சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 18


“என்ன நீரா இப்ப தான் மேரேஜ் பண்ணி மூனு வாரம் ஆவுது.. அதுக்குள்ள டிவோர்ஸ் அப்லே பண்ண வந்து நிக்குற.. என்ன நெனச்சிட்டு இருக்க உன்ற மனசுல..அந்த பொண்ணோட அப்பாவ பத்தி தெரியும்ல. அந்தாளுக்கு ஊரு பூரா செல்வாக்கு இருக்குடா.. பெரிய எடத்துல எல்லாம் அந்தாளுக்கு பவர் இருக்கு.. எதுக்கு வீணா அந்தாள பகச்சிக்குற..?”நீரனின் குடும்பத்து வக்கீல் அவனை காய்ச்சி எடுத்து கொண்டிருந்தார் அவரின் வீட்டு ஆபீஸ் அறையில் அமர்ந்து கொண்டு..

ஊமைக் குறவன் போல அவர் முன்பு வாய்மூடி அமர்ந்திருந்தான் நீரன். அவனின் அதிரடி திருமணத்தை பற்றி நன்கரிந்த வக்கீலுக்கு தில்லையை நினைத்தால் தான் சோறு தண்ணி தொண்டையில் இறங்க மறுத்தது. எப்பேர்ப்பட்ட பெரிய தலைக்கட்டு அவர். அவரின் கண்களிலே விரலை விட்டு ஆட்டும் நீரனின் திறமையை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டாலும் வெளியே அவனை எச்சரிக்க தவறுவதில்லை வக்கீல் பார்த்திபன்.மிஸ்டர் பார்த்தி தனது வாத திறமைகள் அனைத்தையும் கொட்டி நீரனிடம் விஷயத்தை கறக்க பார்த்தார்.அந்த பக்கி வாங்கிய அடியின் காரணமாகவோ அல்ல அளவுக்கு மீறி கலக்கிய வயிற்றின் உபாதையாலையோ பேசும் சக்தியற்று வெறுமனே உட்க்கார்ந்து வக்கீலை கொலைக்காரனாக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.அவனின் உடலில் உள்ள வீக்கமும் சோர்வும் செந்தூராவை பற்றி அரசல் புரசலாக அறிந்து வைத்திருந்த பார்த்திக்கு கிலியை கொடுத்தது.

ஏதோ சின்ன தகறாரு அவள் நீரனை பொளந்து கட்ட அவனோ விவாகரத்து வேண்டி தன்னிடம் வந்துள்ளான் என அவரின் வக்கீல் மூளை கூறியது.அவன் வாயை திறக்க போவதில்லை என புரிந்து கொண்ட பார்த்தி

“நீரா நீ என்ன எப்டி பாக்குறியோ எனக்கு தெரியாது ஆனா நா உன்ன கூட பொறந்த தம்பி மாறி பாக்குறேன்.. இந்த டிவோர்ஸ் எல்லாம் வேணா..கொஞ்ச நாள் போவட்டும்”நாயமாக பேசி அவனை வழிக்கு கொண்டு வருவதற்குள் அவருக்கு நாக்கு தள்ளியது. நைச்சியமாக பேசிக்கொண்டே இருக்கும் போது அவரின் அரைக்கதவு படாரென்று திறந்து கொள்ள புயல் போல் வேகமாக உள்ளே நுழைந்தாள் செந்தூரா..

அவளின் அதிரடி பார்த்து பார்த்தி மிரண்டு விழிக்க நேராக வந்தவள் நீரனின் அருகே உள்ள இருக்கையில் கால் மேல் கால் போட்டு நீலாம்பரி ஸ்டைலில் அமர்ந்து பார்த்தியை பார்த்தாள்.. “என்ன இந்த பொண்ணு குறுகுறுன்னு பாக்குது..இந்த பயலும் வாய தொறக்க மாட்றான்.. என்ன ஆக போதோ”மனதிற்குள் தனக்கு தானே பேசி கொண்டிருந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த தன் கணவனின் மீது பார்வையை ஒரு நொடிக்கும் மேலாக பதித்திருந்தவள் அவன் அசையாமல் நேராக பார்ப்பதை கண்டு கோபத்துடன் பார்த்தியை பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்தாள்..

“என்ன வக்கீல் சார் என்ற புருஷன் ஏதோ சுவரசியமா சொல்லிட்டு இருக்காரு போல”

“ச்சே அப்டிலாம் இல்லம்மா.. சும்மா இந்த பக்கமா வந்தானாம்..  அதான் என்னைய பாத்து பேசிட்டு போலாம்னு வந்தான்.. நீ எப்டிம்மா அவன் இங்கதான் இருக்கானு கரெக்டா கண்டு பிடிச்சு வந்த..”

“கழுத கெட்டா குட்டி சுவரு.. இதெல்லாம் ஒரு விஷயமாக்கும்.. ஆமா உள்ளாற வரும்போது இந்த டிவோர்ஸ் எல்லாம் வேணாம்னு ஏதோ பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு.ஆருக்கு இப்ப டிவோர்ஸ் வேணுமாம்.. என்ற புருசனுக்கா?”

