அவருக்கு கேட்க வந்த வார்த்தை தொண்டைக்குழியில் சிக்கி கொண்டது. இந்த ஊரையே அவர் தன் சுண்டு விரலில் கட்டி ஆண்டால் அவரை தன் ஒற்றைப் பார்வையில் கட்டி வைத்திருந்தாள் மகள்.

“என்ன டேடி என்ற கிட்ட ஏதாச்சும் சொல்லனுமா”

“ஆமாங் கண்ணு.. அன்னிக்கு உன்ற கண்ணாலத்த பத்தி பேசுனேன்ல.. நீ கூட பொரவு சொல்றேன்னு சொன்னியே.நானும் புள்ள இப்ப சொல்லும் அப்ரம் சொல்லும்னு காத்துருந்தா நீ சொல்லவே இல்ல கண்ணு..பையன் நீ சொல்றவனா இருக்கணும்னு சொன்னியே ஆரு கண்ணு பையன்..சாதி சனம் அங்காளி பங்காளிங்க பத்தியெல்லாம் நீ எதுவும் நெனைக்காத. மக்கா மனுஷனுங்க வேணும்தான்.ஆனா இந்த அப்பனுக்கு உன்ற சந்தோசம் தான் முக்கியம் கண்ணு.. சொல்லுடா பையன் ஆரு உள்ளூரா அசலூரா”தந்தை தன் மேல் வைத்திருக்கும் பாசத்தை எண்ணி உள்ளே பூரித்துப் போனாள் செந்தூரா.

“டேடி பையன் உள்ளூரு தான்.. உங்க எல்லோருக்கும் நல்லாவே தெரியும்”

“ஆரு கண்ணு.. நமக்கு நல்லா தெரிஞ்சவங்க”தில்லையும் குகனும் ஒரே போல் வினவ “அது நீரன் டேடி..”

“நீரானா ஆருடா கண்ணு அது”தில்லைக்கு சட்டென்று நீரனின் பெயர் பிடிப்படவில்லை.

“மாமா நீரன தெரியலையா உங்களுக்கு.. நம்ம ஜமீன் மவன் மாமா”

“ஆரு நம்ம செமினி மவன் வளர தெரியாம வளந்து நிப்பானே அவனா”

“ஆமா மாமா..கண்ணு நீ ஒன்னும் வெளயாட்டுக்கு சொல்லலையே.. மாமா ஏன் கேக்குறேன்னா உனக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தமாச்சே..அதான் எப்படி அவன கட்டிக்க சம்மதிச்சன்னு கேட்குேன்..”

“மாமா எனக்கு அவன தா புடிச்சிருக்கு.. எனக்கு கல்யாணம் ஆனா அது அவன் கூட தான்..பையன் ஆருன்னு கேட்டுட்டு இருந்தீங்க..இப்ப பையன பத்தி சொல்லிட்டேன். இதுக்கு மேல ஒம்ம இஷ்டம்”செந்தூரா ஒருவழியாக தன் கல்யாணத்திற்கு சம்மதம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.பாவம் தில்லை தலை சுற்றி அமர்ந்து விட்டார். ஒரே ஊர்க்காரர்களாக இருந்த போதிலே செந்தூரவுக்கும் நீரனுக்கும் ஆகாது. இதில் கல்யாணம் செய்து வைத்தால் மகள் நிலை? அதைவிட நீரன் நிலை?எது எப்படி இருந்தாலும் இந்த கல்யாணத்தை நடத்தியே ஆவதென முடிவெடுத்தார் தில்லை. கொஞ்சம் தாமதமானாலும் மகள் ஒரே போடாக நான் எப்பொழுது திருமணத்திற்கு சம்மதம் கூறினேன் என்று பேச்சை மாற்றி விடுவாள், அதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளம் உண்டு.மருத்துவர் தனது உடலுக்கு கட்டாய ஓய்வு வேண்டும் எனக் கூறியிருக்க அதை அனைத்தையும் தூக்கி கிடப்பில் போட்டவர் மச்சானுடன் நீரனை காண சென்றார். மாந்தோப்பில் தேடி பார்த்தார் அங்கே அவனை காணவில்லை. எனவே அவன் இப்பொழுது அவனது தென்னந்தோப்பில் இருப்பான் என்று ஒரு கணிப்பில் அங்கே வந்து பார்க்க நீரன் அங்கே தான் இருந்தான்.

