சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 21


செந்தூரா மருத்துவமனையில் இருந்த இரண்டு நாளும் தில்லையை அருகில் கூட வர அனுமதிக்கவில்லை.. அவரும் பலத்தடவை வேண்டா வெறுப்பாக நீரனிடன் மன்னிப்பு கேட்டு விட்டார். நீரனே மன்னித்தாலும் செந்தூரா பிடிவாதமாக அவரை மன்னிக்க மறுத்தாள். பெற்ற மகளின் கண்கள் தன் மீது வெறுப்பாக படிவதை பாவம் தில்லையால் தாங்கிட இயலவில்லை.நீரன் அவனது சக்தியை எல்லாம் திரட்டி எவ்வளவோ மன்றாடி பார்த்தான். அவள் பதில் ஏதும் பேசாமல் அவனை முறைத்து பார்க்கவே அந்தப் பார்வையின் தாக்கம் தானாக நீரனை வாய் மூட வைத்தது.

” வளக்க தெரியாம பொட்ட புள்ளைக்கு செல்லம் கொடுத்து வளத்தா இப்டித்தான்..வளத்த கெடா மாருல பாயுது. தில்லைக்கு இது தேவதான்..ஆம்பள கணக்கா குதிச்சுகிட்டு அந்த புள்ள திரியும் போதெல்லாம் நாம போயி சொன்னா நம்மளையே நொட்ட சொல்லி பத்தி விடுவான்.. இப்ப பாரு ஆருக்கு நட்டம்னு கேக்குறேன்”

“ஏன்ப்பா லூசு மாறி கத்திட்டு இருக்க.. ஆருக்கு நட்டமோ இல்லயோ சத்தியமா ஒமக்கு இல்ல..அவன் பொண்டாட்டி அவங்க அப்பாற அடிச்ச அடிய பாத்தியா.. தில்ல பிச்சி போட்ட கோழி மாறி கெடக்காப்புல.. பெத்த அப்பனுக்கே இம்புட்டு அடின்னா நீயெல்லாம் நா சொல்லி தெரிய வேணா..”

“நீ பேசுறத பாத்த நீயே அந்த புள்ள கிட்ட என்ன கோத்து விடுவ போல.. நல்லா என்ற வூட்டு காசுல தின்னு புட்டு கொழுத்து போயி திரியுறல இப்டிதான்டா பெத்த அப்பன மறுவாதி இல்லாம பேச சொல்லும்”

“உனக்கு பொறந்தா உன்ற வூட்ல தான் திங்க முடியும்..”

“டேய்”

“ப்பா அவன் கெடக்கான்.. நீங்க மொத வூட்டுக்கு போங்க.. நாளைக்கி பேரு வெட்டிருவாங்கலாம்.. வீட்டுக்கு வந்துருவோம்”

“சரிப்பா நீரா.. நீ மொத சத்தான ஆகாரம் சாப்புடுய்யா.. அந்த அடங்காப்பிடாரிய கட்டுனாலும் கட்டுன ஆளு இளச்சு போய்ட்ட.. கன்னம் கின்னமெல்லாம் ஒட்டி ஓன்னு இருக்க.. அம்மா கிட்ட சொல்லி ஆட்டு சூப்பு வெச்சு கொடுத்தனப்புறேன் சாப்டு”

“அதெல்லாம் வேணாப்பா நாளைக்கு வூட்டுக்கு வந்தோன பாத்துக்கலாம்.. ஏன் வீணா அலைச்சல் உங்களுக்கு.. ராசு நீயும் அப்பாரு கூடவே போ..இங்கன நா இருந்துக்குறேன்”

“எப்படி மச்சான் பாத்துக்குவியா”

“நா பாத்துக்குவேன் மச்சான்.. நீ கெளம்பு நீங்க கெளம்புங்கப்பா”ராசு சீமதுரை இருவரையும் மூட்டை கட்டி அனுப்பி விட்டு செந்தூராவின் கட்டிலின் அருகே தலைவைத்து சாய்ந்து விட்டான் நீரன். மறுநாள் அவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான். அரசல் புரசளாக ஊருக்குள் விஷயம் கசிந்து அது பத்தாக திரித்து ஆளாளுக்கு ஒரு கதையை கொண்டு வந்தனர்.

இது எதையும் காதில் வாங்காத நீரன் செந்தூராவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான்.  அவளுமே தான் செய்த காரியத்தின் வீரியம் எவ்வளவு பெரிதென உணர்ந்து கொண்டு தனது தேள் கொடுக்கான நாவை சற்று அடக்கி வைத்தாள். இருந்தாலுமே அவ்வப்போது அவளின் பிறவிக் குணம் வெளியே வந்து அவனை வாட செய்யும்.. கால் தடுக்கி அவள் கீழே விழும் சமயம் அவன் தாங்கிப் பிடித்தால் எனக்கு இப்போ மூட் இல்லை என்று சொல்லி அவனை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினாள்.

