சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 4


வீட்டு கேட்டின் அருகே வந்திருந்தவள் அவள் வீட்டில் வேலை செய்யும் கண்ணம்மா அழுது வடிந்த கண்களுடன் மூக்கை சிந்தி கொண்டு வெளியேறுவதை கண்டாள்.”கண்ணம்மா என்னாச்சு ஏன் அழற”

“அது கண்ணு ஆமா உன் உதடு வாயி எல்லாம் ஏன் வீங்கி போயி கெடக்கு”

“நா கேட்டத்துக்கு பதில் சொல்லு”

“அழாம என்ன கண்ணு பண்றது. மவராசன் வாழ வேண்டிய வயசுல பொசுக்குனு போய்டானே..பாழும் கெளடுங்க எல்லாம் எமன ஏய்ச்சு போட்டு சுத்திகிட்டு கெடக்க இந்த நாசமா போன சாவு இந்த மனுசனுக்கா வரணும்..”சளியை சேலை முந்தானையில் சிந்தியவர்

“என் மவ கண்ணாலத்துக்கு அள்ளி அள்ளி கொடுத்த மவராசன் அவன மண்ணு கொண்டு போயிருச்சே, கர்ணனுக்கு அடுத்தப்படியா இருந்தானே எவன் கொள்ளி கண்ணு பட்டுச்சோ,பாசத்துல கரையுவானே எமன் பாச கயிற வீசிபுட்டானே” கண்ணம்மா நின்ற இடத்திலே ஒப்பாரியை ஆரம்பிக்க

“ஹேய் மூச்..”என செந்தூரா மிரட்ட கண்ணம்மாவின் வாய் தானாக மூடி கொண்டது..”உன்ன ஏன் அழற அப்டின்னு ரெண்டு வார்த்த தான கேட்டேன். அதுக்கு எதுக்கு ஒப்பாரி வைக்கிற..உன் ஒப்பாரிய கேட்டா யாரோ எவனோ புட்டுகிட்டான் போல”

“அட ஆமா கண்ணு நா என்னானு சொல்ல எதுன்னு சொல்ல.. நட்டுக்கிட்டு நரம்பா நின்னவன் பாடையில புட்டுகிட்டு போயிட்டானே..ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒத்த புள்ளய பெத்து வெச்சிருந்தானே அவன கண்ணாலம் காட்சி செஞ்சு பாக்காம அப்டி என்ன அவசரமோ பாதகத்தி பெத்த மவனுக்கு”

“நீ யார சொல்ற கண்ணம்மா”

“வேற யார நம்ம ஜமீன தா சொல்றேன்.. ஆண்ட வம்சம் கண்ணு அவங்க. இப்டி அவசரமா போய்டானே”

“ஜமீனா யாரு நீரன் அப்பாவா”

“ஆமா டா கண்ணு”கண்ணம்மா மீண்டும் ஒரு ஒப்பாரியை ஆரம்பிக்க அது எதுவும் செந்தூராவின் செவியில் விழவில்லை.இப்ப தான அவன பார்த்துட்டு வரேன்.. என் கிட்ட சண்ட போட்டுட்டு கோபமா போனான்.  இந்நேரம் அவங்கப்பா செத்துட்டாருனு தெரிஞ்சு எப்படி இருப்பான்.நீரனிற்காக அவள் நெஞ்சம் வருத்தப்பட்டது.கண்ணம்மா மாரில் அடித்து கொண்டு ஓட வீட்டிற்குள் வந்த மகளை கண்டு பதறிய தில்லையிடம் கீழே விழுந்து விட்டதாக பொய் சொல்லி சமாளித்தாள்.ஊரே நீரனின் வீட்டில் இருந்தது. செந்தூரா செய்த காரியத்தால் கடும் கோபத்தில் இருந்தவனை தேடி வந்திருந்தான் ராசு.மூச்சு வாங்க தன் முன்னே நின்ற அவனை கண்டு கேள்வியாக புருவம் உயர்த்த ராசுவின் கண்கள் கலங்கியிருந்தது. தட்டு தடுமாறி நீரனிடன் அவன் தந்தையின் மரணத்தை பற்றி தெரிவிக்க அடித்துப் பிடித்து ஓடினான் தன் வீட்டிற்கு. திடீர் மாரடைப்பு ஜெமினியை இந்த உலகத்தில் இருந்து பரலோகத்திற்கு கொண்டு சேர்த்திருந்தது. சடலமாக கட்டிலில் கிடந்த தந்தையை கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தான் நீரன்.

