சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 28


“என்ன மச்சான் நேரம் தான் ரெக்கை கட்டி பறக்குதே தவிர ஒரு எழவு தகவலையும் காணோம்..இப்டியே எப்படி டா நா ஊருக்கு போய் என்ற பொண்டாட்டி மூஞ்சில முழிப்பேன்.உனக்கே தெரியும்ல அவ இது வரைக்கும் எதுக்காச்சும் பயந்து இருக்காளா?இப்போ என்ற மூஞ்ச அவ பாக்குறப்போ எல்லாம் ஒரு சாவு பயம் அவ கண்ணுல தெரியுது மச்சான்.எல்லாம் யாரால என்னால தானே?அவ பாட்டுக்கு சிவனேனு இருந்தா..அவளை கடத்தி கல்யாணம் பண்ணி ஸ்ஸ்ஸ் சரி அத விடு.கல்யாணம் பண்ணி அவளுக்கு உண்மைய சொல்லி புரியவைக்காம அவளுக்கு ஒரு புள்ளைய கொடுத்து..ச்சை நா எல்லாம் என்னடா மனுஷன்?

“மச்சான் வேலைய சிறப்பா முடிச்சு கொடியும் நாட்டிட்ட.. இனிமே ஒன்னும் பண்ண முடியாது. நடந்தத வருத்தப்படாம இனிமே என்ன நடக்கும்னு யோசி..”

“யோசிச்சு யோசிச்சு மூள சூடாயி கரைஞ்சு ஊத்திரும் போல.. என்னால யோசிக்க முடியல மச்சான். எத பத்தி யோசிச்சாலும் என்னோட செர்ரி மட்டும் தான் என்ற நெனப்புக்கு வரா..அவளுக்கு இந்த துரோகத்த நா பண்ணியிருக்கக் கூடாது..இப்படி ஒரு காதல ஒலகத்துல யாராச்சும் பண்ணிருப்பாங்களா இல்லையானு தெரியல. அத நா தெரிஞ்சிக்கவும் நினைக்கல.. என்ற செர்ரி என்ற மேல வெச்சிருக்குற பாசம் அம்புட்டு உண்ம மச்சான்.

இப்டி பட்ட ஒருத்திக்கு நா சாவ பரிசா கொடுத்துருக்கேன்..வயித்துல புள்ளய வெச்சிக்கிட்டு ஒத்த பொம்பளயா என்னய தூக்கி குளிப்பாட்டி குண்டி கழுவி அசிங்கம் பாக்காம பீ மூத்திரம் எல்லாம் அள்ளிப் போட்டு சுத்தம் செஞ்சு நேரம் தவுராம சத்தான ஆகாரம் கொடுத்து மருந்து மாத்திர இப்டி அவளுக்குன்னு நேரமே ஒதுக்காம என்ன பத்தி மட்டுமே யோசிச்சு அவளோட நேரம் போணுச்சி.. வாயிக்கு ருசியா ஒரு கறி சோறு சாப்டுருபாளா.. இல்ல நல்லதா ஒரு சேல துணி கட்டிருப்பாளா.. என்ன கவனிச்சவ அவள பத்தி நினைக்கவே இல்லடா..

அவளுக்கு வேல செய்யவே அம்புட்டு வேலைக்காரங்க இருக்குறப்போ எனக்கு வேல செஞ்சு கொடுத்துட்டு இருந்தவ.. என்ற மேல எம்புட்டு பிரியம் இருந்திருந்தா இப்டி செஞ்சிருப்பா..மச்சான் நீ நம்பறியா.. அவளுக்கு சாவ பாத்து பயமே இல்ல..என்ன விட்டு போறதுக்கு தான் அவளுக்கு மனசு இல்ல.. அவளால அது முடியாது.. “

“மச்சான்”

“எல்லாம் போச்சு மச்சான்..  என்ற நம்பிக்கை எல்லாமே தூள் தூளா ஒடஞ்சு போச்சு.. தேவையில்லாம ஒன்ன வேற இதுல இழுத்துவிட்டு என்னைய மன்னிச்சிரு மச்சான்..எனக்காக என்ற பொண்டாட்டி காத்துகிட்டு இருப்பா..அவ கிட்ட சொல்ல போறேன்.. என்னால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியல..அந்த சாபத்துக்கு விமோசனம் தேட முடியல..உன்னைக் காப்பாத்த முடியாத பாவியா நிக்கிறேன்.. என்ன மன்னிச்சிரு செந்தூரானு சொல்ல போறேன்..”ட்ரெயினில் அமர்ந்திருந்த நீரனின் கண்களில் அப்படியொரு கண்ணீர்.  எப்படியும் அந்த இடத்தை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இந்த பயணத்திற்கு கிளம்பினான்.

