சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 19


கண்மூடி தனமான காதலின் உச்சத்தில் இருந்தாள் செந்தூரா.. சிறுவயதில் இருந்தே தாயின் அரவணைப்புடன் கூடிய கண்டிப்பு இல்லாமல் தந்தையின் கண்மூடித்தனமான அன்பை மட்டுமே கண்டவள் செந்தூரா.அவள் எள் என்னும் முன் எண்ணெயாக நின்றார்கள் அனைவரும். அப்பாவில் ஆரம்பித்து தாய் மாமன் அந்த வீட்டு நாய் குட்டி சேவல்கள் மாடுகள் உள்பட எல்லாமே அவளின் விருப்பபடி இருக்க அவளுக்கு அவள் ஒரு பெண் என்ற உணர்வே இல்லாமல் இருந்தது.பிறப்பால் பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆணை போல வளர்க்கபட்டவள் செந்தூரா.

அவள் பருவம் எய்திய போதும் கூட மாதவிடாயின் போது பயங்கரமான வலி வரும்.. அதை கூட யாரிடமும் கூறாமல் அந்த வலியை மறைத்து எப்பொழுதும் போல் இயல்பாக இருப்பாள். அவளுக்கு வலிகள் என்றால் ரொம்பவே பிடிக்கும்.சிறுவயதில் தன் கையை தானே ப்ளேட்டில் கீறி காயப்படுத்தி அந்த காயத்தின் வலியை உள்வாங்கி அந்த வலியின் தாக்கத்தை அனுபவிப்பாள். நாளைடைவில் ப்ளேட்டில் வெட்டினாலும் வலியே தெரியாத அளவு அவளுக்கு காயம் மறுத்து விடும்.இப்படி தனக்கு தானே வலியை கொடுத்து அந்த வலியே மறுத்து போகும் அளவுக்கு தன் உடலை தயார் படுத்தி வைத்திருந்தாள்.அவளுக்கு இருந்த இந்த விசித்திர பழக்கத்தை தந்தையும் தாய்மாமனும் கவனிக்க தவறி விட்டனர்.அவள் வளர வளர அந்த பழக்கம் ஓரளவு குறைந்து வந்ததே தவிர முற்றாக மறைந்து போகவில்லை.அவளை முதன்முதலில் சிலிர்க்க வைத்தது நீரனின் தொடுகை. வெட்கம் என்பதை அறியாதவள் முகம் சிவக்க தொடங்கியது அவனின் பார்வையை கண்டே.

அடங்காத அரேபியன் குதிரை மாதிரி நிமிர்ந்து கொண்டு நடப்பவளின் தேகம் நீரனை கண்டால் மட்டுமே சற்று அடக்கமாக நிலம் பார்த்து நடந்தது.அவனின் தொடுக்கையில் உடல் குழைந்தாள். அவனின் குரலில் இனிமையை கண்டாள். அவனின் பார்வையில் உள்ளம் உருகி நின்றாள். அவனின் தீண்டளில் பெண்மை மலர்ந்து சிவந்தாள். அவனின் கோபத்தில் இவள் எரிமலையானாள். அவனின் கண்ணீரில் இவள் கரைந்தாள். இப்படி அவளின் உடலில் உள்ள ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு செல்லிலும் நீரனே நிறைந்திருந்தான்.அவள் இதயத்தை உடலில் இருந்து தனியாக பிய்த்து எடுத்தாலும் கூட அது நீரனுக்காக மட்டுமே சில வினாடிகள் துடிக்கும்.என்னதான் அவனை வெறித்தனமாக காதலித்தாலும் அவளது இயல்பு குணமான முரட்டு குணம் அவளை நிம்மதியாக இருக்க விடவில்லை..

அந்த குணம்தான் நீரன் செய்த தப்பிற்கு அவளை தண்டனை தர சொல்லி தூண்டியது. ஏற்கனவே ஒரு தடவை அவனை துப்பாக்கியால் சுட்டாள். இம்முறை அவன் செய்த தப்பிற்கு அவளையே காயப்படுத்த தயாராகி விட்டாள். வக்கீலின் வீட்டிற்குச் சென்று வந்து விட்டு சமையல் வேலையை கவனித்தவள் இருவருக்கும் உணவு பரிமாறி உண்டு முடித்ததும் (இல்லை அவன் உண்ணவே முடியாமல் கத்தி கதறியது வேறு கதை) நீரன் காட்டு கத்து கத்த அதை பொருட்படுத்தாமல் அனைத்தையும் சுத்தப்படுத்தி விட்டு தனது அறைக்கு சென்று கதவை மூடிகொண்டாள்.கதவிற்கு வெளியே

