சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 7


வண்டி ஊர் எல்லையைத் தாண்டி நெடுந்தூரம் சென்று நின்றது.  அது ஒரு அடர்ந்த காடு.காட்டின் நடுவே பராமரிப்பற்ற அந்த கால மாளிகை ஒன்று பரிதாபகரமாக நின்று கொண்டிருந்தது.ஹெட் லைட்டை அணைத்தவுடன் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை.ஒரே கும்மிருட்டு.செந்தூரா இன்னும் மயக்கத்தில் தான் கிடந்தாள்.மருந்தின் வீரியம் அப்படி.

“மச்சான் இப்ப எதுக்குடா எஞ்சின ஆஃப் பண்ண”

“ஆஃப் பண்ணாம வேற என்னத்த பண்றது.அதான் வர வேண்டிய இடத்துக்கு வந்தாச்சுல்ல வெரசா குந்தாணிய தூக்கிட்டு உள்ளார போ.”

” டேய் மொக்க இன்னொரு தடவ என் டார்லிங்க குந்தாணின்னு சொன்ன ஏற்கனவே கிழிஞ்சு இருக்கிற வாய காது வரைக்கும் புடிச்சு கிழிச்சி விட்டுருவேன்”

“நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம்.இன்னும் கொஞ்ச நேரம் தா டி மாப்பு. மயக்கம் தெளிஞ்சு அவ உன்ன கிழி கிழின்னு கிழிக்கப் போறா.அதப் பாத்து நா குதுகலமா ஆட போறேன்.”

” ஆடுறதுக்கு கால் இருந்தாதானே..  அவள கடத்திட்டு வர ஃபுல் சப்போட்டா இருந்தது ஆரு.. “

“ஹான் மோரு..உன் பஞ்சாயத்துல எதுக்குடா என்ன சொம்பா ஆக்குற..அய்யயைய உன் கூட சகவாசம் வைச்சி கிட்டதே தப்ப போச்சு..சீச்சீ இந்த கச்சடா கப்பிள்ஸ்ஸ வெச்சிக்கிட்டு ஒரே குஷ்டம்டா சாமி”

“குஷ்டம்னா அங்குட்டு எங்கயாவது போயி குத்தவெச்சு ஒக்காரு.. மறக்காம கைய இப்டி வெச்சிக்கோ”

“டேய் டேய் அடங்குடா.. ஒரே ஏத்தா ஏத்திற போறேன்..அவள தூக்கு மச்சான். கொசு புடிங்கி எடுக்குது. உள்ளார போயி சாவகாசமா பேசலாம்”நீரன் ராசுவை முறைத்து கொண்டே செந்தூரவை தூக்கி கொண்டு உள்ளே சென்றான். கையில் மிதக்கும் கனவா நீ என்று பாடதான் அவனுக்கு ஆசை. ஆனால் முடியவில்லை. கையில் கணக்கும் கணமா நீ அப்படி தான் பாட சொல்லியது. பார்க்க சற்று புஷ்டியாக இருப்பாள் செந்தூரா. இடுப்பு தாராளமாக இருக்கும். வேலை செய்து முறுக்கேறிய உடலை கொண்ட நீரானுக்கே அவளை தூக்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

“மச்சான் செத்து கித்து போயிறாதடா. கீழே வெச்சு வெச்சு தூக்கிட்டு வா”

“நீ.. மூட்டிடு போயி கதவ தொரடா பண்ணாட..”மூச்சு வாங்க பேசினான் நீரன். ராசு கதவை திறந்து உள்ளே சென்று ஜெண்ரேடர் உதவியுடன் விளக்கை பொறுத்தினான்.அவன் இருளில் தட்டுமாறாமல் செல்வதை கண்டால் இங்கே பலத்தடவை வந்தவன் போல் இருந்தது. செந்தூரவை பழைய இத்துப்போன சோபா ஒன்றில் படுக்க வைத்த நீரன் அவள் கால் மாட்டில் அமர்ந்து கொண்டான்.