ராசுவிடம் காய் கணக்கை பற்றி பேசிக் கொண்டிருந்தான்.”மச்சான் அங்கன பாரேன். பொம்பள ஹல்க் அப்பன் வாரான்.. இந்தாளு படுத்த படுக்கையா இருக்கான்னு தகவல் வந்துச்சே ஒருவேள வதந்தியோ..எப்டி பெருசு விசுக்கு விசுக்குன்னு நடந்து வருது பாரேன்..”

“அந்தாளு கிட்ட வந்துட்டான் அடக்கி வாசி..”நீரன் மெல்லிய குரலில் ராசுவை கண்டிக்க அதற்குள் அருகே நெருங்கி இருந்தனர் தில்லையும் குகனும்.அவர்கள் எதற்கு வருகிறார்கள் என்று குத்து மதிப்பாக யூகித்து வைத்திருந்தான்.தில்லையும் குகனும் அருகே வந்ததும்

“வாங்க கவுண்டரே என்ன எம்மூட்டு தோட்டத்து பக்கம் ஒம்ம காத்து வீசுது..ஏதேனும் முக்கியமான விஷயங்களா..ஏலேய் ராசு ரெண்டு எளனி வெட்றா”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்பா.. உன்ற கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தோம்..”

“என்ன விஷயமுங்க..”தெரிந்து கொண்டே தெரியாதவன் போல வினவினான்.

“அது எனக்கு சுத்தி வளச்சு பேசி பழக்கமிள்ள நீரா. நேரடியா விஷயத்துக்கு வாரேன்.. என்ற மவ உன்ற மேல ஆசப்படுது.. கட்டுனா உன்னிய தான் கட்டனோம்னு சொல்லுது.. நீ என்னப்பா சொல்ற”ஒரே போடாக போட்டார் தில்லை.மனதுக்குள் சிரித்துக் கொண்டவன் வெளியே

“நா அந்த எண்ணத்துல ஒம்ம மவள பாக்களிங்க.அம்மணிக்கு ஏன் என்ற மேல இப்டி ஆச வந்துச்சுன்னு எனக்கு தெரியலிங்க..”

“அயோ நீரா நீ எங்க புள்ள மனச கழச்சிபோட்டன்னு நாங்க சொல்ல வரல்லப்பு..”அவசரமாக இடைப்புகுந்தார் குகன்.

“அது இல்லிங்க”

“நீரா நீ இப்பவே எதுவும் சொல்லணும்னு இல்ல.. பொறுமையா யோசிச்சு சொல்லு. ஆனா என்ற மவ ஆசப்பட்டது நடக்கலைன்னா வேற எதுவெணும்னாலும் நடக்கும் பாத்து சூதனமா நாலயும் யோசிச்சு சொல்லுப்பா” நீரனின் இழுவையை கண்டு பதறிய தில்லை எங்கே அவன் மறுத்து விடுவானோ என்ற பயத்தில் அவனுக்கு யோசிக்க அவகாசம் கொடுத்து அதோடு மறைமுகமாக மிரட்டல் ஒன்றையும் விடுத்து குகனை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். அவர்கள் தலை மறைந்ததும்

“ஆஹா அச்சடா என்ன நடிப்புடா சாமி..எப்டி எப்டி நீ அந்த எண்ணத்துல அந்த புள்ளய பாக்கலையா.”இந்த நேரம் இளநீர் ஒன்று தானாக மரத்திலிருந்து விழுந்தது..

“ஆத்தாடி இது யாரு பாத்த ஜோலி.பாத்தியாடா நீ சொன்னது எளனிக்கே பொறுக்கல.. அந்தாளு தான் கெஞ்சுறான்ல சரிங்க கவுண்டரேனு மண்டைய ஆட்றத்துக்கு என்னடா கேடு”

“மொக்க மண்டைய ஆட்டி நா ரெடி நீங்க ரெடியானு பாட சொல்லுரியோ.. அந்தாள பாத்தியா எப்படி பம்பிகிட்டு வந்து பேசுனான்னு.. ஏன்னா அவன் மவ ஆசைப்பட்ருச்சாம்..ஊர்ல பெரிய கொம்பன்னு நெனப்பு. ஒரு ரெண்டு நாளு மண்ட காஞ்சு சுத்தட்டும். பொறவு சொல்லுறேன் என் சம்மதத்த”..