“ஹேய் செந்தூரா என்னடி நா பேசி கிட்டு இருக்கேன் மட்டு மருவாத இல்லாம கதவ சாத்திப்புட்ட.. ஒழுங்கா தொரடி கதவு. இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாவணும் எனக்கு.. உன்ற மனசுல என்னடி நெனைசிட்டு இருக்க.. உன்ற இஷ்டத்துக்கு ஆட்டிட்டு இருக்க. நா தப்பு செஞ்சேன் ஒத்துக்குறேன். அதுக்கு மன்னிப்பு கேட்டேன் நீ மன்னிக்கல. சரி அது உன்ற சொந்த விஷயம்..என்ன விட்டு எங்கேயோ போறேன்னு சொன்ன. அதெல்லாம் வேணா கொஞ்சம் இரு ஒரேடியா டிவோர்ஸ் தரேன் கையோடு வாங்கிட்டு உன்ற அப்பன் வூட்டுக்குப் போன்னு சொன்ன அதையும் வேணான்னு ஆடுற..இப்ப குழம்புல அப்டி காரத்த போட்டு வெச்சிருக்க.என்னடி நெனச்சிட்டு இருக்க”கதவை எட்டி மிதித்தான். தாள் போடாமல் இருந்திருப்பாள் போல கதவு படக்கென்று திறந்து கொண்டது..

அவளை ஆளை காணாமல் உள்ளே சென்றான்..கதவிற்கு பின்னால் மறைந்திருந்தவள் அவனை முதுகு பக்கமாக அணைக்க அவளின் வேகத்தால் நீரன் தடுமாறி கட்டிலில் விழுந்தான். அப்பொழுதும் அவன் முதுகை விடாமல் இறுக்கமாக பிடித்திருந்தவளை

“ஹேய் மேல இருந்து எந்திரிடி..ரவுடி ஆட்டமா ஆடுற.. பொம்பளையாடி நீயு.. சீ எந்திரிடி மூச்சு விட முடில. ஹேய் எந்திரிடி”..அவள் எழாமல் அவன் பின்னங்கழுத்தில் இதழ் உரச நீரனுக்குள் மின்சாரம் பாய்ந்தது. இருந்தும் அவள் மேல் உள்ள கடுப்பில் அவளை கீழே தள்ள முயற்சிக்க அவளின் இதழ்கள் இப்பொழுது அவனது செவியை தீண்ட அவனின் பாடு திண்டாடமானது. அவளுக்கே உரிதான மனமும் அவளின் தீண்டலும் அவனை மெல்லமாக மயக்க அவன் முதுகை விட்டு நகர்ந்து நீரனை திரும்பி படுக்க சொன்னவள் அவனது இதழ்களில் முத்தமிட்டு அவனை பித்தம் கொள்ள செய்தாள். கைகளோ எதையோ தீவிரமாக செய்து கொண்டிருந்தது. முத்தமிட்டு அவன் ஆண்மையை கிளர்ந்தெள செய்தவள் அவனை விட்டு சட்டென விலகினாள்.

“என்னாச்சுடி”என்றவன் எழுந்து நின்றவளை பார்த்து அவனும் எழ அவனது கையில் விலங்கு பூட்டப்பட்டிருந்தது. நீரனின் மயக்கம் பறந்தோடி விட

“ஹேய் என்னடி ஹெண்ட் கஃப்லாம் வெச்சிருக்க.. எதுக்குடி என்ன லாக் பண்ணிருக்க. வெளாடாத செந்தூரா லாக்க தொறந்து விடு”.. அவனை விட்டு சற்று தள்ளி நின்று கொண்டாள்.

“என்னைக்காவது உன்ன இதுல லாக் பண்ணி நீ அப்பா ஆக போறேன்னு சொல்லலாம்னு வாங்கி வெச்சேன். ஆனா அதுக்கு முன்னாடியே இது யூஸ் ஆகுது”

“எது அப்பா ஆறத இதுல லாக் பண்ணிட்டு சொல்லுவியா”

“ம்ம்ம் சப்ரிஸ்ஸா இருக்கும்ல”.. நீரனுக்கு நல்ல வேளை அப்படி ஒரு இன்ப அதிர்ச்சி அவள் தரவில்லையென்று சிறிது மகிழ்ச்சியாக இருந்தது.