சிவபுரத்தில் கண்டுபிடிக்க முடியாத போது கண்டிப்பாக அந்த இடம் திரிம்பாக் என்ற நம்பிக்கையில் அங்கே சென்றான்.அங்கே சென்று அலைந்து திரிந்தது தான் மிச்சம்.செந்தூரா அவனுக்கு அழைக்கும் போதெல்லாம் கண்டிப்பாக அந்த இடத்தை கண்டுபிடித்து விடுவேன் நீ கவலை படாதே என்று முயன்று வரவழைத்த குரலில் அவளிடம் இயல்பாக பேசினான். சரியாக சாப்பிடாமல் தூங்காமல் இந்த மூன்று வாரத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருந்தான் நீரன். ராசு உடன் இருந்ததால் அவனை பட்டினியாக விடாமல் வற்புறுத்தி இரண்டு வாய் சாப்பிட வைத்தான்.

வற்புறுத்தி சாப்பிட வைத்த அவனால் கட்டாயப்படுத்தி தூங்க வைக்க முடியவில்லை. கண்ணை மூடி நீரன் படுத்திருந்தாலும் மூடிய விழிகளுக்குள் அவனின் அழகு மனைவியின் முகமே  வந்து வந்து போனது. மரண பயத்தோடு பெரிய விழிகள் இரண்டும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அதில் தெரிந்த பயத்தை வார்த்தையில் காட்டாமல் அவன் கிளம்பும் போது அவனுக்கு தைரியம் கூறி அனுப்பினாளே.. அந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் அவனது மூடிய விழிகளுக்குள் வந்து வந்து போனது.

தாடியும் மீசையும் பரட்டைத் தலையுமாக ஆளே பாதி இளைத்து கருப்பாகி இப்பொழுது அந்த ராஜா சென்ற இடத்தை கண்டுபிடிக்க இயலாமல் இருவரும் தங்களுக்கு ஊருக்கு ட்ரெய்னில் வந்து கொண்டிருந்தனர். தன்னால் முடிந்தவரை ராசு தன் நண்பனுக்கு தைரியம் கூறி கொண்டிருந்தான். அவனும் தான் பாவம் என்ன செய்வான்.. இந்த சாபத்தில் அவனுக்குமே பங்கு உண்டு. இனி இந்த சாபம் அவனது வம்சத்தையும் தொடரும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவன் கவலை கொள்ளவில்லை. அவனது கவலை எல்லாம் தன் முன்னால் வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் தனது ஆருயிர் நண்பனை பற்றியதே ஆகும்..

ஊருக்கு வந்து  சேர்ந்தவர்களை அவர்களின் நெருங்கிய நண்பனான குணா வந்து அழைத்து சென்றான். குணாவின் முகத்திலிருந்த பதற்றம் இவர்களுக்கு கேள்வியை உண்டாக்கியது..” என்ன மாப்ள.. மூஞ்சிய ஏன் இப்படி இருக்கு..”

“இல்லடா ராசு நம்ம நீரானோட பொண்டாட்டிக்கு புள்ள வலி எடுத்துருச்சு.. அம்மணிய ஆஸ்பத்திரியில சேத்துருக்காங்க.. குகன் மாமா தான் உங்களை கூட்டிட்டு வர சொன்னாரு”

“என்னடா சொல்ற.. இன்னும் புள்ள பொறக்க ஒன்றை வாரம் இருக்கே”

“என்ன கருமமோ மச்சான்.. நா என்னத்த கண்டேன். ஊருக்கு ஒரு ஜோலியா போன நீங்க இன்னைக்கு வருவீங்கன்னு மாமா ஃபோன போட்டு உங்கள கூட்டிட்டு அப்டியே ஆஸ்பத்திரிக்கு வந்துர சொன்னாரு..”

