சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 8


” நீ சொல்லி நா கேட்கணுமா போடா பண்ணாட”இதான் செந்தூரா கடைசியாக பேசிய வார்த்தை.தனது வலது கை நடு விரலை மடக்கி விரல் முட்டியில் செந்தூராவின் இரு புருவ முடிச்சுக்களின் மத்தியில் உள்ளே ஆகினை என்ற தசையில் டப்பென்று தட்ட மூர்ச்சையாகி அவன் மேலேயே விழுந்தாள். அவளை தாங்கி கழுத்தில் முகம் புதைத்தவன் ஆழ்ந்த மூச்சை இழுத்து அவள் வாசத்தினை சுவாசித்து மலரென மங்கையை சோபாவில் கிடத்தி விட்டு வெளியே சென்றான். இனி அவனே திரும்ப வந்து மயக்கத்தை தெளிவுக்கும் தசையை தொடும் வரை அவள் அசைய போவதில்லை.அவன் வர்ம கலை எதற்கு கற்றான் இப்பொழுது எதற்கு உபயோகிக்கிறான்?இதான் விதியோ? நீரன் வெளியே செல்ல அவன் பின்னே வீங்கிய உடலோடு ஓடினான் ராசு

“மச்சான் டேய் நில்லுடா உனக்கென்ன விசுக்கு விசுக்குன்னு நடக்குற.. எனக்கு அப்டியா? அடி பின்னி எடுத்துட்டா.என்ன கை தாங்கலா கூட்டிட்டு போடா”

“எட்டி குறுக்கால மிதிச்சு போடுவேன் நாதாரி.. வெரசா வந்து வண்டில ஏறுடா இல்ல வண்டிய உன்ற மேல ஏத்தி புடுவேன்”

“அட எடுபட்ட நாயே உனக்கு கடனா தான் என்ற உசுரு எழுதி கொடுத்திருக்கேன்.கடன கடைசி வரைக்கும் கொடுக்காம கட்டையில அனுப்பிருவ போல..”முனங்கி கொண்டே வண்டியில் ஏறினான் ராசு.

“அருமை பெருமையா வளத்த புள்ளையபாதகத்தி இவ தொலைச்சிப் புட்டேனே..ஆத்தாகாரி ஒரமாட்டும் இருந்திருந்தாஓய்யார கொண்டையில புருஷன் குண்டு மல்லி சொருகிருபானே..அய்யா ஆசையா வளத்த கன்னுகுட்டிய எந்த கட்டையில போனவன் கடத்திட்டு போனானோ அவன் மண்டையில மசுரு கொட்டி போக அவன் கண்ணுல பூ வுழுக அவன் மூக்கு மூஞ்சந்தி பக்கம் போனாலே மூச்சு நின்னு போகஅவன் வாய் திங்க போறப்ப பொளந்த மேனியா பொளந்துகிட்டு போக”மூக்கை சிந்தி சேலையில் துடைத்து கொண்டார் கண்ணம்மா.

தில்லை நாயகம் அவரின் ஒப்பாரியை கேட்டு இன்னும் கொஞ்சம் கடுப்பாகி அமர்ந்திருந்தார். காலையில் எழுந்ததும் அவர் கண் விழித்தது நீரன் செந்தூரா சேர்ந்து நிற்குமாறு எடிட் செய்திருந்த போஸ்டரில் தான்.அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவர் தனது அறை சுவரில் ஒட்டப் பட்டிருந்த போஸ்டரின் அருகே ஓடினார். அதில் எழுதிருந்த வாசகங்கள் அவரின் ஈரக்குலையை நடுங்க வைத்தது.குகா என்று அவர் கத்திய கத்தலில் வெளியே கம்பு சுற்றி கொண்டிருந்த குகன் பதறியடித்து தில்லையின் அறைக்கு ஓடி வந்தார்.தில்லை சுவரை வெறித்தவாறு நிற்க அவர் அருகே சென்ற குகனின் பார்வையில் விழுந்தது அந்த போஸ்டர். வாசகங்கள் அவரை மிரட்டி பார்த்தது. அதிர்ச்சி நிறைந்த கண்களுடன் அப்படியே திரும்பி தில்லையை பார்த்தார். இது உண்மையா என அக்கா கணவரை வினவியது அந்த பார்வை. தில்லை விடு விடுயென்று நடந்து சென்று அறைக்கதவை அடைத்தவர் குகனிடம் வந்து அந்த வாசகங்கள் பற்றியும் அதன் பின்புலன் பற்றியும் கூறி முடித்தார்.என்றோ யாரோ செய்த பாவம் தன் அருமை மகள் தலையில் விடியுமென அவர் தான் கண்டாரா என்ன?குகன் பரபரப்பாக ஆட்களை அனுப்பி நீரனை தேட சொன்னார். ஊரையே சல்லடை போட்டு தேடும் பொழுது அரசல் புருசலாக விஷயம் கசிந்து