“நீரா நீ எதுக்கு இன்னைக்கு இப்டி பண்ண.. எனக்கு ஆரு தப்பு செஞ்சாலும் அவங்களுக்கு தண்டன கொடுக்குற வர மனசே தாங்காது. அப்டியிருக்க உண்மய மறச்சதுக்கே நா இன்னும் உனக்கு தண்டன தரல.. அதுக்குள்ள நீ வக்கீல் வூட்டுக்கு போயி இன்னும் என்ன கடுப்பாக்கிட்ட..”

“செந்தூரா பைத்தியமாடி நீயு.. என்ன தண்டனையா இருந்தாலும் லாக்க அவுத்துட்டு கொடு. வாங்கிக்குறேன். இப்டி கைய கட்டி வெச்சு அடிக்காதடி அது உனக்கு தா அசிங்கம்.. அம்புட்டு தா சொல்லுவேன்”

“உன்ன அடிக்குறதா.. நீ மொத வாங்குனதுக்கே பிஞ்சி போயி நிக்குற. இதுல இன்னும் அடிச்சா செத்தே போயிருவ நீரா.. இப்ப தண்டன என்னவோ உனக்கு தான் கொடுக்க போறேன் ஆனா வலிய நா அனுபவிக்க போறேன்”..மர்ம புன்னகை ஒன்றை சிந்தி விட்டு அவள் அறையிலிருந்து வெளியேறினாள்.செந்தூரா செந்தூரா என்று அந்த வீடே இடியும் வண்ணம் கத்திக் கொண்டிருந்தான் நீரன். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவளின் கையிலிருந்த ஒன்றைக் கண்டதும் நீரனுக்கு தொண்டை காய்ந்து போனது.

“வேணா டி சொன்னா கேளு இப்டி பண்ணாத செந்தூரா..வலிக்கும்டி.. இதுக்கு பேசாம என்ன வெட்டி கூட போடுடி ப்ளீஸ்ம்மா இப்டி பண்ணாத”நீரனின் மன்றாடலை அவள் கேட்கவே இல்லை. மேலாடையை கழற்றி அவன் முகத்தில் வீசி விட்டு உள்ளாடையையும் நீக்கி அவளது அழகான வலது மார்பகத்தில் சூட்டு கோளை வைத்து அழுத்தினாள் செந்தூரா. வலியில் அவள் துடிக்கிறாளோ இல்லையோ நீரன் கத்திய கத்தலை கேட்டு அக்கம் பக்கம் எல்லாமே அவன் வீட்டின் முன் கூடி விட்டது..உதட்டை கடித்து வலியை பொறுத்து கொண்டவள் வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்டு மேலாடையை மட்டும் அணிந்து அதற்கு மேல் துப்பட்டா போட்டு கொண்டு வெளியே போனாள்.. கதவை திறந்தவள்

“ஏன் இத்தன மணிக்கு எம்ம வூட்டு கதவ தட்டிட்டு இருக்கீங்க..உங்களுக்கெல்லாம் இங்கிதமே கெடையாதா.. புதுசா கல்யாணம் கட்டிக்கிட்டவாங்க.. சின்னஞ் சிறுசு. கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. இதெல்லாம் கூடவா உங்களுக்கு ஒரு ஆளு சொல்லணும்.. அர்த்த ராத்திரியில கதவு தட்டுறமே அதுங்க எந்த கோலத்துல வந்து கதவ தொரக்கும்னு தெரிய வேணா..”

“ஏம்மா கண்ணு எதுக்கு தாயி இப்டி வல்லுன்னு எரிஞ்சு விழுற.. நீரன் தம்பி எதுக்கோ கத்துனுச்சே என்னவோ ஏதேனோ பதறியடிச்சு தான் கதவ தட்டிப்புட்டோம். அதுக்கு என்ன தாயி மட்டு மறுவாதி இல்லாம பேசிப்புட்ட. நாங்களும் கல்யாணம் கட்டி பாய் தலகாணி கண்டவாங்க தான்.. பாத்து பேசு கண்ணு”

“ஆர பாத்து பேசணும் கிட்ட வாங்கய்யா நல்லா பாத்து பேசுறேன்”.. அவளின் முகத்தில் கடுகடுப்பு அங்கிருந்த அனைவருக்கும் பீதியை கிளப்ப கூட்டம் முணுமுணுத்து கொண்டே கலைந்து போனது.