சொந்த பந்தங்கள் ஊர்காரர்கள் அனைவரும் நீரனின் தந்தையுடைய இறுதி காரியத்தில் கலந்து கொண்டனர்.கொல்லி வைக்கும்போது கைகள் நடுங்க தந்தை முகம் பார்த்து மௌனமாகக் கண்ணீர் வடித்தான் நீரன்.அவனுக்கு ஆறுதல் கூறி விட்டு வெளியூரில் இருந்து வந்திருந்த சொந்தங்கள் அனைவரும் விடைபெற உள்ளூரில் இருப்பவர்கள் தங்கள் வீட்டிற்கு நடையை கட்டினர்.  அவனைத் தனியே விடாமல் அவனது நிழல் போல பின்னால் சுற்றினான் ராசு. அவனை மிரட்டி அவன் வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டான் நீரன்.அவனுக்கு தனிமை தேவைப்பட்டது. நீரனுக்கு அடுத்தவர் காண கண்ணீர் வடிப்பது பிடிக்காது.இவ்வளவு நேரம் தன் சோகத்தை தன்னுள் அடக்கி கொண்டிருந்தவன் அனைவரும் சென்றபின் தனது இழப்பை எண்ணி கதறினான்.

குட்டி மேஜையில் ஜெமினியின் சட்டமிட்ட புகைப்படத்தின் முன் காமாட்சி விளக்கு சூடர்விட்டு எரிந்தது.அழுது அழுது ஓய்ந்து அப்படியே தன் தந்தையின் புகைப்படம் இருந்த மேஜையின் கீழே உறங்கி விட்டான் நீரன்.அவன் கண்ணீர் தடத்தை மெல்லிய கரமொன்று துடைத்து விட அரை தூக்கத்தில் இருந்தவன் கண்களை திறந்தான். படக்கென்று எழுந்து அமர்ந்தான். அங்கே அவன் முன்னால் அமர்ந்து இருந்தது செந்தூரா. அரைத்தூக்கத்தில் கனவா என்று கண்களை நன்றாகத் தேய்த்துக் கொண்டு பார்த்தாலும் அங்கே செந்தூரா தான் தெரிந்தாள். மணியைப் பார்த்தால் நள்ளிரவு பண்ணிரெண்டு முப்பது என்றது. இவள் ஏன் இங்கே வந்தாள்.. யாராவது பார்த்தால்? அதிலும் பெண்பிள்ளை இந்த நேரத்தில் தனியாக வரலாமா ஒரு ஆடவன் இருக்கும் வீட்டிற்கு?

“ஹேய் நீ எதுக்கு புள்ள இங்க வந்துருக்க. உனக்கு என்ன ஜோலி இங்குட்டு.யாராச்சும் பாத்தா உங்கப்பாரு மானம் கொடிக்கட்டி பறந்துரும். ஒழுங்கா ஓடுடி ஒம்ம வூட்டுக்கு”

“அய்ய் ஒம்ம மொகறைய பாக்க ஆச பட்டு வந்தேன்னு நெனப்போ.. என்னமோ நாய வெரட்டுற மாறி என்னிய வெரட்டுற.. நீ எதயும் சாப்டுருக்க மாட்ட. அதான் சோறு கொண்டாந்தேன்” தன் முன்னால் பேசுபவளின் முகத்தை தந்தை புகைப்படத்தின் முன்னிருந்த விளக்கு ஒளியின் தயவால் பார்த்துக்கொண்டிருந்தான் நீரன். அந்த நேரத்தில் அவளை பார்த்தது அதிர்ச்சி என்றால் அவள் வரவிற்கான காரணத்தை கூறியது இன்னும் பேரதிர்ச்சியாக இருந்தது.அவளைக் கூர்மையாக பார்த்தவன்

“சோத்துல என்ன மருந்து கலந்துருக்க.சாப்ட வேகத்துக்கு உசுரு போயிரும்ல. இழுத்துக்க பறிச்சுக்கனு கெடக்க கூடாது அம்மணி அதான் கேக்குறேன்” அவன் கேட்டதன் விளைவாக அவள் கண்கள் கலங்க முற்பட அதை அவனுக்கு தெரியாமல் வேறு புறம் திரும்பி மறைத்தாள்.