“ஐயோ என்னம்மா இப்டி கேக்குற.. கல்யாணம் ஆயி ஒரு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள டிவோர்ஸா..”அவர் பம்முவதை கண்டு கடுப்பான நீரன்

“ண்ணே எதுக்கு பம்முறிங்க.. ஆமா டிவோர்ஸ் அப்லே பண்ண தான் இங்க வந்தேன்னு சொல்லுங்க”..

“ஓ அப்ப அந்த கேஸ நீங்க தான் எடுக்குறதா இருக்கீங்களா ம்ம்ம்”

“அப்டி இல்லம்மா..”

“ண்ணே என்னண்ணே நீங்க இவ கிட்ட போயி பயந்துகிட்டு இருக்கீங்க.. மேடம்க்கு நா பெரிய துரோகம் பண்ணிப் புட்டேன்.. அதனால அவங்க என்ற கூட வாழ மாட்டாங்க.. எதுக்கு புடிக்காத இந்த வாழ்க்க..முடிச்சு வுட ஏற்பாடு பண்ணுங்க”

“ஏற்பாடு பண்ணிருவீங்களா ம்ம்ம்”செந்தூரா மேஜையை ஒரு தட்டு தட்டி பார்த்தியை முறைக்க நீரனோ

“ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்றேன்ல கேக்கல”அவன் பங்கிற்கு அவன் ஒரு தட்டு மேஜையில் தட்ட ஏற்கனவே கால் ஆடிகொண்டிருந்த மேஜை படக்கென்று ஒரு பக்கம் நொண்டியாடியது..பார்த்தியின் உக்கிர பார்வையை இருவருமே கண்டுகொள்ளவில்லை..மேஜை ஒரு பக்கம் கால் உடைத்து கொண்டதை கூட பொருட்படுத்தாமல் இருவரும் மாறி மாறி வாதிட பார்த்திக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இறுதியில் நீரன் உறுதியாக அவன் பிடியில் நிற்க பார்த்தி பரிதாபகரமாக செந்தூராவை பார்த்து விட்டு

“தோ பாரும்மா உன்ற புருஷன் தான் மொத இங்க வந்தான்.. அவன் பேச்ச தான் நா கேக்க முடியும்.. நா லாயரா இல்ல பீரோ ட்ரோயரா ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்க..எனக்கு மட்டும் ஆசயா புருஷன் பொண்டாட்டிய பிரிச்சு வுட.. இது என்ற வேலம்மா எது பேசுறதா இருந்தாலும் நோட்டீஸ் வந்ததும் உன்ற லாயர கூட்டிட்டிடு கோர்ட்ல வந்து பேசு..இப்ப கெளம்பு”..பார்த்தி காண்டாகி சூடாகி பேச செந்தூரா நீரனை ஒரு பார்வை பார்த்து விட்டு வில்லத்தனமான சிரிப்பு ஒன்றை சிந்தினாள்.இந்த சிரிப்பிற்கு மற்றவர்களுக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கலாம் ஆனால் நீரனுக்கு நன்றாக தெரியுமே..

அவன் கேள்வியாய் பார்த்து கொண்டிருக்கும் போதே திமு திமுவென நாளைந்து தடி மாடுகள் முரட்டு ஆட்களாய் உள்ளே நுழைய அதில் ஒருவன் பார்த்தியின் மேஜையில் அருவாளை ஓரே போடு.. செந்தூரா நீரன் இந்த பக்கம் அமர்ந்திருக்க பார்த்தி அந்த பக்கம் அமர்ந்திருக்க இடையே அருவாள் இவர்களை பார்த்து சிரித்தது.நல்ல வேலை பார்த்தியின் குடும்பமே வெளியூருக்கு சென்றயிருக்க இந்த சம்பவம் நடந்தேரியது..

“ஏய் என்னடி ரௌடிசம் பண்ணிட்டு இருக்க..”

“ஸ்ஸ்ஸ் ஏன் கத்துறிங்க.. லாயர் சார் சொல்லட்டும்.. இனி இந்த கேஸ எடுப்பாரு ம்ம்”

“இல்லம்மா இல்ல எடுக்கவே மாட்டேன்.. எம்மா நா புள்ள குட்டி இருக்கறவன் ம்மா.. நீரா என்ற ராசா ஏதா இருந்தாலும் பாப்பா சொல்றத கேட்டு சூதானமா நடந்துக்கோ.. சின்ன புள்ள தனமா நடந்துக்க கூடாது ஓகே.. போயா போ வீட்டுக்கு போயி ரெண்டு பேரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க”.. செந்தூரா நீரனின் மேல்சட்டை பாக்கெட்டில் இருந்த அவனின் ரெய்பன் நீல நிற கூலிங் கிளாஸை எடுத்து தான் அணிந்து கொண்டவள் எழுந்து நின்று

“என்ன உன்ற வாழ்க்கையில சேத்துக்குறது வரைக்கும் தா நீரா உன்ற இஷ்டம்.. உன்ற வாழ்க்கய விட்டு விலகறது என்ற இஷ்டம்..என்ன நடந்தாலும் சரி என்ற டார்சர தாங்கிட்டு என்கூட குடும்பம் நடத்துற வழிய பாரு.. அத விட்டு புட்டு இப்டி கழிசடை லாயர் கிட்டலாம் வந்து என்ன அத்து விட பாத்த லாயர் தல வேற முண்டம் வேறா கெடப்பான் புரியுதா.. ஹான்”நீரனிடம் தொடங்கி பார்த்தியிடம் முடித்து விட்டு அவள் வெளியேற மேஜையில் சொருகியிருந்த அருவாளை உருவி கொண்டு அந்த கூட்டம் வெளியேறியது..