“அட சின்னஞ் சிறுசு அப்டி இப்டி தான் இருக்கும்.. நா கூட அப்ப அப்டிதான்.. நா கடிச்சு என்ற பொண்டாட்டி கத்துவா அப்போ.. இப்ப இந்த புள்ள கடிச்சு நீரன் தம்பி கத்துது போல..”

“சரிதான் என்னவோ ஏதோனு வந்து இந்த புள்ள கிட்ட வாங்கி கட்டுனது தா மிச்சம். அப்பவே அமுத்திட்டு படுங்கையானு சொன்னேன்.ஒரு பைய கேட்டிங்களாய்யா”

“அதான்ப்பா உறக்கம் கேட்டு பேச்சு வாங்குனது தான் மிச்சம்” ஆளாளுக்கு வாய்க்கு வந்த மாதிரி பேசிக் கொண்டு செல்ல காஞ்சனா மட்டும் ஒரு மாதிரி செந்தூராவை பார்த்துக்கொண்டே தன் வீட்டிற்குள் சென்றார். கதவை அடைத்து விட்டு மீண்டும் நீரனின் முன் வந்து நின்றாள் செந்தூரா. அவன் வெளியே கேட்கும் குரல்களைக் கேட்டுக் கொண்டு தன் கையை விடுவிக்க போராடிக் கொண்டிருந்தான். ஒரு கையில் விலங்கு பூட்டி மறுப்புறம் அதை கட்டிலின் கட்டையில் மாட்டிருந்தாள். தேக்கு மரக்கட்டில் அவ்வளவு சீக்கிரத்தில் உடைய மறுத்தது.அவனின் முயற்சியை பார்த்துக்கொண்டே சட்டையை கழட்டி வீசியவள் சூடு வைத்த தனது மார்பை கண்ணாடியில் பார்த்தாள்.. சின்ன சின்ன காயங்களை தன் உடலில் ஏற்படுத்தி அந்த வலிக்கு தன் உடலை பழகியவளுக்கு இந்த வலி பெரும் வேதனையை தந்தது.

சூடு வைத்த இடம் பயங்கரமாக எரிந்தது. அந்த எரிச்சலை தாங்கிக்கொண்டு ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு நீரனின் முன்பு அமர்ந்து விட்டாள்.அவன் விதவிதமாக கெஞ்சிப் பார்த்தான் கதறி பார்த்தான் இறுதியில் அவன் தான் கண்ணீர் விட்டு கையெடுத்து அவளை கும்பிட்டு கெஞ்சினான். அவள் அவனின் கெஞ்சல்களையும் கதறல்களையும் பார்த்துக்கொண்டு கல் போல் அமர்ந்திருந்தாள்.. அவளைப் பார்க்கவே அவனுக்கு பயமாக இருந்தது. அவளுக்கு மனரீதியான பிரச்சனை இருக்கிறது என்று அவன் நினைத்தான்.

“என்ன நீரா என்ன பைத்தியம்னு நெனைக்குறியா.. இல்ல..நா வேணாம்னு நீ விட்டு போனா உன்ன கொன்றுவேன்னு சொன்னேன். அதெல்லாம் சும்மா ஒன்ன பயம் கொடுக்க சொன்னது.. உனக்கு என்ன பிடிக்காம போயிருந்தா சத்தியமா சொல்றேன் உன்ன தொந்தரவு பண்ணிருக்கவே மாட்டேன்..நீ உன்ற பொண்டாட்டி கூட சந்தோஷமா இருக்குறதை பார்த்து நான் சந்தோஷப்பட்டிருபேன். ஆனா உனக்கு என்ன புடிச்சிருக்கு.. ரொம்பவே பிடிச்சிருக்கு. அதனால தான் டிவோர்ஸ் வர போன. உயிருக்கு உயிரா காதலிச்சு அந்த காதல வெளியே சொல்லாம என்ன பிளாக்மெயில் பண்ணி கட்டிகிட்ட. அப்படி இருந்தும் உன்ற தப்புக்கு பிராயச்சிதம் செய்யறதா நெனச்சு என்ன இன்னும் கஷ்டப்படுத்திருக்க நீரா.. ஏன் என்ன புரிஞ்சிக்க மாட்ற. உன்ன அடிக்க எனக்கு மனசு வரல. இனி டிவோர்ஸ் அப்டினு கனவுல கூட நீ நெனைக்க கூடாது. புரியுதா அதுக்கு தான் இந்த தண்டன.. என்ற உசுரே நீதான் நீரா.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ”அதன் பிறகு அவள் எதுவுமே பேசவில்லை.