நபர் 1 “ஜமீனு மவன் பெரிய கவுண்டரு மகள கடத்தி புட்டானாம்”

நபர் 2 “அடியாத்தே என்னடி இவளே சொல்லுற நெசமாளுமா”

நபர் 3 “பொறவு.. ஊரே அத பத்தி தானடி பேசுது..நீரன் பயலயும் காணலையாம்.. கூடவே சுத்துவானே அவன் கூட்டாளி பய அவனையும் காணலையாம்”

நபர் 4 “அட கெரகமே நம்ம நாட்டாம மவனும் இதுல கூட்டோ..மனுஷன் மானஸ்தன் ஆச்சே பய தப்பு செஞ்சு புட்டானு தெரிஞ்சா உத்தரத்துல தொங்கிருவாறே”

நபர் 5″நேத்திக்கு அந்த ராங்கி நீரன் பயல சுட்டு புட்டாள்ள அதுக்கு தான் அவள தூக்கிட்டு போயிருப்பான் போல. வயசு புள்ளைய தூக்கிட்டு போயி என்னத்த பண்ணுவான்”

நபர் 6 “ம்ம்ம் புள்ளைய கொடுப்பான்.. அந்த நீரன் பய நேத்து அந்த புள்ளய பாத்த பார்வைய வெச்சே எனக்கு பகிருன்னுச்சு. பழிவாங்கி புட்டான் பாத்தியாடி”காற்றை விட வேகமாக விஷயம் பரவி மாயி படம் போல எவனோ ராக்கம்மா வீட்ல இருந்து குதிச்சு ஓடுறானாம் ல ஆரம்பிச்சு எவனோ ராக்கம்மாவ வெச்சிருக்கான் என்பது போல் நீரன் செந்தூரவை வைத்துள்ளான் என பேச்சு வந்து நின்றது.தில்லை தன் மகளின் நிலை எண்ணி கலங்கி அமர்ந்திருந்தார். அவரால் இதைப் பற்றி வெளியே சொல்ல முடியவில்லை.

குகனிடம் மட்டும் விஷயத்தை கூறியவர் காதும் காதும் வைத்தது போல் செந்தூரவை தேடி கண்டுபிடிக்க சொன்னார். ஊரில் உள்ளவர்கள் நேற்றைய சம்பவத்திற்கு பழிவாங்கவே நீரன் செந்துராவை கடத்தி உள்ளான் என கதை கட்டினார்கள்.நாட்டாமை வேறு மானம் போச்சு மறுவாத போச்சு என்ற கௌரவும் என்ன கெம்பிரம் என்னானு பொண்டாட்டி கிட்ட கெடந்து குதிச்சுட்டு இருக்காரு..ஊரே பரபரப்பாக இருக்க தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு நீரனும் ராசும் வந்து கொண்டிருந்தனர்..

“மச்சான் நான் தெரியாம தான் கேக்குறேன் உனக்குதான் மயக்க மருந்தே இல்லாம மயக்கம் போட வைக்க தெரியுதுல.  அப்ப ஏன்டா நேத்து என்ற காசுக்கு ஒல வெச்ச..”

“டேய் நா வர்ம கலைய வெச்சு அவள தட்டி தூக்குறது என் நோக்கம் இல்ல.அப்டி செய்யும் போது அவளுக்கு வலிக்கும்டா. அந்த வலிய கொடுக்க கூடாதுன்னு தா மயக்க மருந்து வாங்கியார சொன்னேன்.. ஆனா பாரேன் அவள, என்னா திம்மாக்குனு கடத்திட்டு வந்து பலி கொடுக்க போறேன்னு சொல்றேன் போடா இவனேனு அசால்ட்டா என்ன தாண்டி போறா..”