“மச்சான் இரும்படிக்குற எடத்துல ஈக்கு என்னடா வேல..நா போய்ட்டு ஊர் நடப்பெல்லாம் வேவு பாத்துட்டு பரபரப்பு அடங்குனதும் வரவா”

“மச்சான் அங்க பாத்தியா தேஞ்ச வெளக்குமாரு ஒன்னு கெடக்கு.. கையில எடுத்தேன் பிஞ்சிரும். பொத்திகிட்டு ஒக்காரு..என்ன மட்டும் கோர்த்து விட்டு போட்டு நீ மட்டும் எஸ்ஸாவலாம்னு பாக்குறியலோ”

“அப்டியே கிளுகிளுன்னு எஸ்ஸாயிடாலும்.. என்னடா தூக்கிட்டு வந்து இவ்ளோ நேரமாச்சு பொழுது கூட விடிஞ்சிருச்சு இன்னும் பொம்பள ஹல்க் அசயவே இல்ல. டேய் மூச்சு இருக்கானு பாருடா மொத கடத்தல் கேஸு கொல கேஸா ஆயிர போது..”ராசு சிக்கு வந்த கோழி மாதிரி நடுங்க நீரன் அவள் கன்னத்தில் தட்டி மயக்கம் போக்க முயன்றான். அவள் அசையவே இல்லை.

“டேய் எவ்ளோ டா துணியில ஊத்துன”

“அதுவா மச்சான் பீதியில கை நடுங்கி ஒரு முழு பாட்டிலையும் கவுத்துட்டேன்”

“அட நாசமா போறவனே.. செர்ரி ஹேய் செர்ரி கண்ண தொரம்மா”வேகமாக கன்னத்தை தட்டி எழுப்பியும் அசையாதவளை கண்டு நீரனுக்கும் பதறியது.”டேய் தண்ணி எடுத்துட்டு வாடா.. அசையவே மாட்றா”ராசு ஓடி போய் ஒரு குவளையில் நீர் கொண்டு வர அதை அவள் முகற்றில் ஊற்றி எழுப்ப இப்பொழுது மெல்லமாக கண் திறந்தால் செந்தூரா. மிசுமிசுப்பு மறைந்து கண்களைச் சுருக்கி பார்த்தவள் தன் முன்னே நின்று கொண்டிருந்தவனை கண்டதும் அதிர்ந்து விழித்தாள்.

“ஹேய் நீரா நீ என்ன பண்ற இங்க”அதிகாரமாக வரவேண்டிய குரல் மயக்கத்தின் விளைவால் அமிழ்ந்து வந்தது.

“கண்ண தொறந்து நல்லா பாருங்க அம்மணி.. நீங்க தான் எங்க எடத்துல இருக்கீங்கோ… நாங்க ஒன்னும் ஒம்ம எடத்துல இல்ல”ராசு எட்டி நின்று குரல் கொடுக்க தலையை அழுத்திய பாரத்தை ஒரு உலுக்கு உலுக்கி விரட்டியவள் சுற்றிலும் இடத்தை நோட்டமிட்டாள்.ராசு கூறியது உண்மையென அவள் புத்திக்கு புரிந்தது.கோபத்துடன் நீரனை பார்த்து

“ஹேய் நா எப்டிடா இங்கன வந்தேன்?..” அவன் பதில் சொல்லாமல் நிற்க அவனுக்கு பதில் ராசு செந்தூராவின் கேள்விக்கு விடையாகினான்.

“அதுங்க அம்மணி உங்கள கடத்திட்டு வந்துருக்கோமுங்க.”

“என்னது கடத்தலா.. நாதாரி நாய்ங்களா எம்புட்டு நெஞ்சு தகிரியம் இருந்தா என்ற மேல கை வெச்சிருப்பிங்க.. அந்த கைய ஒடைக்காம வுட மாட்டேன்டா”எதிரில் நின்று அவளையே பார்த்து கொண்டிருந்த நீரனின் சட்டையை கொத்தாக பற்றியவள் அவன் கன்னம் சிவந்து உதடு கிழிந்து ரத்தம் வரும் அளவு அறைந்து கொண்டிருந்தாள்.அவள் ஓங்கி குத்திய மூக்கிலிருந்து ரத்தம் கொடகொடவென வழிந்தது. அவள் அடிக்கும் அடிகளை ரசித்து வாங்கிக் கொண்டிருந்தான் அவன்.எருமை மாட்டில் மழை பெய்வது போல் நின்றுகொண்டிருக்கும் அவளை குனிய வைத்து நான்கு குத்து குத்திவிட்டு அடுத்த இலக்கான ராசுவை நோக்கி ஓடினாள். நண்பனுக்கு விழும் அடிகளை பார்த்தே உஷாரான ராசு எங்கோ பதுங்கி விட்டான்.அவனை தேடி அந்த மாளிகை முழுதும் அலைந்தால் செந்தூரா. அவள் கண்களில் அப்படி ஒரு வெறி.