நீரன் இரவு முழுவதும் அவளுடன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.. அமர்ந்த இடத்திலிருந்து அவனின் கெஞ்சலை நிதானமாக கேட்டுக் கொண்டிருந்தாள்..விடிந்தே விட்டது. அதன் பிறகு சாவியை தூக்கி அவனிடம் போட்டாள். விருவிருவென தன் கை விலங்கை கழட்டியவன் செந்தூராவை நெருங்கி அவள் மார்பு தழும்பில் ஊதி விட்டான். அந்த தழும்பு பார்க்கவே கொடூரமாக இருக்க

“ஏன்டி இப்டி பண்ண”.. கோபமாக பேச தான் முயன்றான் ஆனால் முடியவில்லை. வார்த்தைகள் அழுகையுடன் வெளியே வந்தது.

“வலிக்குது நீரா”இதான் அவள் இறுதியாக பேசிய வார்த்தை அத்தோடு மயங்கி விட்டாள். அவனுக்கு என்ன செய்வதென்று புரியாமல் மேலாடையை எடுத்து போட்டு விட்டு அவளை தூக்கி கொண்டு காரில் கடத்தி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ந்தான்.வரும் வழியில் ராசுவிற்கு அழைத்து உடனே மருத்துவமனைக்கு வரச் சொன்னான்.

“மச்சான் என்னடா ஆச்சு”சுவரில் சாய்ந்து நின்ற நண்பனைக் கண்டதும் ராசுவிற்கு மனம் தாங்கவில்லை..

“உள்ள ட்ரீட்மெண்ட் போது மச்சான்.. அவ இப்படி செய்வானு நெனச்சே பாக்கல.”நீரன் நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க ராசு பேயறைந்தது போல நின்று விட்டான்.. இப்படியும் ஒரு பெண் நடந்து கொள்ள முடியுமா. அவள் உண்மையில் பெண் தானா இல்லை அவளுக்குள் ஏதாவது ஒரு பேய் இறங்கி விட்டதா.. ஏற்கனவே அவளைக் கண்டால் குலை நடுங்கும் ராசுவிற்கு அவளது மறுபக்கம் தெரிந்ததும் அவன் மயங்கி விழுந்து அவனுக்கு இரண்டு பாட்டில் டிரிப்ஸ் ஏறியது..இவர்களை மருத்துவமனையில் கண்ட யாரோ ஒரு விசுவாசி தில்லைக்கு தகவல் தெரிவிக்க அவர் அடித்து பிடித்து குகனுடன் அங்கே வந்து சேர்ந்தார்.

வந்தவர் அரையும் குறையுமாக விஷயத்தை கேட்டு விட்டு நீரனின் மேல் கேஸ் கொடுத்து அவனை லாக்கப்பில் தள்ளினார்.நீரன் சொல்ல வந்த எதையும் அவர் காது கொடுத்து கேட்கவில்லை. செந்தூரா அளவுக்கு மீறிய மன உளைச்சலினால் கடும் காய்ச்சலில் விழுந்தாள்.சுய நினைவே அவளுக்கு வரவில்லை. ராசு பார்த்திபனின் உதவியோடு காவல் அதிகாரியிடம் பேசி நீரனை வெளியே கொண்டுவர முயற்சிக்க அந்த அதிகாரியோ செந்தூரா கண்விழித்து என்ன நடந்தது என்பதை முழுதாக சொன்னால் மட்டுமே அவனை வெளியே விடுவதாக சொல்லி இவர்களை அடித்து விரட்டாத குறையாக அனுப்பிவிட்டார்.

நீரனுக்கு தான் உள்ளே இருப்பது எல்லாம் ஒரு பொருட்டல்ல. அவனது சிந்தனை முழுவதும் செந்தூரா மட்டுமே நிறைந்திருந்தாள். முதலில் அவள் உடல் தேறி வர வேண்டும். பின்பு அவளை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தான். என்ன நினைத்தாலும் அவனுக்கு ஒன்றே ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது. அவன் இல்லை என்றால் செந்தூரா இருக்க மாட்டாள்.அவளின் வலியும் அவன் தான், அவளின் மருந்து அவன் தான்..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்