“பாவமேனு செவுரு எகிறி குதிச்சு சோறு கொண்டாந்தா என்ன பாத்து நாக்கு மேல பல்ல போட்டு பேசிப்புட்டல்ல. என்னிய பாத்தா சோத்துல வெசத்த வைக்குற மாறியா இருக்கு..நீ தின்னா என்ன செத்தா எனக்கென்னன்னு வுடாம வந்ததுக்கு எனக்கு தேவதான் இந்த ஏச்சும் பேச்சும் கொலகாரி பட்டமும்”எழுந்திருக்க போனவளை கரம் பற்றி எழவிடாமல் தடுத்து

“மொத எம்பூட்டு தோட்டத்தயும் வெளச்சளயும் அம்புட்டு கேவலமா எகத்தாலமா பேசுனவ இப்ப சோறு கொண்டாந்தா என்னானு நெனைக்க.நீ அப்டி நல்லவ இல்லயே.என்ன திடீர் கரிசனம். நா சாப்டா என்ன பட்டினி கெடந்து செத்தா என்னடி உனக்கு எனக்குன்னு இனிமே யாரு இருக்கா”

“ஏன் நீரா கூறுகெட்ட தனமா பேசுற.அப்டி ஒன்னும் நீ அனாதயா ஆயிரல.”

“அனாத இல்லாம ஆயிரம் பேரு எம் பின்னாடி நிக்கிறாங்களோ”

“ஆயிரம் பேரு நிக்கிறாங்களோ ஒக்காருறாங்களோ எனக்கு தெரியாது. ஆனா நா நிப்பேன்..”

“என்னாச்சு செந்தூரா உனக்கு”அமைதியாக அவள் முகம் பார்த்து கேட்க

“ஒன்னும் இல்ல நீ சாப்டு’

“எனக்கு வேணா புள்ள.. நீ வூட்டுக்கு போ”

“ப்ச் என்ற வூட்டுக்கு போவ எனக்கு வழி தெரியும். நீ மொத சாப்டு”என்றவள் அவளே தூக்கை திறந்து சோற்றை பிசைந்து உருண்டை பிடித்து அவன் கையை இழுத்து பிடித்து உள்ளங்கையில் உருண்டையை வைக்க எதுவும் பேசாமல் மௌனமாக சாப்பிட ஆரம்பித்தான் நீரன். உண்டு முடித்ததும் அவன் வீட்டில் அவன் கைலியில் துடைத்துக்கொண்டவள்

“தெனம் இப்டி வர முடியுமானு எனக்கு தெரியாது.ஒழுங்கா சாப்டு நீரா. யாரும் இல்லன்னு நெனச்சு மறுகாத.நா..நாங்க இருக்கோம் புரியுதா”அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவள் தூக்கை தூக்கி கொண்டு தன் வீட்டிற்கு ஓடினாள். அவள் பத்திரமாகப் போய் வீடு சேருகிறாளா என தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் நீரன். என்ன நடந்தது எப்படி நடந்தது என புரியாவிடினும் யாருமற்ற நேரத்தில் வேண்டாத வரவாக வந்தவள் அவன் கலங்கிய இதயத்திற்கு ஆறுதல் அளித்திருந்தாள். ஜெமினியின் காரியம் எல்லாம் முடியும் மட்டும் அவளை காணவே முடியவில்லை.

அன்று ஒருநாள் இரவில் விளக்கொளியில் பார்த்த முகத்தை மீண்டும் பார்க்க நெஞ்சம் ஏங்கியது.ஏக்கத்தை தன்னுள் பூட்டி வைத்தான். இந்த ஏக்கம் எங்கே கொண்டு சென்று முடிக்குமென அவனுக்கு தெரியாதா.காரியம் அனைத்தும் முடிந்த பின் ஒரு நாள் அவனை தேடி அவனது தோப்பிற்கு வந்தாள் செந்தூரா. தன் முன் வந்து நின்றவளை வா என்று வரவேற்காமல் ஏன் வந்தாய் என விசாரிக்காமல் வெறும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் நீரன்.அவன் முகத்தை ஓரிரு நிமிடங்கள் பார்த்தவள்”எக்ஸாம் வந்துருச்சு அதான் உன்ன பாக்க வரல. மாங்கா தோப்பு ஓனாரு இப்ப தெளிஞ்சிடீரு போல. முகத்துல அந்த பழைய கவல இல்ல. என்ன நீரா நா எதுக்கு வந்தேன்னு கேக்க மாட்டியா”

“அதான் வந்தவ வந்துட்டல நீயே சொல்லு புள்ள எனக்கு ஆயிரம் ஜோலி கெடக்கு”

“உன் ஆயிரம் ஜோலியில தீய வைக்க.அம்சமா அம்மன் கோயில் தேராட்டம் நா ஒருத்தி நிக்குறது கண்ணுக்கு தெரியலயோ.”