“டேய் ராசு பஞ்ச பரதேசி ஒழுங்கு மருவாதையா நீயே இப்ப என்ற முன்னாடி வர..நானா கண்டு புடிச்சேன்.. உனக்கு புள்ளையே பொறக்காம பண்ணிருவேன்”பழைய கூடை ஒன்றின் உள்ளே பதுங்கியிருந்த ராசு

“கூமுட்ட என்ன ஒளறுது. அவளா புடிக்கறதுக்கும் எனக்கு புள்ள பொறக்காதத்துக்கும் என்ன சம்மதம் ம்ம்ம் ஆத்தி மெயின் பாயிண்ட்ட ஆப் பண்ண பாக்குறாளே பாதகத்தி” அவன் ஆடாமல் அசையாமல் நிற்க அவன் இருந்த கூடை அருகே வந்து நின்றாள் செந்தூரா. ராசுவின் கெட்ட நேரம் இருமித் தொலைத்துவிட்டான்.கூடையை ஒரே தள்ளாக தள்ள உள்ளிருந்த ராசு சுருண்டு விழுந்தான். விழுந்தவனை எழுந்திருக்கக் கூட அவகாசம் தராமல் மிதி மிதியென மிதித்து தள்ளினால் செந்தூரா. ராசுவால் அவளை சமாளிக்க முடியவில்லை.  அவன் முடியை பிடித்து கொத்தாக மாவாட்ட

“எம்மா தாயே என்ற மண்டை என்ன ஆட்டுக்கல்லா கொழவிகல்லா இந்த ஆட்டு ஆட்டுற.. என்ன ஆட்டுனாலும் மாவு வராது மசுரு தான் வரும்.. உனக்கு புண்ணியமா போகும் மண்டையில முடி இல்லாத என்ன எந்த பொண்ணு கட்டுவா? வேணா அம்மணி வுட்றும்மா”

“ஏன்டா எதுக்குடா என்ன கடத்துனிய”

“அம்மணி நா இல்லிங்கோ உங்கள கடத்துனது கதை திரைக்கதை இயக்கம் நடிப்பு எல்லாமே அங்க இடியமின் மாறி நிக்கிறானே அந்த எடுபட்ட பய தான்.. அவன் மண்டையில மாவட்ட நெறைய எடம் இருக்கு அங்க போங்க அம்மணி”அவன் குறுக்கில் மிதித்தவள் மீண்டும் நீரனிடம் வந்து அவன் மண்டையை பிடிக்க எத்தனிக்க அவள் கையை முறுக்கி முதுகு பின்னால் கொண்டு போய் விட்டான் நீரன்.

“விட்றா என்ன”திமிறினால் அவள்.

“நானும் போனா போகுது பொட்ட கோழி கூவியா பொழுது விடியுமானு உன்ன அடிக்க உட்டு வேடிக்க பாத்தா என்னடி பேய் மாறி அடிக்குற.. பொம்பளயா நீ”

“எதுக்குடா என்ன தூக்குனா.. நேத்து தான சூடு வாங்குன. இன்னுமா நீ அடங்கள”

“சூடு எல்லாம் எனக்கு கோழி சூப்பு மாறி புள்ள.. மாமன ஒன்னும் செய்யாது.. குண்டல்லாம் மாமன டச் பண்ணி டச் பண்ணி டயர்டா ஆயி ரெஸ்ட் எடுக்குது”

“யாருக்கு யாருடா மாமன்..தூங்கிட்டு இருந்த பொம்பளைய கடத்திட்டு வந்துருக்கீங்க பொட்ட பசங்களா”அதுவரை இருந்த இலகு தன்மை மறைந்து

“பொட்டயா நாங்களா.. அப்ப ஆம்பள மாறி நடந்து காட்டட்டுமா”அவள் கரத்தை மேலும் முறுக்கினான்.