“ரொம்ப பொழக்காத..நீ பாத்த வேலைக்கு ஊரே அந்தலி சந்தலியா அடிச்சிக்கிட்டு கெடக்கும். அந்தாளு நாலா திக்குக்கும் ஆள அனுப்பிருப்பான்.. “

“அதுக்குள்ள கவலபடாத மச்சான்.. இன்னும் பாக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு”

“செத்து மேல போயி தானே பாப்பேன்”நீரன் முறைக்க ராசு வாயை மூடிக்கொண்டான்.உள்ளே வந்தவன் முதல் வேலையாக செந்தூரவிற்கு மயக்கத்தை தெளிவித்தான். மலங்க விழித்தவள் இம்முறை அவன் மேல் பாயவில்லை. அமைதியாக அமர்ந்து கொண்டாள். அவளின் கண்கள் அங்கிருந்த உணவு பொட்டலத்தின் மேல் விழுந்தது.அந்த பார்வை நீரனின் மனதை அறுத்தது.அருகில் கிடந்த உடைந்த மேஜையை அவளருகில் இழுத்து போட்டவன் எக்கி உணவு பொட்டல்லத்தை எடுத்து பிரித்து மேஜையில் வைத்தான்.இரவு உடையாக முழு நீள பேன்டும் முழுக்கை டி ஷர்ட்டும் மிக்கி மௌஸ் பிரிண்ட் ஆடையை அணிந்திருந்தவள் சட்டையில் கை துடைத்து கொண்டாள்.அதன் பின் மரியாதைக்கு கூட வேணுமா என்று அவர்கள் இருவரை கேட்க்காமல் அவள் உணவை அள்ளி வாயில் அமுக்கினாள். இடையே விக்கல் வர அவளுக்கு தண்ணீர் பாட்டிலை திறந்து கொடுத்தான் நீரன். பேசாமல் வாங்கி குடித்தவள் உணவை காலி செய்து விட்டு காலாற நடக்க ஆரம்பித்தாள்.

“ஏன்டா நீரா இவ என்ன கடத்திட்டு வந்த மரியாத கூட இல்லாம நல்லா தின்னா, தின்னது செரிக்க உலாதுரா.. என்னடா நடக்குது இங்க”

“அவளுக்கு உள்ள சுருங்குது.. ஆனா கேடி வெளிய காட்ட மாட்றா. இப்ப அவ நடக்கல. நம்மள எப்டி கவுக்கலாம்னு அம்மணி பிளான் போடுறாங்கோ”

“அதுக்கு முன்னாடி நாம சாப்டு தெம்பா இருக்கலாம்டா”என்றவன் உஷாராக நன்றாக சாப்பிட்டு அவளிடம் அடி வாங்க தன்னை தயார் செய்து கொண்டான்.உண்டு முடித்த கையை கூட இருவரும் கழுவவில்லை அவர்கள் முன் வந்து நின்றாள் செந்தூரா. அவளை தாண்டி சென்று நீரன் கை கழுவ அவன் பின்னால் வந்து நின்றாள்.

“நீரா எதுக்கு என்ன கடத்துன? என்ன பண்ண போற? ஏதும் எனக்கு தெரில.. பரவால்ல இப்ப என்னதான் பண்ண போற? அத மட்டும் சொல்லிரு.. எதா இருந்தாலும் நா ரெடியா இருப்பேன்”திமிராக தன் முன் நிற்பவளை ரசிகாமல் இருக்க முடியவில்லை அவனால்.நிதானமாக வாயை துடைத்தவன்

“தாலி எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்..சேலை எடுத்துட்டு வந்துட்டேன்.. என் கண்ணுல அளவெடுத்து ப்ளௌஸ் தைக்க கொடுத்தேன்.. ஏரக்குறைய சரியாத்தான் இருக்கும்.. குளிச்சிட்டு அத கட்டிட்டு வந்து எனக்கு கழுத்த நீட்டு..”