அவன் சொல்லிக்கொண்டே போக நீரன் எதுவுமே பேசவில்லை. அவன் வேண்டிக் கொள்வதெல்லாம் குழந்தை பிறக்கவே கூடாது என்பதுதான்.ராசு நண்பனை பீதியோடு பார்த்தான். கல் போல் அமர்ந்திருந்தான் நீரன். மருத்துவமனையின் முன் கார் நின்றதும் முதல் ஆளாக இறங்கி உள்ளே ஓடினான் நீரன். அங்கே தில்லையும் குகனும் இவனுக்காக காத்திருந்தனர்.. தில்லை அழுது அழுது இதற்கு மேல் அழவே முடியாது என்ற நிலையில் சோர்ந்து கிடந்தார்.குகனும் தளர்ந்து போய் அமர்ந்து இருந்தார். நீரனை கண்ட இருவருக்குமே அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“சித்தப்பா என்னாச்சு.. செர்ரி எப்டி இருக்கா..அவளுக்கு”

“நீரா நம்ம அம்மணி நம்மள எல்லாம் உட்டு புட்டு போயிட்டா டா”குகனின் அழுகையில் அதிர்ந்து நின்றான் நீரன். அவரை தள்ளிவிட்டு அறைக்குள் நுழைய முயன்றவனை தடுத்த குகன்” அம்மணியோட உடல் உறுப்ப தானம் பண்றிங்களானு டாக்டரு கேட்டாரு.. நெருப்புக்கு போற உடம்பு நாலு பேருக்கு நல்லது செஞ்சிட்டு போட்டும்னு அவ உடல் உறுப்ப தானம் பண்ணிட்டோம்.. எல்லாத்தையும் வெளியே எடுத்து கிட்டு இருக்காங்க.. “

நீரனால் இதனைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவன் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. அப்படியே தரையில் அமர்ந்து விட்டான்.அவன் பின்னால் வந்த ராசு அவனைத் தாங்கிப் பிடித்து”சித்தப்பு புள்ள என்னாச்சு”

“ஆம்பள புள்ளய்யா.. அது நல்லா இருக்கு.. பொறந்த உடனே புள்ளயோட மூஞ்சிய ஆசையா பாத்தா.அதான் கடைசி   அப்டியே புள்ள மூஞ்சிலயே கண்ண நிலச்சு நின்னுருச்சி.. அம்மணியோட சட்ட நெனஞ்சு ஈரமாயிடுச்சு.. அவ செத்தும் புள்ள மேல எம்புட்டு பாசம் வெச்சிருந்தா இப்டி தாய் பால் பீயிச்சிகிட்டு அடிச்சிருக்கும்.. எல்லாம் போச்சே.. என்ற கண்ணு போயிட்டாளே”

நீரன் தரையில் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தான். அவனைப் பிடித்து இழுத்து நாற்காலியில் அமர வைக்க எவ்வளவோ ராசு முயற்சி செய்தான். ஒரு இம்மி கூட அசையவில்லை.நர்ஸ் ஸ்ரக்சரில் செந்துராவைக்கு கிடத்தி தலையோடு வெண்ணிற துணி போர்த்தி வெளியே தள்ளிக் கொண்டுவர காற்றில் அந்த துணி பறந்து செந்தூராவின் முகம் தெரிகிறது.. தரையில் அமர்ந்திருந்த நீரன் டக்கென்று எழுந்து நிற்கிறான். அவனின் ஆசை மனைவி செந்தூராவின் உயிரற்ற உடல் செந்தூரா என அவன் அலற அடித்து பிடித்து எழுந்த ராசு நீரனை பற்றி உலுக்கினான்..

ராசு உறங்கிவிட நீரன் கண்மூடி சாய்ந்திருந்தான். நேரம் செல்ல செல்ல எப்பொழுது உறங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. தூக்கத்தில் கெட்ட கனவு கண்டு பயந்திருந்தான் நீரன்..  ராசு அவனைப் பற்றி உலுக்கவும் தூக்கத்திலிருந்து கண் திறந்தவன் தான் இதுவரை கண்டது எல்லாம் கனவு என்பதை புரிந்து கொண்டான்.. மரணத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு தன்னவளின் மரணத்தைப் பற்றிய கனவு வந்துள்ளது..

அது கனவு என்று அவன் புத்திக்கு புரிந்தாலும் மனம் அதனை ஏற்க மறுத்தது. பேயறைந்தவனை போல் காணப்பட்டவனை”டேய் மச்சான் என்னடா ஆச்சு”

“மச்சான் என் செர்ரி செத்து போய்ட்ட மாறி கனவு கண்டேன்டா”

நீரன் பயணித்த வகுப்பில் இருந்த சக பிரயாணிகள் அவன் கத்தி அலறவும் எழுந்து விட்டனர்.சிலர் முனங்கி கொண்டே உறங்கிட ஒரு வயதான பெரியவர் மட்டும் தான் வைத்திருந்த திருநீரை எடுத்து நீரன் நெற்றியில் பூசி”தம்பி கவலப்படாதப்பா.. சாவு கனவு கண்டா நல்லதுன்னு சொல்லுவாங்க.. யார சாவுற மாதிரி கனவு கண்டியோ அவங்க உன் கூட கடைசி வரைக்கும் இருப்பாங்க.. தண்ணிய குடிச்சிட்டு படுங்க..”