“இது ஆவும்னு நீ நெனைக்குற””ஓம் மையாய நமஹ”நீரனின் மர்ம புன்னகை ராசுவிடம் பிரதிபலித்தது.செந்தூரா தானாக ஏதும் கேட்காமல் தந்தை சொல்வாரென்று பார்க்க அவரோ மகள் வரும் முன்னே தலையோடு போர்த்தி படுத்து விட்டார்.குகனை ஆளையே காணவில்லை. நீரன் இடக்கு முடக்காக ஏதோ பேசியுள்ளான் என்பதை சரியாக கணித்திருந்தாள். அவன் வந்து சென்ற பிறகு அவனை பற்றி யோசித்து பார்த்தாள். முதல் காதல் முயன்றாலும் மறையாமல் அவளுள் வாழ்ந்து கொண்டு இருந்தது. நீரனை பற்றி நன்கரிந்தவள் அன்றைய அவன் பேச்சிற்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு விஷயம் இருக்குமென நம்பினாள்.இருந்தாலும் அவன் தன்னிடம் பேசியதற்கு அவனுக்கு தண்டனை கொடுக்காமல் விட அவளுக்கு மனமில்லை.யாரோ ஒருவனை கட்டிக்கொள்ள அவள் மனம் இடம் தரவில்லை. பிடிக்கிறதோ இல்லையோ நீரனை திருமணம் செய்தே ஆக வேண்டுமென அவளுள் ஒரு முடிவே உண்டானது.மறுநாளும் மகளிடம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த தந்தையை சரியாக பிடித்துக்கொண்டால் மகள்.

“டேடி என் என்கிட்டயே மறைஞ்சு வெளாடுரிங்க.. என்ன ஆச்சு அவன போய் பார்த்தீங்களா?இந்த விஷயத்த பேசினீங்களா?என்ன சொன்னான்? சம்மந்தம்னு சொல்லி நிறைய எதிர்பார்க்குறானா? ப்ச் ஏன் இப்பிடி கல்ல முழுங்குன மாதிரி நிக்கிறீங்க.. என்னதான் ஆச்சு சொல்லி தொலைங்க” பட படவென அவள் பொரிந்து கொட்டியவுடன்

“கண்ணு அப்பா சொல்றதக் கோவப்படாம கேளுடா கண்ணு..மாப்ளய போயி பார்த்தோம்.எல்லா விவரத்தயும் பேசி போட்டு வந்திருக்கோம்.அவரும் நாலயும் அலசி பாத்து முடிவு பண்ண நேரம் எடுக்கும்ல.”

“அவன் என்ன சொன்னான்””இல்லியே மாப்ள ஒன்னும் சொல்லலையே”

“அவன் என்ன சொன்னான்” அவள் கத்திய கத்தலில் அந்த வீட்டில் வேலை செய்யும் அனைவரும் தலைதெறிக்க ஓடி வந்து மறைவிலிருந்து அங்கே நடப்பதை கவனித்தனர். தில்லைக்கே ஒரு நிமிடம் மூச்சு நின்று பின் வந்தது. நீரனை சந்திக்கச் சென்ற பொழுது நடந்த விஷயங்களை மகளிடம் தெரிவித்தார்.

“அங்க என்கிட்ட சவால் விட்டு போட்டு இங்கன வந்து நாடகமடிருக்க.. உனக்கு இருக்குடா”.. எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள் செந்தூரா.நீரன் கூறியபடி இரண்டு நாளில் தில்லையை சந்தித்து தன் முடிவைத் தெரிவித்தான். மகள் விருப்பபடி திருமணம் நடந்தேற போவதில் அவ்வளவு மகிழ்ச்சி அவருக்கு. செந்தூராவிடம் விஷயத்தை பகிர்ந்தவர் அடுத்த இரு தினங்களில் ஊரைக்கூட்டி நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்தார். தில்லையின் வீட்டை அலங்காரங்களும் வண்ண விளக்குகளும் தோரணங்களும் அலங்கரித்தன.நிச்சயத்தை ஒரு விழாவாக ஏற்பாடு செய்திருந்தார் அவர்.