குளிக்க செல்லும் போது இவளே துண்டை மறந்து வைத்துவிட்டு அவனிடம் எடுத்து வர சொல்லுவாள். அவன் எடுத்து வந்து கதவைத் தட்டி அவளிடம் கொடுக்கும்போது தெரியாத்தனமாக அவளை ஸ்பரிசத்தால் அப்படியே உள்ளே வந்து என்னை கட்டிப் பிடிக்கணும் போல இருக்குமே என்று சொல்லால் அவனை சுழற்றி எடுத்தாள்.

இரவு உறங்கும் போது கொடூரமாக இருந்தது நீரனுக்கு. அவளின் அருகே படுத்தால் “என்ற பக்கத்துல படுக்காத.. பொறவு உனக்கு மூடு வரும்.. எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க இஷ்டம் இல்ல”அப்படியென்று கூறுவாள்.. எதுக்குடா வம்பு என்று கீழே பாய் போட்டு படுத்தால் “ஜமீன் அய்யாவுக்கு என்ற பக்கத்துல படுக்க கூட கசக்குதோ..ஒரே நாளு ராவுல நா போர் அடிச்சு போய்ட்டேன்ல”என்பாள்..

அவளின் இம்சை தாங்க முடியாமல் ஹாலில் சென்று படுத்தால்”என் மூஞ்ச பாக்க கூட புடிக்கல இல்ல.. ஏன் ஹால்ல படுக்கணும் போயி தெருவுல படுக்க வேண்டிதானே”.. நீரனுக்கு மண்டை காய்ந்தது..பிடிக்காத மருமகள் கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டான் நீரன்.

அந்த சூட்டு சம்பவத்திற்கு பிறகு அவளின் முரட்டு தனம் குறைந்து விட்டது.. வீட்டை அழகாய் நிர்வகித்தாள்.மா மரங்களுக்கு என்ன விதமான ஊட்டச்சத்து தரக்கூடிய உரங்களை போடலாம் என அவளது நண்பனான இயற்கை ஆய்வாளன் படித்த ஒருவனுடன் கலந்தாலோசித்து அவனின் ஆலோசனைப்படி மா மரங்களுக்கு நீரன் வழக்கமாக போடக்கூடிய உரங்களை போடாமல் வேறு உரங்களை வாங்கி போட்டாள்.

தென்னை மரங்களுக்கும் அதே வழியை பின்பற்றினாள். வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் எல்லாம் இன்டர்நெட்டில் சாபத்தைப் பற்றி தேடித்தேடி படித்தாள். சாபத்தை மையமாகக் கொண்டு வெளிவந்த புத்தகங்களை வாங்கி வந்து வீட்டை நிரப்பினாள். எந்த சாபத்தை நீரன் ஒதுக்கி வைத்து அவளது ஆரோக்கியத்தை முதலில் தேற்ற முடிவு செய்தானோ அதே சாபத்தை தனது ஆரோக்கியத்தை பின்னால் தள்ளிவிட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்தாள் செந்தூரா.

அவள் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு மாதங்களில் நீரனின் கண் அசைவை வைத்து அவளின் தேவைகளை கவனித்தாள்..அவனுக்கு அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தாள். அவளின் இந்த செயலை கண்டு நீரனே குற்றவுணர்ச்சியில் துடிக்க ஆரம்பித்தான்.. தில்லை மகளிடம் மன்றாடி இறுதியில் அவருக்கு இரண்டாவது அட்டாக் வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி கேட்க அதன் பிறகே தந்தையை காணச் சென்றால் செந்தூரா..

“என்னடா கண்ணு அப்பா கிட்ட பேசாம இருக்க முடியும்னு காட்டி புட்டியேம்மா”

“டேடி நீங்க என்ற நீரன உள்ள தள்ளுனதுக்கு தான் நா தண்டன கொடுத்தேன். எனக்கு மட்டும் ஆசையா என்ன.. உங்க கூட பேசாம நான் இருந்திருவேனா.. இனிமே என்ன நடந்தாலும் சரி நான் சொல்லாம எதயும் செய்யாதீங்க டேடி”மகள் பேசியதிலேயே அடைத்த நெஞ்சு சரியாகி வீட்டிற்கு வந்துவிட்டார் தில்லை.