புண்பட்ட மனதிற்கு பெரும் ஆறுதலாக இருந்தது அந்தப் பெரியவர் கூறிய வார்த்தைகள்.. எழுந்து சென்று முகத்தைக் கழுவி வந்தவன் அதன் பிறகு உறங்கவே இல்லை.. எதையோ பறிகொடுத்தவன் போல அமர்ந்திருப்பவன் அவளுடன் பேசும் போது மட்டும் சற்று சந்தோஷமாக இருப்பான்.அவளுக்கு தெரியாதா அவனின் குரலின் மாற்றம்.அவன் தான் அவளிடம் உண்மையை கூறிவிட்டானே.தன்னுடைய மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தாலும் இந்த நேரம் அவனுக்குத் தான் தைரியம் கூற வேண்டும் என்பதை உணர்ந்தவள் முடிந்த அளவு பேச்சை மாற்றி பேசும் நேரம் மட்டுமே அவனை சந்தோஷமாக வைத்துக் கொண்டாள்.

அவளின் முயற்சி புரிந்தவன் எதுவாக இருந்தாலும் நேரில் சென்று பேசிக் கொள்ளலாம் என்று அழைப்பில் இயல்பாக பேசினான்.மூன்று நாள் பயணத்தில் அவர்களின் ஊருக்கு வந்து சேர்ந்தான் நீரன்..தாடியும் மீதையுமாக அவனை பார்க்க சகிக்கவில்லை செந்தூராவிற்கு..

“என்ன நீரா இப்டி இளச்சு போய்ட்ட..”அவனை கட்டி கொண்டு கண்ணீர் விட்டாள். அவளை கிட்ட தட்ட ஒரு மாதம் கழித்து பார்க்கிறான். அவளுமே கன்னத்து சதைகள் ஒட்டி கண்களை சுற்றி கருவளையம் கொண்டு ஆளே பொழிவிலிழந்து காணப்பட்டாள்..

“நீ என்னடி இப்படி இருக்க.. ஒழுங்கா சாப்டுறது இல்லையா”

“அங்க மட்டும் என்ன வாழுதாம்.. வந்துட்ட என்ன சொல்ல..”

“செர்ரி என்ன” அவன் என்ன கேட்கப் போகிறான் என்பதை அவன் வாய் திறக்கும் போதே தெரிந்து கொண்டவன் அவன் வாயை தன் கரத்தால் மூடி

“வேணா நீரா. நீ ஒன்னியும் சொல்ல வேணா..எல்லாம் விதி படி நடக்கட்டும். இப்ப வந்து குளிச்சிட்டு சாப்பிடு வா”என்றவள் அவனைத் தானே இழுத்துச் சென்று அவனுக்கு சவரம் செய்து விட்டு அவனைக் குளிக்க வைத்து தன் கையாலேயே அவனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்..அவனுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது. ஒருவருக்கு தான் இறக்கப் போகும் நாள் தெரிந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய தைரியசாலியாக இருந்தாலுமே மரண பயம் பிடித்துக் கொள்ளும்.. அவளுக்குமே அந்த பயம் இருந்தது..அது அவளின் பளிங்கு கண்களில் நன்றாக தெரிந்தது.ஆனால் தனது பயத்தை வெளியே காட்டினால் எங்கே அவன் குற்ற உணர்ச்சியில் கதறி விடுவான் என்ற ஒரே காரணத்தினால் அந்த பயத்தை வெளிக்காட்டாமல் அவன் முன்பு இயல்பாக நடிக்க முயன்றால் செந்தூரா.

இருவருக்குமே தொண்டை அடைக்க ஒருவருக்கு ஒருவர் உணவை மாற்றி மாற்றி ஊட்டி உண்ண முடியாமல் உண்டு முடித்தனர். அன்றிரவு பயணக் களைப்பில் நீரனின் உடல் இளைப்பார விளைந்தாலும் உறக்கம் வராமல் தவித்தான் நீரன். அவனின் தவிப்பை உணர்ந்த செந்தூரா

“ஏன் நீரா இப்டி இருக்க.. எவ்ளோ அசதியா இருக்கும்.. நீ நல்லா தூங்கு.. நம்ம விதி எப்டியோ அப்டி நடந்துட்டு போட்டும்.. இருக்குற ரெண்டு மூனு நாளுல ஏதாச்சும் ஒரு அதிசயம் நடந்துராதா.. நாம ஏன் அதுக்குள்ளார நம்பிக்க இழக்கணும்.. நம்பிக்கையோட இருக்கலாம் நீரா..”