“நீ செஞ்ச வேலைக்கு உனக்கு கோவகட்ட ஒன்னு தான் கேடு..என்ன விட்ரு நீரா.. பாவம் என்ற அப்பா என்னால ரொம்ப அனுபவிச்சுடாரு”

“உன்ன பெத்தத்துக்கு அந்தாளு இன்னும் அனுபவிப்பான்”

“என்ற அப்பார மரியாத இல்லாம பேசுன பல்ல ஒடச்சிருவேன்”

“டேய் மொக்க கேட்டியா பொண்ணுக்கு அப்பா மேல எவ்வளவு பாசம்னு.. நீயும் இருக்கியே”

“ம்க்கும் அந்தாளு கெட்ட கேட்டுக்கு பாச ஒண்ணுதான் குறைச்சலு.. ஏன்டா நீ வேற இங்க வந்தும் எங்கப்பன ஞாபகப் படுத்துற..”

“டேய் நீரா எதுக்குடா என்ன கடத்திட்டு வந்திருக்க.. நேத்து உன்ன சுட்டதுக்கு இன்னிக்கு என்ன பழி வாங்குறியா.. என்ற அப்பாரு ஆருன்னு தெரியும்ல.. உன்ன கண்டந்துண்டமாக வெட்டி எட்டு திசைக்கும் வீசிருவார்”

“ஆரு உங்கப்பன்? என்ன? அப்படி உங்க அப்பன்கிட்ட தலையைக் கொடுக்க எனக்கு என்ன பைத்தியமா? இல்ல அந்த ஆளு வெட்ற வரைக்கும் நான் என்ன வேடிக்க பாப்பனா?”

“ப்ச் இந்நேரம் ஊருசனம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.. நீ என்ன பழிவாங்க தான் தூக்கிட்டு ஓடிருக்கன்னு எல்லாரும் பேசுவாங்க. என்ற மாமா இந்நேரம் உன்னத் தேடி கிளம்பிருப்பாரு..ஒம்ம மூஞ்சிக்கு ஊருக்குள்ள நல்ல பேரு இருக்கு..அனாவசியமா கெடுத்துக்காதே..”

“தோடா இதான் சத்தான் வேதம் ஓதுரதோ..”

“யார்டா சாத்தன்”

“இதுல என்னங்க அம்மணி சந்தேகம் சாட்ஷாத் அந்த சாத்து குட்டி நீங்களே தான்”

“எது பேசுறதா இருந்தாலும் என்ற கைய விட்டுட்டு பேசுங்க.. வெக்கமா இல்ல தூங்கிகிட்டு இருந்த பொம்பளைய மயக்க மருந்து வைச்சு கடத்திட்டு வந்துருக்கீங்க.. ஆம்பளையா நீங்கலாம் த்தூ பொட்ட பசங்க”அவள் கையை விட்டவன்

“அடிங்க.. இன்னோரு தடவ பொட்ட கிட்டன்னு சொல்லி பாரேன் அரையுற அரையில ஆயுசுக்கும் பேச மாட்ட.. எதுக்குடி இப்போ சும்மா கெடந்து குதிச்சிகிட்டு கெடக்க.உன்ன ஏன் தூக்கனேன்னு தெரியனுமா..”அவள் தலை என் ஆமாம் என ஆடியது.”உன்ன பலி கொடுக்க”நீரன் கூறியதை கேட்டு அதிர்ந்து போனாள் செந்தூரா.அவன் வேறு ஒரு பொருளோடு சொல்ல அவள் வேறு ஒரு பொருளை நினைத்துக் கொண்டாளோ

“ஏ.. என்ன சொல்ற”

” நீ கேட்டது சரிதான் ஒன்ன பலிகொடுக்க தான் தூக்கிட்டு வந்தேன் போதுமா”

“பலி கொடுக்க நான் என்ன ஆடா மாடா.”

“இல்ல தில்லை நாயகத்தோட பொண்ணு.அது ஒன்னே ஒன்னு தான் நீ செஞ்ச தப்பு.இல்ல இல்ல நீ செஞ்ச பாவம்.அந்தாளுக்கு மகளாகப் பொறந்தது.” சலிப்பாக கீழே அமர்ந்து விட்டாள் செந்தூரா.