செந்தூராவை பொறுத்த வரை எல்லாமே சுமூகமாக சென்று கொண்டிருந்தது.பாவம் நீரன் தான் தினம் செத்து பிழைத்தான். அவள் மருத்துவமனையில் இருந்து வந்த இரண்டாவது நாள் மனோதத்துவ நிபுணரிடம் அவளை அழைத்துச் சென்றான் நீரன். உண்மையைக் கூறி அழைத்துச் சென்றால் எங்கே அவள் ஆடி விடுவாள் என பயந்து பொய் சொல்லி அவளை அங்கே அழைத்துச் சென்றான். அங்கே சென்ற பின்பு அவள் அவனை பார்த்து”நீ என்ற கிட்ட பொய் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்கேன்.. அப்டியிருந்தும் சொல்லிருக்க.. இதுக்கு என்ன தண்டன தெரியுமா”

பெரிய நீதிபதி தண்டனை தருகிறாள் என மனதிற்குள் மட்டுமே அவளை கழுவி ஊற்றியவன்”உண்மைய சொன்னா நீ அப்படியே கிலு கிலுன்னு வந்துருவ பாரு..இதெல்லாம் உன்னோட நல்லதுக்கு தான்.நான் சொன்னா கேட்பதான..என்ற மேல நம்பிக்க இருந்தா மூடிக்கிட்டு ஒட்காரு.. இல்லன்னா வா வூட்டுக்கு போலாம்”அவள் ஆடாமல் அசையாமல் அதைவிட முக்கியமாக வாயை திறக்காமல் அமர்ந்துவிட்டாள்.

மருத்துவர் அவளிடம் தனிப்பட்ட முறையாக பேசிவிட்டு”நீரன் அவங்க மனரீதியா ரொம்பவே பாதிக்கப்பட்ருக்காங்க..அதனால தான் சின்ன சின்ன விசயத்துக்கு கூட பெருசா ரியாக்ட் பண்றாங்க.. அவங்கள அவங்களே செல்ப் டார்ச்சர் பண்றது.. தான் எந்த தப்பும் செய்யாத மாறி அடுத்தவங்களும் இருக்கணும்னு எதிர்பார்க்கிறது.. அதிலும் அவங்களுக்கு நெருக்கமானவங்க கண்டிப்பாக அவங்க நினைக்கிற மாதிரி இருந்தே ஆகணும்.. அப்படி இல்லாத பட்சத்தில அவங்க செய்யற சின்ன தப்புக்கு கூட தண்டன கொடுத்தா மட்டும் தான் இவங்க மனசு சாந்தி அடையும்..”

“டாக்டர் நீங்க என்னென்னமோ சொல்றீங்க, நீங்க சொல்றதெல்லாம் பாக்கும்போது என் வயித்துல புளியக் கரைக்குது தயவு செஞ்சு பளிச்சுனு இதான் பிரச்சினனு சொல்லுங்கள்..மன ரீதியா பாதிக்க படுகிற அளவுக்கு அவளுக்கு என்ன பிரச்சன.. அவ பாத்தாலே போதும் அஞ்சி மூன்னு அடுக்காக செய்ய ஆளு வரிசையா நிப்பாங்க..அவள பெத்த அப்பால இருந்து அவ வீட்டு நாய்க்குட்டி வரைக்கும் அவ சொல்றபடி தான் கேட்ப்பாங்க.. இப்படி ராணி மாதிரி வாழ்ந்தவளுக்கு அப்படி என்ன மன ரீதியான பிரச்சன வந்துருக்கும்..”

“இப்போதைக்கு என்னால எதயும் தெளிவா சொல்லமுடியாது நீரன்.. இன்னும் ஒரு கவுன்சிலிங்க் போவட்டும்..எல்லாத்தையும் தெளிவா உங்ககிட்ட சொல்றேன். அது வரைக்கும் என்ன செஞ்சாலும் உங்கள எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடுப்பாக்குனாலும் முடிஞ்ச அளவு பொறுமயா இருங்க..”

” முடிஞ்ச அளவா, டாக்டர் அன்னைக்கு நான் உங்க கிட்ட சொன்னேன் தானே அவ என்ன செஞ்சானு.. இதுக்கும் மேல செய்யறதுக்கு என்ன இருக்கு”

“நீரன் உங்களுக்கு உங்க வைப் முக்கியம்னா நான் சொல்றதக் கேளுங்க..அவங்க மனசார நம்பனும் எது நடந்தாலும் அவங்கள விட்டு போக மாட்டிங்கன்னு அவங்களுக்கு புரியும்.. அவங்களோட உள்மனசு அதன் நம்பனும்.. அதுக்காக உங்கள இப்படி டெஸ்ட் பண்ணுவாங்க”

“டாக்டர் டெஸ்ட் பண்ணி பாக்க நா என்ன லேப் எலியா”