“ண்ணே அது வந்து”

“வேணா சாமி.. நீ ஒன்னும் சொல்ல வேணா.. நீரா உங்களுக்குள்ள என்ன நடந்துச்சுனு எனக்கு தெரியாது. ஆனா அந்த பொண்ணு உன்ன வெறித்தனமா லவ் பண்ணுது. உனக்காக அது என்ன வேணும்னாலும் செய்யும் போல.. ஏதா இருந்தாலும் பேசுங்க..நல்லதோ கெட்டதோ பேசி ஒரு முடிவுக்கு வாங்க..”பார்த்தி கையெடுத்து கும்பிடாத குறையாக மன்றாடி நீரனை கிளப்பி விட்டார்.நீரனுக்கு கண்மண் தெரியாத கோபம்.. நேராக தன் வீட்டிற்கு

“செந்தூரா ஹேய் எங்கடி இருக்க..செந்தூரா”..அவனின் சத்தம் கேட்டு சாதாரணமாக சமையலறையில் இருந்து வெளியே வந்தாள் செந்தூரா..

“ஏனுங்க மாமா.. என்னாச்சுன்னு இப்டி சத்தம் போடுறீங்க.. நா பதறியடிச்சு ஓடியாறேன் தெரியுமா”நக்கலாக அவள் சொல்ல அவளின் கழுத்தில் கைவைத்து அழுத்தி அப்படியே நடத்தி சென்று சுவற்றில் சாய்த்து கையை கழுத்தில் இருந்து நீக்காமல் அலேக்காக தூக்க அவளுக்கு மூச்சு முட்டியது..இருந்தும் வைரக்கியமாக அவனை முறைத்து கொண்டு அப்படியே மூச்சை தம் பிடித்தபடி இருந்தாள்.

“அவ்ளோ ஏத்தமாடி உனக்கு.. என்ன நெஞ்சு தகிரியம் இருந்தா இப்டி பண்ணிருப்ப.. அந்த லாயரு என்ன நெனச்சிருப்பாரு.. எவ்ளோ பழக்கம் தெரியுமாடி அந்தாளு..அவன் என்ன பத்தி கேவலமா நெனச்சிருக்க மாட்டான்..ரவுடியாடி நீயு.. ஆளுங்கள கூட்டிட்டு வந்து ச்சே குடும்ப பொம்பள மாரியாடி நீ நடந்துக்குற பஜாரி..”அவளின் கண்கள் சொருக ஆரம்பிக்க அவளை கீழே இறக்கி விட்டு தன் நெஞ்சில் சாய்த்து முதுகை தடவி ஆசுவாச படுத்தினான்.அவளுக்கு கழுத்து சிவந்து லேசாக வீங்கி இருந்தது.. கழுத்தில் தன் உதடுகளை பொறுத்தி மெல்லமாக முத்தமிட்டு அவளை சமாதானம் படுத்தினான்..

“அடுத்த ஷாட்டுக்கு அடி போடுறியா நீரா”என அவள் குரல் கேட்க அவளை உதறி தள்ளியவன்

“என்னடி பழிவாங்குறியா..உன்ற பழிவாங்குற லட்ச்சனம் தான் எனக்கு தெரியுமே.. அப்றம் எதுக்குடி இந்த வேண்டாத வேல..உனக்கு என்ற கூட வாழ இஷ்டம் இல்ல.. டிவோர்ஸ் பண்ணலாம்னு பாத்தா அதுக்கும் விட மாட்ற.. என்னதான் வேணும் உனக்கு”

“நீ தான் வேணும்..நீ என்ன விட்டு போக கூடாது நீரா.. போகவும் விட மாட்டேன்.. அதுக்குன்னு நீ செஞ்ச தப்புக்கு தண்டன கொடுக்காம என்னால இருக்க முடியாது. என்கூட உன்ன வெச்சிகிட்டே தண்டன கொடுப்பேன்.. நீ ஆருடி எனக்கு தண்டன கொடுக்கன்னு நெனைக்காத. என்ற வாழ்க்கய உன்ற சுயநழுதுக்காக பணயம் வெச்சல அதுக்கு.. என்ன விட்டு போலாம்னு நெனைக்காத நீரா..அது இந்த ஜென்மத்துல நடக்காது..நா செத்தாலும் அதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி உன்ன கொன்னுட்டு தான் சாவேன்..புரியுதா.. கை கால் கழுவிட்டு வா சாப்பிடலாம்”..நீரன் செந்தூராவை கண்டு பிரமித்து நின்றான்.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்