“நீரா நீ பேசுறது எதுவுமே எனக்கு புரியல.. பேசுறத கொஞ்சம் தெளிவா பேசு. எதுக்கு என்ன கடத்தின.. இப்ப பலி கொடுக்க போறன்னு பயம் காட்டுற.. உன்ற மனசுல என்ன தான் நினைச்சுகிட்டு இருக்க.. இப்டி வந்து என்ற முன்னாடி ஒக்கார்ந்து நிதானமா சொல்லு”

“என்ற மனசுல ஒன்னு நெனச்சுகிட்டு தா புள்ள கெடக்கேன்..அத சொல்ல இது நேரம் இல்ல.. உன்ற அப்பன் உன்ன தேடி இங்க வரபோறது இல்ல.. வரவும் மாட்டான். வரவும் முடியாது..”

“ஏன் ஏன் வர முடியாது.. என்ற அப்பார என்னத்த செஞ்சு தொலச்ச”

“பதராத.. உன்ற அப்பன் குத்து கல்லு மாறி நல்லாத்தான் இருக்கான்.. சரி சொல்லு கொஞ்ச நாளா அதாவது ஒரு ரெண்டு மூனு வாரமா உனக்கு ஏதாச்சும் மாற்றம் தெரியுதா” பைத்தியத்தை பார்ப்பது போல் அவனை பார்த்தவளை

“ப்ச் மாற்றம்னா எதாச்சும் வித்தியாசமா அமானுஷ்யமான உனக்கு தெரிஞ்சுதா”அவன் சொல்லிய நொடி அவளுள் ஒரு நடுக்கம் ஓடியது.இந்த இரண்டு மூன்று வாரமாக அவள் சில வித்தியாசமான சம்பவங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

“ஆமா ஆனா உனக்கு எப்டி அதெல்லாம்”இழுத்தாள் செந்தூரா..

“உனக்கு அப்டி கண்டதெல்லாம் கண்ணுக்கு தெரிய வெச்சதே நா தான். சுடுகாட்டுல ஒக்காந்து மை செஞ்சு எடுத்துட்டு வந்து உன்ற உச்சந்தலையில் நச்சுன்னு தடவுனேன்..என்னடி அப்டி பாக்குற.. இதெல்லாம் ஏன் செஞ்சேன் தெரியுமா?”

“என்ன பைத்தியக்காரியாக்கி என்ற சொத்த ஆட்டய போடவா”

“சீ எவனுக்குடி வேணும் உன்ற சொத்து.. சுத்தி பாருங்க அம்மணி. இந்த மாளிகையோட ஓனரே அய்யா தான்”.. அவன் கூறியதும் அந்த மாளிகையை சுற்றி பார்வையை ஓட்டினாள் செந்தூரா..இதுவரை இருந்த பதற்றம் விலகி கிலி தொற்றிக் கொண்டது அவளுக்கு. அந்த கால மன்னர்கள் பயன்படுத்திய தோரணையில் பாழடைந்து கிடந்தாலும் ஒருவித கம்பீரம் தெரிந்தது. கூடவே அமானுஷ்யமும்.குரல் நடுங்க

“நீரா நீ ஏன் இங்க என்ன கொண்டு வந்த.. உனக்கு என்னதான் வேணும்.. என் உயிரா”

“அது கண்டிப்பா வேணும் தான் அதுக்கு முன்ன ஒன்னு வேணுமே”

“என்ன”

“என் பொண்டாட்டியா நீ வேணுமே”

“நோ”

“எஸ்ஸு நீ என் பொண்டாட்டி ஆவுற.. நீயா சம்மதம்னு சொல்ற வர இந்த எடத்த உட்டு அசைய கூட முடியாது கண்ணு.. தோ பாருங்க அம்மணி நேத்து நீங்க சுட்டது வேற ஹெவி பிளட் லாஸ்..சத்தான ஆகாரம் இல்ல. தூக்கம் இல்ல. கை வலிக்க ஒம்ம தூக்குனது வேற கழுத்தாம்பட்ட ஒரு பக்கமா கொடையுது..நாங்க போயி சாப்பாடு வாங்கிட்டு வரோம்.நல்லா திங்குறோம். இழுத்து போத்திட்டு தூங்குறோம். சரியா.. அதுவர அம்மணி கம்முனு பொத்துனாப்புல ஒக்காந்து இருப்பிங்கலாம்..

“நீ சொல்லி நா கேட்கணுமா போடா பண்ணாட”கோபத்துடன் எழுந்தவளை ஒரே தட்டில் மயக்கமடைய வைத்தான் நீரன்.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்