“எப்டிடி.. உன்ன இந்த நெலமக்கு ஆளாக்கிட்டேனே..”அவள் மடியில் விழுந்து கதறி விட்டான் நீரன். அவள் அழவில்லை. குத்து கல்லாக அமர்ந்திருந்தாள். அவன் அழுது முடிக்கும் வரை தாயாக மடி தந்தவள் அழுகை குறைந்து விசும்பலாக மாற அவனை எழுப்பி தன் நெஞ்சில் சாய்த்து கொண்டாள் தாரமாக.

“அழாத நீரா.. கடவுள நம்பு..நம்ம காதல நம்பு.. ஏதாச்சும் ஒரு அதிசயம் நடக்காமலா போய்டும்.. நம்பு”அவளுக்கும் சேர்த்து சொல்லி கொண்டாள் செந்தூரா.. அவளை விட்டு தள்ளி எழுந்தவன் செந்தூராவை படுக்க வைத்து அவள் கால்களை அமுக்கி விட்டான். பின் அவள் தலைமுடியை கோத அப்படியே உறங்கி விட்டாள்.. எவ்வளவு அழகான பெண் செந்தூரா. மரண பயத்தில் முகமே இருண்டு பொழிவிழந்து விட்டது. அவளை பார்க்க பார்க்க அவர்கள் வாழ்க்கையே படமாக அவன் கண்முன் ஓட ஓங்கரித்து வந்த அழுகையை இருக்கரங்கள் கொண்டு வாயை பொத்தி அழுந்தான்.

உடல் குலுங்களின் அசைவில் அவள் எழ கூடுமென தன் கண்ணீரை முயன்று அடக்கினான். நெஞ்சே வலித்தது. கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.. மனதால் கடவுளிடம் வேண்டுதல் வைத்தான்.. எப்படியாச்சும் என்ற செந்தூராவ காப்பாத்து.. ஏதாச்சும் ஒரு வழி.. ஒரே ஒரு வழிய காட்டு.. இதுவே அவனது மானசீக பிரார்த்தனையாக இருந்தது. அவனும் அப்படியே உறங்கி போனான்..

மறுநாள் தோப்பில் இடி விழுந்ததை போல அமர்ந்திருந்தான் நீரன்.. அவனருகில் என்ன பேசுவதென்றே தெரியாமல் நின்றிருந்தான் ராசு..பறவைகளின் ஓசையும் காற்றின் இசையும் மட்டுமே அந்த இடத்தை நிறைத்திருந்தது. இருவருமே வாய்திறந்து எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை. பேச அவர்களால் முடியவில்லை.  மன்னிப்பு என்ற வார்த்தையை தெரிந்தே செய்த குற்றத்திற்காக கேட்க நீரனுக்கு பெரும் குற்ற உணர்ச்சியாக இருந்தது.தப்பே செய்யாத தனது வம்சத்துக்கும் சாபம் தொடர போவதை நினைத்து ராசு வருந்தவில்லை.செந்தூராவை இழந்து தனது நண்பன் எப்படி உயிர் வாழ்வான் என்ற கவலையே பெரியதாக இருந்தது ராசுவிற்கு.

கடவுள் கண்டிப்பாக நமக்கு உதவி செய்வார். நமது நம்பிக்கை நமது கனவு நமது விடாமுயற்சி அனைத்தும் ஒரு கட்டத்தில் செயலிழந்து போகும். இதற்குமேல் செய்ய நம்மிடம் எதுவுமே இருக்காது.  உடல் தளர்ந்து மூளை சூடாகி எதுவுமே செய்ய இயலாத நிலையில் அனைத்தும் நம் கைவிட்டுச் சென்ற ஒரு கொடுமையான சமயத்தை நாம் அனைவரும் அனுபவித்திருப்போம்.. மனிதனால் முடியாத போது கண்டிப்பாக கடவுள் இறங்கி வருவார் என்பது சொல்லப்படாத நியதி..  ஏதோ ஒரு வகையில் எப்படியாவது நமது வேண்டுதல் நிறைவேறும். நமது கோரிக்கை நியாயமாக இருப்பின் அதை இந்த இயற்கை நிறைவேற்றி வைக்கும்.