“சரி பாத்ரூம் எங்கன இருக்கு”

“என் கூட வா”அவளை அழைத்து கொண்டு ஒரு அறைக்குள் சென்றான். ஒருக்காலத்தில் கண்டிப்பாக மாஸ்டர் பெட்ருமாக இருந்திருக்க வேண்டும்.நல்ல பெரிய அறை. அறைக்கு நடுவே குட்டி செயற்கை குளம் இருந்திருக்க வேண்டும்.இப்பொழுது தூசி அண்டி சிலந்தி வலை பின்னி குடும்பம் நடத்தி கொண்டிருந்தது. பெரிய பளிங்கு தூண்கல் இருந்தன. அதும் தூசி பிடித்து இருந்தன. கட்டில் இருந்தது ஆனால் உடைந்திருந்தது. திரை சீலைகள் கிழிந்து கர்ண கொடூரமாக இருந்தன.மனிதன் இந்த மளிகையை பயன்படுத்தி எத்தனை ஆண்டுகள் ஆனதோ தெரியவில்லை.அறையே இந்த அழகேன்றால் குளியலறை எந்த லட்ச்சனத்தில் இருக்கும்?

“பாத்ரூம் எங்க.. எனக்கு வயிறு வலிக்குது”.. குளியலறையோடு கூடிய கழிவறை இருந்தது..சத்தியமாக கன்றாவியாக தான் இருந்தது. நீரன் உள்ளே சென்று தண்ணீர் பைப்பை திறந்தான் ஆச்சரியம் காற்றுக்கு பதில் நீர் வந்தது.தண்ணீர் தொட்டியை கையால் தேய்த்து கழுவி நீர் பிடித்தவன்

“அம்மணி போயி குளிச்சு போட்டு வாங்க”

“கோடி கொட்டி கொடுத்தாலும் இந்த கக்கூஸ்ல கக்கா போக மாட்டேன்..”

“மன்னிச்சுக்கோங்க அம்மணி தங்கத்துல கக்கூஸ் கட்டி கொடுக்க என்ற கையில காசு இல்லங்க”

“ஷீட்..இதுல மனுஷ பையன் போவானா.. அறிவு இல்ல.. நீ ஆம்பள எங்க வேணா போலாம்.. நா அப்டியா.. ஒழுங்கு மறுவாதையா நா குளிக்க பாத்ரூம் போக வேற ஏற்பாடு செய்ற இல்லனா”அவள் பற்களை கடிக்கும் சத்தம் வெளியே கேட்டது. ஒரு பெண்ணாக அவள் சங்கடம் அவனுக்கு புரியவே செய்தது.அவனே அங்கிருந்த கட்டை விளக்குமாரில் கழிவறையை தேய்த்து கழுவி

“இதுல போங்க.. குளிக்க வேற ஏற்பாடு செய்றேன்”என்றவன் வெளியே சென்று விட்டான். வயிறு வலியை கிளப்ப பட்டும் படாமல் அதில் அமர்ந்தவள் நெளிந்து கொண்டே வேலையை முடித்து வெளியே வந்தாள்.நீரனின் குரல் வெளியே கேட்டது.. அங்கே சென்றால் நீரன் மாளிகையின் அருகே இருந்த இரண்டு அவாரம் பூ மரத்தின் இடையே பழைய துணியை சுற்றி கட்டி வாளியில் தண்ணீர் எடுத்து வைத்திருந்தான். கோபம் கொப்பளிக்க

“ஏன்டா உன்ற மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க.. காதலன் பிரபு தேவானு நெனப்போ”

“அதுக்கு நீங்க நக்மாவா இருந்துருக்கணும்.மாசமான நாக பாம்பு மாறி இருந்துகிட்டு ஓவர் இமாஜினேஷன்.இங்க யாரும் வர மாட்டாங்க.. சுருக்கா குளிங்க.. மணி ஆவுது. தப்பிக்க ட்ரை பண்ண வேணா. நா அங்க தான் இருப்பேன்”

“நா குளிக்குறத பாத்துட்டு நிக்க போற”

“சீ சீ பொம்பள எரும குளிக்குறத பாக்குற அளவுக்கா நா காஞ்சி கெடக்கேன்”

“செருப்பு பிஞ்சி போயிரும்.. நாதாரி போடா அங்குட்டு”அவன் அந்த பக்கம் நகர்ந்தும் அவன் மேல் கண்ணை வைத்து ஒன்றும் பாதியுமாக குளித்தவள் நீரன் கொடுத்த சேலையை மேல் போர்த்தி கொண்டு உள்ளே ஓடி விட்டாள். அவன் கண்களால் எடுத்து அளவு கனகச்சிதமாக அவளுக்கு பொருந்தியது.ஈரம் சொட்டும் கூந்தலுடன் சேலையை சுற்றி கொண்டு ஒப்பனை இல்லா முகத்துடன் வந்தவளை கண்டு சிரிப்பு வந்தது ராசுவுக்கு.அவளை நீரன் அங்கிருந்த பூட்டிய அறைக்குள் கொண்டு சென்றான்.காலை வேளையில் கூட அறை கும்மிருட்டாக இருந்தது.