ஊரே இந்த எதிர்பாராத நிச்சயத்தை கேட்டு வாய் பிளந்து நின்றது.அந்த ஊரில் ஹாட் டாபிக்காக நீரன் செந்தூரா நிச்சயம் பேசப்பட்டது.சிலர் கண்டன்ட் கிடைக்காமல் லைவ்வில் இதை ஒரு விஷயமாக எடுத்து பேசினர். இப்படியாக இரண்டே நாளில் நீரன் செந்தூரா இருவரும் வைரலாக பேசப்படும் ஜோடியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.சொந்தங்கள் ஊர் பெரியவர்கள் அனைவரும் கூடி இருக்க நீரன் எப்பொழுதும் போல கலர் சட்டையும் வேஷ்ட்டியுமாக அமர்ந்திருக்க அழகான மாம்பழ வர்ண சேலை அணிந்து சபைக்கு வந்தாள் செந்தூரா. இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சங்கமித்து நின்றது. தில்லை மகளை எண்ணி பூரித்து நிற்க ராசு அடுத்த பாலியாடாக செந்தூரவை பார்த்து கொண்டிருந்தான்.

தட்டு மாற்ற தில்லை தட்டை எடுத்து ராசுவின் அப்பா சீமதுறையிடம் நீட்ட அவர் பெற்றுக் கொள்வதற்குள் ஒரு நிமிஷம் என்று குரல் தேக்கியது.

“ஏன்றா கண்ணு ஏதேனும் சொல்லனுமாக்கும்..தட்ட அப்பன் மாத்திக்குறேன் பொறவு சொல்லுடா கண்ணு. நல்ல நேரம் போவுது பாரு”

“நிச்சியத்த நிறுத்துங்க டேடி.. எனக்கு இந்த கல்யாணம் வேணா”தட்டு தில்லை கரத்திலிருந்து தானாக கீழே விழுந்தது. குகன் மருமகளின் அருகில் வந்து

“அம்மணி என்ன பேசுற நீயு. தட்ட மாத்தும் போது ஆபாசகுணமா என்ன பேச்சு இது அம்மணி”

“மாமா நா என்ன பேசுறேன்னு யோசிச்சு தான் பேசுறேன்.. எனக்கு இந்த கலயாணத்துல இஷ்டம் இல்ல.” தில்லை மகளிடம் ஓடினார்.

“கண்ணு ஏன்றா நீயு.ஒம்ம கிட்ட கேட்டு தான எல்லாமே செஞ்சேன். மாப்ள கூட நீ சொன்ன பையன் தான் அம்மணி..பைத்தியக்கார தனம் பண்ணாத கண்ணு. இது உன்ற வாழ்க்கை” தில்லை மகளிடம் எடுத்துக் கூறினார் இல்லை கிட்டத்தட்ட மகளிடம் மன்றாடி கொண்டிருந்தார். இவ்வளவு கூத்து நடக்கையில் அனைவரும் தங்களுக்குள் ஏதேதோ கதை கட்டி கிசுகிசுத்துக் கொண்டிருக்க நீரன் எந்த ஒரு பதற்றமும் அன்றி செந்தூரவை வைத்த கண் பார்த்துக்கொண்டிருந்தான். அன்று தான் அவளிடம் பேசிய பேச்சிற்கு சபையைக் கூட்டி வைத்து தன்னை அவமானப்படுத்துகிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான்.இதற்குதான் தான் சம்மதம் கேட்டு போது பேசாமல் இருந்தவள் தன் தந்தையை விட்டு நிச்சயத்தை ஏற்பாடு செய்திருக்கிறாள் என இப்பொழுது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.கைகளை கட்டி கொண்டு அசராது பார்த்து கொண்டிருந்தவனுக்கு சார்பாக ராசுவின் தந்தை திருவாயை திறந்தார்.