அப்படி ஒரு அதிசயமாக இறுதி வாய்ப்பு ஒன்று நீரனுக்கு கிடைத்தது. தோப்பில் அமர்ந்திருந்தவனை கைபேசியில் அழைத்தால் செந்தூரா. அவள் கூறிய செய்தியைக் கேட்டு ராசுவையும் இழுத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றான் நீரன்.செந்தூரா என்னதான் தைரியமாக காட்டி கொண்டாலும் அவளின் மாற்றம் தில்லைக்கு தெரிந்தது..அவளிடம் ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்டதற்கு வழக்கத்திற்கு மாறாக சிரிப்பு ஒன்றை பதிலாக தந்தாள்.

எப்பொழுதும் ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் அவரை பார்த்து முறைத்து வைப்பாள்..ஆனால் இன்று தன்னுடைய மகள் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வதை கண்ட தில்லை எதுவும் பேசாமல் அவளது தலை முடியை கோதினார்.”என்ன இருந்தாலும் அப்பா இருக்கேன்டா கண்ணு.. நீ வர வர சரியில்ல. எதையோ முன்ன மனசுக்குள்ள போட்டு மறுகி கிட்டு இருக்க.என்ற கிட்ட சொன்னா வருத்தப்படுவோம்னு நினைக்கிற..என்னடா புள்ள பொறக்கறத நெனச்சா பயமா இருக்கா..

உனக்கு ஒன்னும் ஆகாதுடா கண்ணு.. சொக பிரசவம் நடந்து தாயி புள்ள ரெண்டு பேரும் ஜம்முனு வூட்டுக்கு வருவீங்க பாரு.. என்ற பேர புள்ளைய இந்த நெஞ்சுல போட்டே வளப்பேன்டா”

கசந்த புன்னகை ஒன்றை சிந்தியவள்”டேடி எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா”

“கண்ணு”துடித்துவிட்டார் தில்லை..

“சொல்றதக் கேளுங்க.. எனக்கு ஏதாச்சும் நடந்துச்சுன்னா என்ற புள்ளய நீங்கதான் வளக்கணும்..”

“அடிச்சிருவேன் பாத்துக்கோ என்ன பேச்சு பேசுற படுவா..”

“டேடி எனக்கு சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன்.. எனக்கு தூக்கம் வருது”என்றவள் அவர் கூப்பிட கூப்பிட சென்று விட்டாள். தில்லைக்கு மனம் பொறுக்காமல் குடும்ப ஜோதிடரை காண சென்றார்.நீரனை பற்றி நினைத்து கொண்டு படுத்திருந்தவளுக்கு ஒரு அழைப்பு வந்தது. யாரென்று பார்த்தால் புது எண். இரண்டு மூன்று முறை எடுக்காமல் தவிர்த்தவள் தொடர்ந்து அழைப்பு வர கடுப்பில் எடுத்தாள்..

“ஹெலோ யாரு இது”கோவமாக வந்தது அவளது குரல்..

“செந்து.. நா தான் கணி பேசுறேன்”வாரி சுருட்டி கொண்டு எழுந்தாள் செந்தூரா.. ஒளி வந்து விட்டது நான் தப்பிக்க வழி வந்து விட்டது எனும் புலிகேசியின் வசனம் அந்த நேரம் அவள் மூளையில் மின்னலிட்டது.

“கணி.. கணி நீயா.. எங்கடா போயி தொலைஞ்ச..எத்தன தடவ போன் பண்ணேன்.. ஏன்டா எடுக்கல.. எங்க போய்ட்ட கணி”அவளுக்கு அழுகை இப்பொழுது தான் வந்தது. கணியிடம் பேசினால் வழி கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு நிம்மதி அவள் மனதில்.

“ஏய் செந்து ஏன் அழற..ஸாரி செந்து.. உனக்கு தான் தெரியுமே நா ஒரு பொண்ண லவ் பண்ணேன்னு..ரெண்டு வீட்லயும் பேசி கல்யாணத்துக்கு ஓகே வாங்கி எல்லாமே நல்லா போனுச்சு. அன்னைக்கு அவ பர்த்டே. அவள வெளிய கூட்டிட்டு போனேன். நான் ஒழுங்காதான் டிரைவ் பண்ணேன். ஆப்போசைட்ல வந்த வண்டி பிரேக் இல்லாம இந்த ரோட்டுக்கு வந்து எங்க வண்டி மேல மோதி அவ ஸ்பாட் அவுட்”

“ஐயோ”