ராசு ஒரே ஒரு அகல் விளக்கை கொளுத்த அந்த ஒளியில் அறையை நோட்டம் விட்ட செந்தூரவின் கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ராசு மஞ்சள் கயிரில் கோர்திருந்த தாலியை நீரனிடன் கொடுக்க அதை வாங்கியவன் ஒரு நொடி தயங்கி செந்தூராவின் கழுத்தில் கட்டினான்.எப்படி நடக்க வேண்டிய திருமணம் இப்படி குருட்டாம் போக்கில் நடந்து முடிந்தது. கடத்தி கொண்டு வந்தவனை கணவனாக்கி கொண்டாள் செந்தூரா. தாலி கழுத்தில் ஏறியதும் அவள் வெற்று நெற்றியில் செந்தூரத்தை வைத்தான் நீரன்.விளக்கின் மஞ்சள் ஒளியில் அவள் முகம் பளிச்சென மின்னியது.நெஞ்சு கூட்டின் மேல் தொங்கிய தாலியை தூக்கி பார்த்தவள்

“நீரா என்ற அப்பாரு மானத்த வாங்கி என் கடத்திட்டு வந்து தாலி கட்டிடல்ல. ஒருவேள நமக்கு நிச்சயம் முடிஞ்சிருந்தா கூட நீ இப்டி ஏதாச்சும் ஒன்னு செஞ்சு என்ற குடும்பத்த அவமான படுத்திருப்ப. இப்ப ஊர்ல எல்லோரும் என்ன சொல்லுவாங்க.சுட்டவளையே தூக்கிட்டு போயி தாலி கட்டிருக்கான் பாரு நீரனு உன்ன தூக்கி வெச்சு தான் பேசுவாங்க. என்னயும் என்ற குடும்பத்தையும் கேவலமா காறி துப்புவாங்க. இதான உனக்கு வேணும்.. நீ யோசிக்கலாம் நா எப்டி டக்குனு தாலி வாங்கி கிட்டேன்னு ஏன் தெரியுமா..”அவன் முகத்தை குறுகுறுவென பார்த்தவள்”ஏன்னா நா உன்ன விரும்புறேன் அதனால தான். நீ அன்னிக்கு என்ன பேசுன பேச்சுக்கு பழி வாங்க தான் உன்னிய நேத்து சபையில அவமான படுத்தினேன். இப்பவும் உன்ற மேல என்ற கோவம் அடங்கள. உன்ன கொன்னா நா உள்ளார போவ மாட்டேனு வாய்ப்பு இருந்தா, என்ன கடத்திட்டு வந்த உன்ன வெட்டி போட்ருப்பேன். நீ எத நெனச்சு தாலி காட்டுனியோ எனக்கு தெரியல. ஆனா நா எத நெனச்சு தாலி வாங்கிகிட்டேன் தெரியுமா..நீ அழவுனும் நீரா ஏன்டா இவள கடத்திட்டு வந்தோம் இவ குடும்பத்த அவமான படுத்துனோம்னு நீ கதரனும் அதுக்கு தான்.. உன்ன பழி வாங்குவேன் நீரா. ஆனா ஒவ்வொரு தடவையும் ஐ லவ் யூ சொல்லுவேன்.. இப்ப உன் கையாள தாலி வாங்கிட்டு உன்ன பழிவாங்க ரெடி ஆயிட்டேன்.. சோ மொத ஐ லவ் யூ இப்ப சொல்றேன்.. ஐ லவ் யூ நீரன்”அவளுக்காக அவன் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த செந்தூர நிற சேலையில் கண்களில் வன்மதோடு தன் காதலை கூறினாள் செந்தூரா.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்