“ஸ்ஸ்ப்பா சரி சொல்லு கவுண்டர் வூட்டு காத்து என்ன ஜமீன் பக்குட்டு வீசுது.. தென்றலா இருந்தா தீண்டிட்டு போவும் சூராவளியா இருந்தா சுருட்டி எடுத்துக்கிட்டுல போவும்”

“அதுவே மூச்சு காத்தா இருந்தா உன் உசுருல கலந்து ஓடும் நீரா.”அவளை கலவரமாக பார்க்க

“நீரா எனக்கு உன்ன புடிச்சிருக்கு. ஐ திங்க் ஐம் பாலிங் லவ் வித் யூ.”

“நோ.. ஐ டோன்ட் லவ் யூ..”

“நீரா’

“என்னடி நீரா அப்டி என்ன அவசரம்னு கேக்குறேன். படிக்குற வயசுல லவ்வு ஜவ்வுனு. இதுக்குத்தான் பள்ளிக்கோடம் போறியலோ அம்மணி. அதும் இங்கிலிஷு பள்ளிக்கோடம்.எத கத்துக்குறியோ இல்லயோ இத மட்டும் ஊருக்கு முன்ன கத்துக்குறிங்கடி. ஆமா இத்தன நாளு என்னிய கண்டாலே ஆவாதே உனக்கு இப்ப மட்டும் என்ன லவ்ஸு.”முன் நடந்தவைகளை மனதில் வைத்து பேசுகிறான் என்று புரிந்து கொண்டவள்

“தெரியல நீரா உன்ற அப்பா இறந்துட்டாருன்னு கேள்வி பட்டதும் மனசு உன்னிய நெனச்சு கெடந்து தவிச்ச தவிப்ப என்னானு சொல்லுவேன். சிறுக்கி இவ மனுசுல உன்ற மேல எனக்கே தெரியாம ஆசைய வளத்து வெச்சிருக்கேன் நீரா.படிக்குற வயசுல லவ்வு வந்தா நா என்ன பண்றது.நீ சரின்னு மட்டும் சொல்லு நீரா நா படிச்சு முடிச்சுட்டு என் அப்பா கிட்ட சொல்லி நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”கண்களில் ஆசையை தேக்கி வைத்து அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள் செந்தூரா.இதுவரை கோபக்காரி அடங்காபிடாரி திமிரபிடித்தவள் அகம்பாவி சண்டைக்காரி என அவளை பார்த்து கொண்டிருந்த நீரனின் பார்வை புதிதாக தன் முன்னால் நிற்கும் காதல்காரியை காண்கையில் அவன் மனம் வலிக்கதான் செய்தது. வலியை பார்த்தால் அவள் வாழ்க்கை என்னாவது? மனதை கல்லாக்கி கொண்டு அவள் மனதில் பாராங்கல்லை இறக்கினான்.

“தோ பாரு புள்ள உங்கப்பன் பெரிய கவுண்டருக்கு விஷயம் தெரிஞ்சா என்ன நடக்கோம்னு தெரியும் தானே. பொறவு எதுக்கு இப்டி பேசிக்கிட்டு திரியுற. நல்ல காலத்துலயே உங்கப்பனுக்கு நாங்கலாம் எளக்காரம்தேன்.பாரு அம்மணி உனக்கும் எனக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது.படிச்சு போட்டு உன்ற அப்பன் பாத்து வெச்சவனுக்கு கழுத்து நீட்டு. இந்த நீரன மறந்து போட்டு ஜோலிய பாரு..”அவள் முகத்தை பார்த்து பேசியவன் அவளுக்கு முதுகு காட்டி நின்றான். இந்த வயதில் வரும் காதல் நிலைத்து நிற்பது நூரில் ஒருவருக்கு மட்டுமே.திடீரென தந்தையை இழந்து அனாதையாகி நிற்கும் அவன் மேல் பரிதாபதில் காதல் பூத்து விட்டதென நினைத்தான்.மேலும் அவனால் சொல்ல முடியாத காரணம் ஒன்றும் உள்ளது அவளை மறுத்தலிக்க.அவன் முதுகில் பட்டென்று மோதிய பட்டுடல் ஒன்று தனது தளிர் கரங்களால் அவனது இடையை கட்டி கொண்டு

“நீ என்ன சொன்னாலும் சரி. நா உன்ன விட மாட்டேன்”என்றது. நீரனிற்கு கோபம் தலைக்கேரியது. இடையை கட்டி கொண்ட கரத்தை பிடித்து முன்னே இழுத்து தன் மேல் சட்டையை கழற்றினான்.