“ம்ம்ம்.. நா பொழச்சிட்டேன்.. ஏன் பொழச்சேன்னு இப்ப வரைக்கும் தெரியல.. அவள என்னால மறக்கவே முடியல. ஏன் மறக்கணும்..அவ நெனப்போடு அங்கேயே இருந்தா பைத்தியம் புடிச்சிரும்னு அப்பா என்ன திருதுறைபூண்டி கூட்டிட்டு வந்துட்டாரு.எங்க பூர்வீக வீடு இங்கதான் இருக்கு.. அந்த ஃபோன் அக்சிடேன்ட் அப்ப ஒடஞ்சு போச்சு. அந்த நம்பர் கூட வேணாம்னு தான் அப்டியே விட்டுட்டேன். யாரு கிட்டயும் பேசாம அவ நெனபோட வாழ்ந்துட்டு இருக்கேன்.

நேத்து ஒரு கனவு.. என் செல்லம் என் கனவுல வந்தா. அவ மூஞ்சில அப்படி ஒரு சிரிப்பு.. அப்டியே அவ மூஞ்சி உன் முஞ்சா மாறி போச்சு.. கண்ணு முழிச்சு பாத்தேன்.. உன்கூட பேசணும்னு தோணிட்டே இருந்துச்சு. நல்ல வேல உன் நம்பர என் டைரில எழுதி வெச்சிருந்தேன்.. என்ன விடு.. எப்டி இருக்க செந்து”

“நா நல்லாவே இல்ல கணி”என அவள் அழுது கொண்டே அனைத்தும் சொல்ல கணி அவளையும் நீரனையும் உடனே கிளம்பி தான் இருக்கும் ஊருக்கு வர சொன்னான்.. இதை சொல்லத்தான் செந்தூரா நீரனை அழைத்திருக்க அவனும் வந்து சேர அவள் முகத்தில் புதிதாக தோன்றிய ஒளியே அவனுக்கு ஏதோ ஒரு செய்தி கூறியது..

“என்னடி ஏன் ஒடனே வூட்டுக்கு வர சொன்ன”.. அனைத்தையும் அவள் கூறிமுடிக்க உடனே அவர்கள் மூவரும் திருத்துறைபூண்டிக்கு கிளம்பி விட்டனர்.கணியின் ஊருக்கு வந்த சேர இரவானது.கணி தந்த முகவரிக்கு வந்து சேர்ந்தவர்களை கணி வாசலில் நின்று வரவேற்றான்.பல வருடங்கள் கழித்து நண்பர்கள் இருவரும் சந்தித்து கொண்டனர்.

இருவருமே கசந்த புன்னகை ஒன்றை சிந்தி கொண்டனர். கணிக்கு நீரனையும் ராசுவையும் அறிமுக படுத்தி வைக்க பரஸ்பர விசாரிப்புகள் முடிந்து உள்ளே வந்தவர்களை அமர கூறியவன்”என் அப்பாவுக்கு இந்த ஆன்மீகம் தியானம் இந்த மாறி விஷயங்க பத்தி எல்லாம் ரொம்ப தெரியும். சொல்ல போனா அதெல்லாம் கறஞ்சு குடிச்சிருக்காரு.. உங்க விசயத்துல அவரு ஏதாச்சும் உதவி செய்ய முடியும்னு நெனைக்குறேன்..ஆனா உறுதியா சொல்ல மாட்டேன்..”என்றவன் அவன் அப்பாவை அழைக்க சென்றான்.சிவலோகராஜ் கணியின் தந்தை. கணி ஏற்கனவே செந்தூராவை பற்றி கூறிருக்க சில நல விசாரிப்புகளை தொடர்ந்து விஷயத்திற்கு வந்தார்.

சிவலோகராஜ் தியான முறைகளை பற்றி விவரிக்கத் தொடங்கினார்.

“கண்ணுங்களா, தவம் பண்ணி நம்ம முன்னோர் எண்ணத்த நாம தெருஞ்சிக்களாம், உங்க பாஷைல சொல்லணும்னா தியானம்னு வச்சுகோங்க, அதுலயும் பீட்டா, தீட்டா, ஆல்ஃபா, டெல்டானு நிறையா ஸ்டேஜ் இருக்கு, ஆனா என்னால ஆல்ஃபா வரைக்கும் போக முடியும், அப்படி போகும் போது உங்க மூத்த தலைமுறை சிவனடியாரா இருக்குறதுனால நானும் ஒரு சிவபக்தர்னால
அவரோட எண்ண ஓட்டங்கள் என்ன தொடர்பு கொள்ளும்… அப்படி தொடர்பு கொள்ளும் போது ஆழ்நிலையில எனக்கு சில காட்சிகள் தோணும்..அந்த காட்சிகள் நீங்க தேடி போற இடத்துல இருந்தா அந்த இடத்துல தான் அவர் ஜீவ சமாதி ஆகிருக்கிறார்னு நாம உறுதியா நம்பாலாம்.” என பத்மாசனத்தில் அமர்ந்து தியானத்தை தொடங்கினார்.