“என்னயா நடக்குது இங்க.. கவுண்டரே ஒம்ம மவ ஆசப்பட்டுச்சுனு சொல்லித்தானே நீரான கேட்டீறு. இப்ப நடு சபையில கூட்டி வெச்சு ஒம்ம மவ மரங்கழன்டவ கனகா பேசுது”

“அப்பா”தந்தையின் காதை கடித்தான் ராசு.

“என்னடா”

“நீ கணக்கா சொல்றதுக்கு பதிலா அந்தா நிக்குதே உன்ற பழைய டாவு கனகா அது பேர சொல்லி புட்ட. வீட்டுக்கு போயி சாணியடி கண்ப்ஃர்ம் போல”சீமதுரை பீதி நிறைந்த கண்களுடன் தன் மனைவியை பார்க்க அவரோ இரு கண்களிலும் தீயெரிய கணவனை முறைத்து கொண்டிருந்தார்.

“ஏய்யா சீமதொற சொல்ல வந்தத சட்டுப்புட்டுன்னு சொல்லி தொலையென்யா.. இவன் ஒருத்தன் எப்ப பாரு பொண்டாட்டிய பாத்தா உறைஞ்சு போயி நின்னுகெடவான்.என்னமோ கண்ணாலம் முடிச்ச எளவட்டம்னு நெனப்பு.. யோவ் நாட்டாம பொஞ்சாதிய பாத்தது போதும் அங்க என்ன சங்கதினு கேளும்யா மொத”அந்த ஊரின் நாட்டாமை நமது சீமதுரைதானுங்க.அரசமரத்தடிக்கு பஞ்சாயத்து வராமல் தில்லையின் வீட்டிலே அவசர பஞ்சாயத்து கூடியது.

“ராசு ஓட்றா மவன.. ஒரு ஓட்டம் வூட்டுக்கு ஓடி அய்யனோட சொம்ப தூக்கிட்டு வா”

“ஏன் சொம்பு இல்லாம உன்னால பேச முடியாதோ.. நீ சொல்ற கேவலமான கன்றாவியான தீர்ப்ப மாங்கா மடையன் கூட கேக்க மாட்டான்.. இதுல சொம்பு இல்லாம இவரு தீர்ப்பு சொல்ல மாட்டாராம்.. அப்பு இது பஞ்சாயத்து அரசமரத்தடியில இல்லப்பு.தில்லை நாயகம் கவுண்டர் வூட்டுல. அங்கன பாரு செவுத்துல போட்டோவுக்கு பதிலா வாளு வேலு கோடாரி சாட்டன்னு டெக்கரேட் பண்ணி வெச்சிருக்காங்க. கையிக்கு வாட்டமா எதையாச்சும் எடுத்து சொருவிர போறாங்க அடக்கி வாசி”மகனை ஏகத்துக்கும் முறைத்தவர்

“கவுண்டரே என்னய்யா சொல்லுறா ஒம்ம மவ”

அவள் தான் எந்த கருமத்தையும் சொல்லி தொலைய மாட்றாலே. தில்லை நொள்ளையாகி நெஞ்சை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டார். சலசலப்புக்கு பஞ்சமே இல்லை அங்கே. நீரன் இதுவரை ஒரு வார்த்தை பேசவில்லை. இப்படியெல்லாம் செய்தால் எனக்கு அவமானம் என்றாகுமா முட்டாள் பெண்ணே? அவன் பதறிப்போவான் அவமானத்தில் முகம் சிவந்து போவான் என்று கணக்கு போட்டவள் அவன் கல்போல் நிற்பதை கண்டு திகைத்து போனாள். அழுகை வேறு முட்டிக்கொண்டு வந்தது. ஊரை கூட்டி அவனை அவமான படுத்த நினைத்தவளுக்கு தான் அவமானபட்டு நிற்பது அப்பொழுது தான் உரைத்தது.தந்தையும் மாமனும் மாற்றி மாற்றி அவளிடம் கேள்வி கேட்டு குடைய உறவுகளும் ஊர்காரர்களும் வாயிற்கு வந்தபடி அவளை வசைபாட வேகமாக எங்கோ சென்றவள் கைதுப்பாக்கி ஒன்றை எடுத்து வந்தாள். ஊரே வாயடைத்து போய் நிற்க