“மிஸ்டர் நீரன் நா அப்டி சொல்லல.. ஆனா உங்க வைப் அப்டித்தான் நெனைக்குறாங்க..அடுத்த கவுன்சிலிங்க் இன்னும் ஒரு மந்த் போட்டும் சரியா” தன் பங்கிற்கு மருத்துவரும் நீரனை குழப்பி விட என்னடா வாழ்க்கை என்ற ரீதியில் வெளியே வந்தவன் அங்கே தனக்காக காத்திருந்த மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அன்றிலிருந்து அவளது நடவடிக்கையை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். பல வழிகளில் அவனை கோபப்படுத்தி கடுப்பாகி விரக்தியின் விளிம்பிற்கே தள்ள முயன்று கொண்டிருந்தாள் செந்தூரா..

அதற்கெல்லாம் நீரன் வாயை திறக்காமல் இருந்தாலும் குற்றம். “முன்னாடி எல்லாம் நீ இப்படி இல்லையே” என்ற கேள்வி ஒன்று வந்து விழும்..ஏதாவது வாயை வைத்து சும்மா இல்லாமல் கூறிவிட்டால் “என்ற மேல லவ் இருந்தா இப்டி பேசுவியா..எப்படியும் ஒரு புள்ளைய பெத்து கொடுத்துட்டு சாவ போறவ தானே இவகிட்ட என்ன கொழைச்சல் வேண்டி கெடக்குனு தான நெனைக்குற”.. அதன் பிறகு அவளை கொஞ்சி முத்தமிட்டு சிரிக்கவைத்து ஒருவழியாக சமாதானப்படுத்துவதற்குள் அவனுக்கு பாதி உயிரே சென்றுவிடும்.

மனதால் காதலித்து வேறு வழியில்லாமல் கட்டாய தாலி கட்டினாலும் அவள் மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தான் நீரன். தாம்பத்தியம் என வரும்போது எங்கே அந்த ஆசை காதலியை தானே காயப்படுத்தி விடுவோமோ என்று அஞ்சும் அளவிற்கு அவனை பாடாய் படுத்தி எடுத்தாள் செந்தூரா.. இரவில் அவன் தள்ளி படுத்தால் அவன் நெஞ்சில் படுத்துக்கொண்டு அவனின் இதழில் முத்தமிட்டு அவளே உறவுக்கு முதல் அடியை எடுத்து வைப்பாள்.. அப்படி அவள் முதல் அடியை எடுத்து வைத்து விட்டால் கண்டிப்பாக கட்டாயமாக இவன் அடுத்த அடியை எடுத்து வைத்தே ஆக வேண்டும்.

வேணா நாளைக்கு பாத்துக்கலாம் இம்மாதிரி வார்த்தைகளை அவன் வாய் உதிர்த்து விட்டால் அவ்வளவு தான்”ஏன் நா தான சாவ போறேன் உனக்கு என்ன கேடு.. நல்லா ஜாலியா தான இருக்க போற..”என வார்த்தையால் கொன்றே விடுவாள். ஆசையாய் அணைத்து அனைத்தும் முடிந்தாலோ “நீரா நா செத்துட்டா உனக்கு ஆண்ம இல்லாம போய்டும்ல.. அப்டி ஒருவேள போவாம இருந்தா நீ இன்னொருத்தி கூட கூட்டந்தாடிப்பல்ல.. நல்ல வேள அப்டி ஏதும் நடக்காது.”என்று அவனை குத்துவாள்.

என்னேரமும் நெருப்பின் மீது நடப்பதை போல உணர்ந்தான் நீரன்.. அவளுக்கு அப்படி என்ன மனரீதியான பிரச்சினை இருக்கக்கூடும் என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்து போன அவன் ஒரு கட்டத்தில் குகனை சந்தித்து அவர்களுக்குள் நடந்த சில விஷயங்களை மட்டும் எடுத்துக் கூறினான்.. முதலில் அதிர்ச்சி அடைந்த குகன் பிறகு தன்னுடைய மருமகளின் நல்வாழ்விற்காகவும் தன் மனைவியின் செயல்களுக்கான விடை அறியாமல் குழம்பித் தவிக்கும் நீரனுக்காகவும் அவர் தனக்கு தெரிந்த சில உண்மைகளை அவனிடம் கூறினார்.. அந்த உண்மைகளை கேட்டே பேரதிர்ச்சி அடைந்த நீரன் மறு கவுன்சிலிங்கின் போது மருத்துவர் கூறிய கூற்றை கேட்டு என்ன செய்வதென்றே புரியாமல் அமர்ந்துவிட்டான். காரணம் அவனின் ஆசை மனைவி செந்தூராவிற்கு மனநோய்..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்