அனைவரும் அவரையே உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். சிலமணி நேரம் கடந்தது. ஒரு குழந்தை கண் திறப்பது போல கண்களை மெல்ல திறந்து ஒரு புன்சிரிப்பு பூத்தார்.
நீரனைப் பார்த்து “அந்த ராஜா.. தண்ணீருக்கு தினமும் பூஜை செய்வாரா?”

“இல்லங்க எனக்கு தெரியல, பல நூறு வருஷம் ஆச்சு… அவரோட பழக்கம்”என இழுத்தான்.

“சரி விடு உங்க வீட்ல இல்ல தோட்டத்துல வற்றாத ஊத்து இருக்கா?”நீரன் பவ்யமாக தலையை ஆட்டினான்.சிவலோகராஜ்கு எல்லாம் புரிந்தது போல் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு.

“கண்ணுங்களா நல்லா கேட்டுங்கோங்க, நாம வாழ்ற காலத்துல பஞ்சபூதத்துலா எந்த பூதத்த உண்மையான அன்போடு வணங்குறோமோ அந்த பூதத்துல நாம மறைவுக்கு பிறகு கலந்து அதை செழிக்க வைப்போம், அதுனால தான் இன்னும் இந்த பூமி செழிச்சு கிடக்கு, அதுவும்  ஆன்மீக பூமியான இந்தியாவுல சொல்லவே வேணாம்.

நா அந்த ராஜாவ நெனச்சு தவத்துல இருந்த போது அடிக்கடி வில்வ மரங்களும், நீரூற்றுகளும் வந்துகிட்டே இருந்துச்சு அத வச்சு பாக்கும் போது, பல நூறு வருஷம் கடந்தாலும் மனிதர்கள் அவர் ஜீவசமாதியை கவனிக்கமா விட்டாலும் இயற்கை அந்த இடத்தை பாதுகாக்குது.நீங்க தேடி போற இடத்துல பல நூறு வருஷமான ஒரு வில்வமரத்து வேர்ல ஒரு ஊற்றுகண் நிச்சயம் இருக்கும் அந்த ஊற்று தான் அவரோட ஜீவசமாதியோட அடையாளம்.”

“எப்படிங்க இவ்வளவு உறுதியா சொல்றீங்க… “

“கண்ணு… நாம மட்டும் இந்த பூமில வாழல..  மண்ணுக்கு மேல ஓடுற தண்ணிய விட மூனுமடங்கு மண்ணுக்கு கீழ ஓடிக்கிட்டு இருக்கு, அப்படி ஓடுற தண்ணிய கடவுளா வணங்குறவங்க இறப்புக்கு பின்னாடி அது அவங்கள ஆசிர்வதிக்க நிச்சயம் வரும், தண்ணி இருக்குற இடத்துல பசுமை இருக்கும் அந்த ராஜா சிவபக்தர்னால அவருக்கு உகந்த விலமரமும் அங்க இருக்கும்..

அந்த மரத்தோட வேர் பல வருடம் மண்ணுக்குள்ள தன்னை நேசிச்சு வணங்கியவங்கள ஆசீர்வதிக்க தேடிக்கிட்டே இருக்கும். அப்படி தேடும் பொழுது அங்கு நீரோட்டமும் இருக்கும் பட்சத்தில மண்ணுக்கு கீழ ஓடின தண்ணி மண்ணுக்கு அந்த வேர் வழியா வெளிய கசிஞ்சு அந்த புண்ணிய ஜீவனோட இடத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்ட அடையாளமா ஒரு நீரூற்றா இருந்து மக்களோட தாகத்தை தணிக்கும் பா..”..

அவர் அதை கூறி முடிக்க ரெண்டு இடத்தில் எந்த இடமென்று கேட்டனர் மற்றவர்கள்.. மீண்டும் கண்மூடி தியானத்தில் அமர்ந்தவர் தென்னாட்டில் அவரோட ஜீவ சமாதி இல்லை.. அப்படின்னா..?

“மகாராஷ்டிரா”என கூறினான் நீரன்..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்