“ஆமா நா தான் இவன கட்டிக்குறேன்னு சொன்னேன். இப்ப நான் தான் இவன் வேணாம்னு சொல்றேன். இது என் வாழ்க்க விஷயம். நாக்கு மேல பல்ல போட்டு பேச உங்களுக்கு என்ன உரிம இருக்கு.குளிர் விட்டு போச்சான்னு கேக்குறேன்.. என்ற வூட்டுல நின்னு என்னயே கேள்வி கேக்குற அளவு தகிரியமோ.. “

“கண்ணு வேணாடா என்ன பண்ற நீயு. அவங்களாம் விசேஷம்னு நம்ம வூட்டுக்கு வந்துருக்குறவங்க. அவங்கள போயி..”தில்லை பதறி கைதுப்பாக்கியை அவளிடமிருந்து கைபற்ற செல்ல

“அங்கயே நில்லுங்க டேடி. என்கிட்ட வராதீங்க. யார் யாரோ என்னென்னமோ பேசுறாங்க. மாப்ள வாய தொறந்து ஒரு வார்த்த பேசலையே ஏன்.. என்ன பிடிகலையோ இந்த சொத்துக்காக தான் பிடிக்காத என்ன கல்யாணம் பண்ண ஒத்துக் கிட்டீரோ? இல்ல என்ற மேல உள்ள பயமா?” பலவருட வன்மம் அவளுள் தீயாய் கணன்றது.

“அம்மணி இதுல நா சொல்றதுக்கு எதுவும் இல்லிங்க. நீங்களே என்ன மாப்ள கேட்டிங்க. நீங்களே என்ன வேணாமுன்னு சொல்றிங்க. நீங்களே துப்பாக்கிய எடுத்து எங்கள குறிப்பாக்குறீங்க. பொறவு குறி பாக்குறது விட்டு போட்டு டயலாக் பேசுறிங்க. ஏனுங்க அம்மணி நீங்க புத்தியோட தானே இருக்கீங்க. கிறுக்கியாட்டம் பெனாதிட்டு கெடக்கிங்க.என்ன கேட்டிங்க சொத்து மேல ஆசையா எனக்கா இது உங்களுக்கே அபண்டாமா இல்ல?நாங்க ராச பரம்பரை அம்மணி. சொத்துல்லாம் எங்க கால் தூசுக்கு சமானம். பொறவு என்ன உங்க மேல உள்ள பயமா? நீங்க இப்டி காமெடி பண்ணுவிங்கனு சாத்தியமா எனக்கு தெரியலிங்கோ அம்மணி. ஹாஹாஹா ஹிஹிஹி ஐயோ ஐயோ”அங்கே செந்தூரவிற்கு அவன் பேச பேச கோபத்தில் கைகள் நடுங்கியது.தவறு செய்தவன் அவன் அதை குறிப்பிட்டு கூட பேசாமல் அவளை மட்டுமே குற்றவாளியாக்கி பேச வந்த கோபத்தில் அவள் அருகில் வந்திருந்தவன் தோள் பட்டையில் சுட்டாள். அவளின் நோக்கம் அறிந்து வேகமாக விலகினாலும் தோட்டா அவன் தோலை சிராய்த்து சென்றது. அந்த இடமே பேராமைதி.

நீரா என்ற அலறலுடன் ராசு ஓடி வந்து நண்பனை தள்ளடாமல் பிடித்து கொள்ள தில்லை ஓங்கி விட்டார் ஒன்று செந்தூராவிற்கு. அது எதையும் பொருட்படுத்தாமல் அவனது வழியும் உதிரத்தை உதட்டில் சிரிப்போடும் கண்களில் வலியோடும் பார்த்திருந்தாள் செந்தூரா. ஆளாளுக்கு ஏதேதோ கத்தினார்கள். நீரனின் உறவினர்கள் செந்தூராவின் உறவினர்களை வசை பாடினார்கள். பதிலுக்கு அவர்களும் பொங்கி எழ அங்கே கைக்கலப்பே உண்டாக்கியது.உதிரம் சிந்தும் நீரனை கண்டு ரத்தம் கசிந்தது செந்தூரா மனதில்.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்