“ஹேய் என்ன பண்ற நீரா”

“எனக்கு உன்ற லவ்வு மேல நம்பிக்க இல்ல. நா நம்புற அளவுக்கு உன்ன எனக்கு கொடுத்து போட்டு போ புள்ள. பொறவு சொல்றேன் ஐ லவ் யூன்னு.”

“ஏன் நீரா இவளோ மட்டமா நடந்துக்குறா..நானா எறங்கி வந்தா என் மனச போட்டு மிதிக்குறல்ல.இப்ப என் லவ் உண்மன்னு தெரியுனும் அவ்ளோ தானே.. சரி வா பம்புசெட்டுக்கு போலாம். இல்ல ராத்திரி உன்ற வூட்டுக்கு வரேன் அப்ப நம்புவியா”அவளின் காதல் ஆழம் அவனை அசைத்து பார்த்தது.எந்த ஆண்களிடமும் நின்று கூட பேசாத செந்தூரா அவனிடம் காதல் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் யாசிக்கும் பிச்சையை கூட அளிக்க முடியாத பெரும் பிச்சைக்காரனாக அவன் நிலை இருக்கிறதே.அதோடு இந்த வயதில் என்ன கன்றாவி பிடிவாதம் இது.அவள் விடமாட்டாள் என்பதை உணர்ந்தவன்

“அப்டியே செவுனிய காட்டி சாத்தி புடுவேன். அகம்பாவம் புடிச்ச கழுத. அப்டி என்னடி அவசரம் இந்த வயசுல. ஆம்பள சொகத்துக்கு”அவ்வளவு தான் மாங்காய் மரத்தின் கீழே கிடந்த கூறான கல்லை எடுத்து அவன் நெஞ்சில் வயிற்றில் என நாளைந்து இடத்தில் கோடு போட்டவள் அவனை ரத்த களரியாக்கி விட்டு போய் விட்டாள்.அந்த இடத்தை மட்டுமல்ல ஊரை விட்டே.நீரன் அதன் பின் படிப்பை விட்டவன் தன் தோட்டத்தை பார்த்து கொண்டு தனது பிரச்சனைக்கு முடிவு தேடி அழைத்தான்.அவளை நினைக்காத நாள் இல்லை.அவள் படித்து முடித்து ஊருக்கு வந்த பிறகும் அவளை பார்வையால் மட்டுமே தொடர்கிறான்.

“ஏன்டா கொழுப்பெடுத்தவனே அன்னைக்கு எம்புட்டு தூரம் உன்ன கெஞ்சுனேன்.என்ன வார்த்த பேசிபுட்ட என்னிய பாத்து. அன்னிக்கு வந்த கோபத்துக்கு உன்ன வெட்டி பொலி போட்ருபேன். லவ் பண்ணி தொலைச்ச பாவத்துக்கு விட்டுட்டேன்.”

“அம்மணி அப்ப நமக்கு படிக்குற வயசுங்க.நா எம்புட்டு காட்டு கத்து கத்துனாலும் ஒம்ம காதுல அதெல்லாம் ஏறாதுங்க.எப்படியும் நாங்க படிக்க போறது இல்லனு தெரியும் அம்மணி. படிக்காத எனக்கு படிச்ச பொண்டாட்டி கெடச்சா நல்லதுதானுங்க. அதான் நீங்க மனச போட்டு அலட்டிக்காம படிக்க வெச்சேனுங்க. இப்ப படிச்சு போட்டு அடுத்தவன் காலு கைய வாங்கிட்டு திரியுறிங்க. அதுக்கு பேசாம என் உசுர வாங்கிட்டு என் கூடவே இருங்களேன் என்ன அம்மணி நா சொல்றது”

“குரவலைய நசுக்கி போடுவேன் நாதாரி ஆருகிட்ட உன்ற வாய் மாயாஜாலத்த காட்டுற..வகுந்து போடுவேன் வகுந்து பண்ணாட.. என் வாழ்க்கையில நா செஞ்ச தப்பு இல்ல பாவம் உன்ன லவ் பண்ணது இனி செத்தாலும் அந்த தப்ப செய்ய மாட்டேன்..”அவள் குரலில் அவ்வளவு பிடிவாதம்.அவள் தந்த அடிக்களை வாங்கி கொண்டவன்

“நீ எனக்கு தான் செர்ரி”என்றவன் அந்த இடத்திலிருந்து சென்றிருந்தான்.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்